குருஷேத்திரம்! அத்தியாயம் 1

குருஷேத்திரம்! அத்தியாயம் 1 அந்திமாலை நேரத்தின் கதிரவனின் பொன்னிறக்கதிர்கள் தழுவிக் கொண்டிருந்ததால், ஆகாயம் முழுவதும் சிகப்பு புரீஷம்வள்ளி மலர்களின் கூட்டங்களுக்கு இடையில் ஆங்காங்கே அதனுடன் மஞ்சள் அல்லிகளையும், பேரரளிப் பூக்களையும் கலந்து தெளித்தது போல், செந்நிறத்தில் மஞ்சள் ஏறி, நிறங்கள் இரண்டும் கலந்து காண்பவரின் கண்களைக் கவர்ந்து நிற்க, வானத்தைத் தொட்டுவிடும் அளவிற்குப் பெருமாளிகைகள் போன்று கட்டிடங்களும், பெரிய கடைகளும், பளபளக்கும் மின் விளக்குகள் சாலைகளின் இருபுறங்களிலும் ஜெகஜோதியாய் ஜொலித்துக் கொண்டிருந்ததில், விழிகளைப் பளிச்பளிச்சென்று தன் விளக்குகளால் தனக்குள் இழுத்துக் கொண்டிருந்ததில், அந்நகரத்தின் வனப்பு அழகாய் வெளிப்பட்டது…. பெருஞ்சாலைகளில் இருந்து சிலந்தி வலையெனச் சிறியனவும், பெரியவனவாகவும் தெருக்களும் சந்துக்களும் பிரிந்துச் சென்று, பார்வையில் விழும் அனைத்து இடங்களையும் நிறைத்து இருக்கும் மக்கள் கூட்டத்தின் இன்பத்தையும், துன்பத்தையும், [...]

Read more...
Loading...