What's new

அத்தியாயம் - 2- 8 .....அன்பே உ(எ)ன்னை உனக்காக .....

saaral

Active member
அத்தியாயம் - 2

ஜெயதி ஆர் ஆர் சொலுஷனில் வேலைக்கு சேர்ந்து அன்றோடு ஒரு மாத காலம் முடிவுபெற்றது . அவளின் வேலை செய்யும் திறன் ,புத்தி கூர்மை அனைத்தையும் கண்ட நிஸ்வந்த் கண்ணனின் சிபாரிசு என்ற கூடுதல் தகுதி இருந்தமையால் தனக்கு நிகரான அனைத்து செயல்பாட்டிற்கான உரிமையும் அவளிற்கு வழங்கிருந்தான் .

யஸ்வந்த்தும் நிஸ்வந்த் யோசிக்காமல் முடிவு எடுக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அவனின் முடிவிற்கு ஒப்புக்கொண்டான். அவனுக்கும் கண்ணனின் சிபாரிசு என்பதே போதுமான தகுதியாக இருந்தது .

ஜெயதி இங்கு ஆர் ஆர் சொலுஷன்னை முழுதாக பார்த்துகொள்ள ஆரம்பித்தபிறகு நிஸ்வந்த் வடமாநிலங்களில் அவர்களின் ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை சம்பந்தமான விஷயங்களை எடுத்து பார்க்க ஆரம்பித்தான் .

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஜெயதியை இதுவரை யஸ்வந்த் பார்த்தது இல்லை . நிஸ்வந்த்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலுவலகம் யஸ்வந்த் அதில் தலையிடமாட்டான் . அதே போல் தான் நிஸ்வந்தும் . ஆனால் தினப்படி நிலவரத்தை பகிர்ந்துகொள்வார்கள் .

நாளை வாரவிடுமுறை சனிக்கிழமை . நிஸ்வந்த் தனது நண்பனும் உடன்பிறப்புமான யஸ்வந்த்தின் வரவிற்காக காத்துக் கொண்டு இருந்தான் . இருவரும் சனிக்கிழமை காலை அன்று ஒரு நட்சத்திர விடுதியில் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டு இருந்தனர் . உடல் முழுக்க ஈரம் சொட்ட சொட்ட ஆஜானுபாகுவான புஜங்களுடன் காட்சி அளித்த இருவரையும் அங்கு இருந்த பெண்களின் பார்வை வட்டமிட்டுக் கொண்டே இருந்தது .

இருவரும் நீந்தி முடித்து மேலே வந்தவுடன் ஒரு நவநாகரிக யுவதி இறுக்கி பிடித்த குட்டியான உடை அணிந்து அவர்களின் அருகில் ஒயிலாக வந்தாள் . "ஹே ஹண்டசம் கேன் வி டேக் ஸெல்ப்பி " இருவரையும் பார்த்து மயக்கும் புன்னகையுடன் கேட்டாள் அவள் .

நிஸ்வந்த் ஒரு இளம் புன்னகையுடன் "சாரி திஸ் இஸ் நோட் மை கப் ஒப் டீ " என்று கூறி நாகரிகமாக நகர்ந்து லவுஞ் நாற்காலியில் சென்று சாய்ந்து அமர்ந்து அருகினில் இருந்த பீரை பருகினான் .

போகும் உடன் பிறப்பை ரகசிய புன்னகையுடன் நோக்கிய யஸ்வந்த் "யா சூர் " என்று கூறி அந்த பெண்ணுடன் புகைபடம் எடுத்து சற்று நேரம் கடலை வறுத்தான் .

யஸ்வந்த்தும் வறுத்தான் வறுத்தான் வறுத்துக்கொண்டே இருந்தான் . யஸ்வந்த் இன்னும் வராததை கண்ட நிஸ்வந்த் தலையை இடமும் வலமுமாக ஆட்டி சிரித்துக் கொண்டான் .

சற்று நேரம் கழித்து நிஸ்வந்தை நோக்கி வந்த யஸ்வந்த் பார்வையை ஒரு இடத்தில் ஆராயும் விதத்தில் செலுத்தினான் . மீண்டும் யஸ்வந்த்தை நிமிர்ந்து பார்த்த நிஸ்வாந்த் அவன் பார்வை சென்ற திக்கை திரும்பி பார்த்தான் . அங்கு ஒரு பெண் அழகான நீள சிகப்பு நிற பாந்தினி ஸ்கிர்ட் அணிந்து வெள்ளை நிற டாப்ஸ் போட்டு வலை போன்ற ஸ்டோல் அணிந்து திரும்பி நடந்து சென்றுகொண்டு இருந்தாள் . அவளின் முதுகில் படர்ந்து விரிந்திருந்த முடியையே பார்க்க முடிந்தது நிஸ்வந்தால் .

யோசனையுடன் மற்றுமொரு லவுஞ்சில் அமர்ந்த யஸ்வந்த் "நிஸ்வந்த் அந்த கேர்ள் அவளை நீ பார்த்தியா ? " மிகுந்த யோசனையுடன் போகும் அந்த பெண்ணை சுட்டிக் காட்டி கேட்டான் .

"இல்லை யாஷு ஐ ஜஸ்ட் காண்ட் சி ஹேர் பேஸ் ...என்னாச்சு தெரிஞ்சவங்களா ? " என்று எதிர் கேள்வி கேட்டான் நிஸ்வந்த் .

"நோ ஹேர் ஐஸ் ...அவ கண்கள் உன்னை பார்த்து ஏதோ சொன்னுச்சு ....எனக்கு அது சரியாக படலை " யோசனையுடன் கூறிய யஸ்வந்த்தை நோக்கி நிஸ்வந்த் "ஹே கம் ஓன் ...சம் கேர்ள் மே பி தெரிஞ்சவங்களா இருக்கலாம் ..அதனால் என்னை பார்த்திருக்கலாம் ...டோன்ட் திங்க் மச் " என்றான் முகத்தில் வரவைத்து புன்னகையுடன் .

நிஸ்வந்த்தின் மனதில் ஒருவேளை அவளாக இருப்பாளோ என்ற கேள்வி அரித்தது 'ச்ச இருக்காது அவள் எப்படி இருந்தாலும் எந்த இடத்தில இருந்து பார்த்தாலும் என்னால் அவளை அடையாளம் காண முடியும் ..யஷ்க்கும் அவளை நன்றாக தெரியும் இது யாரோ தெரிந்தவங்க ' என்று தனக்கு தானே மனதில் சொல்லி தேற்றிக்கொண்டான் .

"வெள் யாஷ் ஹொவ் அபௌட் தட் கேர்ள் ...ரொம்ப நேரம் பேசுன , கருகுற வாசம் இங்க வரைக்கும் வந்துச்சு " என்றான் கேலி போல் .

"ஹே நிஸ்வந்த் ஷி இஸ் ஜஸ்ட் கிரேஸி ..மல்ஹோத்ரா டாட்டர் .. நம்மளை நிறைய இடத்தில் பார்த்திருக்கா ஷி வாஸ் லிட்டரல்லி போலோவிங் அஸ் " என்று கூறி சிரித்தான் யஸ்வந்த் .

பொதுவாக சாதனையாளர்களை , பணக்காரர்களை மற்றும் நடிகர்களை எங்கு கண்டாலும் அவர்களின் பக்கம் தங்களின் பார்வையை வட்டமடிப்பார்கள் மக்கள் . ஆனால் இந்த இரட்டையர்களுக்கோ ஒரே மாதிரி பிறந்ததே ஒரு வித ஈர்ப்பு தான் அதும் இல்லாமல் அழகாக இருந்தார்கள் நடிக்கவில்லை அவ்ளோதான் அதை தவிர இளம் தொழில் அதிபர்கள் இரட்டை சிறுத்தைகள் என்று போற்றப்படும் இவர்களின் பக்கம் கோபியர்களின் பார்வை அதும் பணக்கார பெண்களின் பார்வை பெரிதும் சுற்றும் .

யார் யாரை மணமுடிப்பது , இல்லை யார் இவர்களுக்கு பெண் கொடுத்து சம்பந்தி ஆவது என்ற போட்டி தொழில் வட்டத்தில் இருக்கிறது . இதை தெரிந்தும் தெரியாதவர்கள் போல் கடந்து விடுவார்கள் இருவரும் .

அடுத்தநாளும் இருவரும் மும்பை மாநகரில் பெரும் புள்ளிகள் வந்து செல்லும் பப்பிற்கு வந்து தங்களின் நண்பர்களுடன் கும்மாளமடித்தனர் . நிஸ்வந்த் மது நண்பர்கள் என்று இருந்தான் . யஸ்வந்த்தோ ஆடும் மேடையில் பெண்களுடன் ஆடிக்கொண்டு இருந்தான் ஒரு கையில் மது கோப்பை மறு கையில் தன் மேல் வந்து விழும் பெண்கள் . நிஸ்வந்தும் எதற்கும் குறைந்தவனில்லை ஆனால் ஒருத்தியால் அவள் ஒருத்தியால் !!தனது மொத்த இயல்பையும் தொலைத்து பெண்களை முற்றிலுமாக தவிர்த்தான் .

எதிர்ச்சியாக திரும்பிய யஸ்வந்த் நிஸ்வந்தை நோக்கிய அந்த கண்களின் சொந்தக்காரியை கண்டான் . மீண்டும் அவனின் முகத்தில் யோசனைகளின் அறிகுறி . அந்த பெண்ணை உற்று நோக்க முற்படுகையில் மல்ஹோத்ராவின் மகள் யஸ்வந்த்தின் முகத்தை தன்னை நோக்கி திருப்பினாள் . "ப்ச் " என்ற சலிப்புடன் மீண்டும் அந்த பெண்ணை பார்க்க திரும்புகையில் அவள் அங்கு இல்லை .

மேடையை விட்டு கீழே இறங்கி சுற்றியும் பார்வையை சுழலவிட்டு தேடினான் . அவளை கானவில்லை . 'அவள் பார்வை சொன்ன செய்தி சரி இல்லை ' என்று உள்ளூர எண்ணம் உதித்த அடுத்த நொடி நிஸ்வந்த்திற்கு நிழல் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்தான் .

அனைவரையும் தவிர்த்துவிட்டு யஸ்வந்த் நிஸ்வந்தை கூட்டிக்கொண்டு கிளம்பினான் . காரில் இருவரும் செல்கயில் குழப்பத்துடன் யஸ்வந்த்தை நோக்கிய நிஸ்வந்த் "யாஷ் என்னாச்சு ஏன் இவ்ளோ டென்ஷன் ? " என்றான் .

"நிஷு சம்திங் பிஷி அதே பெண் !! நேத்து பார்த்த அதே பெண் இன்றும் உன்னை பார்த்தாள் ...அவளின் பார்வை நிச்சயம் நல்லதை சொல்லவில்லை ..." என்று குழப்பத்துடன் கூறி அந்த பெண்ணின் முகத்தை மனதில் கொண்டுவந்து இதற்கு முன் எங்கேனும் பார்த்திருக்கிறோமா என்று நெற்றியை வலதுகையின் இருவிரல் கொண்டு நீவிக்கொண்டே யோசித்தான் . ஏதும் பிடிபடவில்லை .

"வாட் யாஷ் எதிர்ச்சியா அந்த பெண் இன்னைக்கும் இங்கு வந்திருக்கலாம் ..டோன்ட் மயின்ட் இட் " என்று கூறிய நிஸ்வந்த் "நீ அவளை இதற்கு முன் பார்த்திருக்கயா ? அவ எப்படி இருந்தா " என்று யஸ்வந்த்தை நோக்கி கேட்டான் .

"ப்ச் அவளை தூரத்தில் இருந்து தான் பார்த்தேன் ஷி வாஸ் எங் ..குட் லுக்கிங் எவ்ளோ யோசித்தும் எங்கயும் பார்த்த நியாபகம் இல்லை " என்றான் குழப்பத்தில் ஸ்டேரிங் வீலை குத்தி .

"சில் எதுக்கு இவ்ளோ டென்ஷன் யாரோ ... எதிர்ச்சியா திரும்ப திரும்ப பார்த்திருப்ப ...மித்த பொண்ணுங்க மாதிரி நம்மளை ஆர்வமா பார்த்திருக்கலாமே ? " மனதில் பட்டதை கேட்டான் நிஸ்வந்த் .

"நோ ஐ க்நொவ் கேர்ள்ஸ் எல்லாரும் நம்ம ரெண்டு பேரையும் ஆர்வமா பார்ப்பாங்க பட் அவ பார்வை சொன்ன செய்தி நிச்சயம் நல்லதா இல்லை ...அண்ட் மோர் ஓவர் அவ உன்னை ..உன்னை மட்டும் தான் பார்த்தா ...!! " என்று கூறி யோசனையில் ஆழ்ந்தான் .

அதே யோசனையுடன் நிழல் பாதுகாப்பை நிஸ்வந்த் அறியாமல் ஏற்பாடு செய்து சென்னை நோக்கி கிளம்பினான் யஸ்வந்த் .

அதன் பிறகு ஆறு மாதகாலம் எந்த வித மாற்றமும் இல்லாமல் சீராக சென்றது . யஸ்வந்த்தே தனது சந்தேகம் தேவையற்றதோ என்று என்னும் வகையில் எந்த வித சம்பவங்களும் நிகழவில்லை . 'ச்ச மே பி நிஸ்வந்த் வாஸ் ரைட் ' என்று அவனே எண்ணிக்கொண்டான் .

இதன் நடுவில் நிஸ்வந்த் இருவாரத்துக்கு ஒருமுறை சென்னை வந்து சென்றான் . வழமைக்கு மாறாக ஏதும் நிகழவில்லை . தொழிலில் ஏறுமுகமே . ராஜ்குமார் ஓய்வாக தனது மனைவியுடன் காலத்தை கழித்தார் . ஆகையால் முழு பொறுப்பும் நிஸ்வந்த் யஸ்வந்த்திடம் வந்து சேர்ந்தது .

ஆறு மாதம் கழித்து ஒரு நாள் நிஸ்வந்த் அவனின் அறையில் மடிக்கணினியில் வேலைகளில் மூழ்கிப் போய் இருந்த சமயம் அவனின் அறைக்கதவு மென்மையாக இருமுறை தட்டப்பட்டது .

சிலருக்கு மட்டுமே தனது அறைக்கு வர அனுமதி உண்டு அதும் முக்கிய வேலை இல்லையேல் எவரும் உள்ளே வரமாட்டார்கள் என்பதை அறிந்த நிஸ்வந்த் எதாவது முக்கியமான விஷயமாக இருக்கும் என்று நினைத்து
" எஸ் கம் இன் " என்றான் தனது கம்பீரமான ஆளுமை நிறைந்த குரலில் .

உள்ளே வந்தாள் ஜெயதி "குட் மோர்னிங் நிஸ்வந்த் " என்றாள் . அது பன்னாட்டு நிறுவனங்களின் நாகரிகம் எவரையும் சார் என்றோ மேடம் என்றோ குறிப்பிட மாட்டார்கள் .

"குட் மோர்னிங் மிஸ் ஜெயதி " என்றான் . அவனின் பார்வை மடிக்கணினியில் தான் இருந்தது .

"உங்க மெயில் செக் பண்ணிட்டிங்களா ? " என்று கேட்டாள் அவள் .

"என்ன மெயில் " என்று ஒரு நொடி புருவங்கள் சுருக்கி யோசித்தவன் "ஒஹ் அந்த xxxxx கம்பெனி டீடெயில்ஸ் ஹா! பாத்துட்டு சொல்றேன் " என்று கூறி பேச்சை கத்தரித்தான் . அதன் உள் அர்த்தம் அவ்ளோதான் நீ போகலாம் என்பதே .

இருந்தும் ஜெயதி நகராமல் அங்கேயே நிர்ப்பதை உணர்ந்த நிஸ்வந்த் நிமிர்ந்து நேராக அமர்ந்து தனது வலது கையின் இரு விரல் கொண்டு தாடையை முட்டுக் கொடுத்து அவளை ஆழமாக பார்த்தான் . அவனின் பார்வை 'என்ன ' என்னும் விதமாய் இருந்தது .

அதை உணர்ந்த அவள் " ஆம் ரிசைனிங் " என்றாள் நிமிர்வாக .

"வாட் " என்று அதிர்ந்து எழுந்து தனது முழு உயரத்துக்கு நிமிர்ந்து நின்றான் . நிச்சயம் பாதி பெண்கள் அதில் நடுங்கி விடுவார்கள் . ஆனால் ஜெயதியை போன்ற பல பெண்கள் நிமிர்ந்து நின்று பதில் கொடுப்பார்கள் .

அவனின் அதிர்விற்கும் காரணம் உண்டு . தனக்கு நிகராக அலுவலக ரகசியம் அனைத்தும் அறிந்த ஒருத்தி என்றால் அது அவள் தான் .

"எஸ் ஐ ஹாவ் டு ...ஈவென் மிஸ்டர் கண்ணன் அவருக்கும் சொல்லிவிட்டேன் . ஒன் மந்த் நோட்டீஸ் பீரியட் தென் ஐ வில் கெட் ரிலீவ்ட் " என்று கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தாள் .

"ஷிட் " என்று தனது ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் தனக்கு முன் இருந்த மேஜை மீது காட்டினான் நிஸ்வந்த் . கண்ணன் சொல்லிற்காக முக்கிய பொறுப்பில் அமர்த்திய தனது மடமையை எண்ணி நொந்துக் கொண்டான் .

வழமை போல் நிஸ்வந்த்தின் விரல்கள் தானாக யஸ்வந்த்தை அழைத்து "யா நிஷு என்ன ஒர்கிங் ஹௌர்ல கூப்பிட்டிருக்க ? " என்றான் கேள்வியாக .

"யாஷ் ஜெயதி இஸ் ரிசைனிங் " எடுத்தவுடன் தனது ஆதங்கத்தை கூறினான் .

"வாட் ஷி ஹாஸ் ஜோய்ன்ட் ஜஸ்ட் சிக்ஸ் மந்த் பிபோர் ... இஸ் ஷி கிரேஸி " என்றான் அவனும் அதிர்வுடன் .

"யாஷ் இப்ப பிரச்சனை என்னனா அவளுக்கு இங்க எல்லாம் தெரியும் " என்றான் நிஸ்வந்த் இயலாமையுடன் .

"ஹே ரொம்ப யோசிக்காத கண்ணன் அண்ணா செலெக்ஷன் சோ ஷி மயிட் ஹாவ் பர்சனல் ரீசன்ஸ் ... ஏதும் தப்பா நடக்காது " என்றான் நம்பிக்கையுடன் .

நிஸ்வந்தும் கண்ணன் எப்பொழுதும் ஒருவரின் பின்புலன் அறியாமல் ஒரு விஷத்தை எடுத்து செய்யமாட்டான் என்பதை உணர்ந்து தன்னை சமாதானப் படுத்திக்கொண்டான் .

ஆனால் அந்த இரட்டையர்கள் தங்களை தாக்க போகும் புயலை பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இல்லை .


அத்தியாயம் - 3

ஜெயதி அந்த நிறுவனத்தில் இருந்து விடைபெற்று ஒரு வார காலம் முடிந்து இருந்த நிலையில் ஆர் ஆர் சொலுஷணிற்கு வர இருந்த ஒரு ப்ராஜெக்ட் புதிதாக சில மாத காலம் முன் தொடங்கப்பட்ட எ ஜே சொலுஷனிற்கு கைமாறியது .

நிஸ்வந்த் பொறுப்பெடுத்து திறம்பட தொழில் செய்த இத்துணை ஆண்டுகளில் இது தான் அவனின் இரண்டாம் அடி . முதல் அடி பெரிதாக பாதிக்கும் முன் அந்த நிறுவனத்தை விளையாட்டுத்தனமாக கைப்பற்றினான் . அதன் விளைவுகள் ... அந்த தொழில் சறுக்கலைத் தாண்டி வந்தாலும் அதனால் ஏற்பட்ட தாக்கம் , பாதிப்பு என்றேனும் மறையுமோ ?? காலம் தான் பதில் சொல்லவேண்டும் .

நிஸ்வந்தும் யஸ்வந்த்தும் அதை பற்றி தங்களுக்குள் விவாதித்துக் கொண்டு இருக்கையில் யஸ்வந்த் கூறியது "நிஷு கடந்த சில மாதமா ஜெயதி இருந்தாங்க .. சோ அவங்க இல்லாத இந்த சமயம் மொத்த வேலை பலுவின் காரணமாக உன்னால் இதில் கவனம் செலுத்த முடியவில்லை . டோன்ட் கண்பியூஸ் .... இது சின்ன ப்ராஜெக்ட் பாத்துக்கலாம் " என்று நிஸ்வந்தை தேற்றினான் .

"ஆனாலும் யாஷ் ஜெயதி ரொம்ப டாலெண்டெட் ...திடிர்னு வேலைக்கு வந்தாங்க திடிர்னு போய்ட்டாங்க ... கண்ணன் அண்ணா எதுக்கு சேர்த்தாங்க ? ... அவங்க போகிறதா சொன்னப்பவும் ஏன் எதையும் என்கிட்ட சொல்லல ? " நிஸ்வந்த்தின் மனதில் குழப்பத்துடன் அரித்த கேள்விகள் வெளிவந்தன .

"விடு நிஷு .... அதான் ஏதோ பர்சனல் ரீசன் சொல்ராங்கலே .... கண்ணன் அண்ணா சொல்லக்கூடிய விஷயமா இருந்தா சொலிர்ப்பாங்க மே பி ஹேர் சிச்சுவேஷன் ...!! கண்ணன் அண்ணாவை கேள்வி கேட்டா அது நம்ம அண்ணாவை நாமளே கீழ இறக்கிறமாதிரி ஆகாதா ... உன்னோட ஸ்ட்ரெஸ் கொறையனும் இனி உன் ஆபீஸ்க்கு நான் அப்ப அப்ப வரேன் ... வி கேன் ஷேர் ஓவர் ஒர்க் ...அங்க பெரியப்பா டெஸ்ட்டைல் பிசினெஸ் கொஞ்ச நாள் பார்த்துப்பாங்க நான் பேசுறேன் " என்று எளிதாக தீர்வை கண்டுபிடித்தான் யஸ்வந்த் .

நிஸ்வந்தும் ஏதும் கூறவில்லை . அவன் தான் சில ஆண்டுகாலமாக ஒரு வித மன அழுத்தத்துலயே இருக்கிறானே இருந்தும் தொழிலில் வல்லவனாகவே திகழ்ந்தான் . தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரனின் மனதை அறியாதவனா யஸ்வந்த் ...புரிந்துகொண்டு வேலைப்பளுவை பங்குபோட தயாராக இருந்தான் . அவர்கள் அறியவில்லை வல்லவனுக்கெல்லாம் வல்லவன் ஒருவன் இருப்பான் என்பதை ..

யஸ்வந்த் நிஸ்வந்த் இருவரும் சேர்ந்து ஆர் ஆர் சொலுஷன் , ஆர் ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் , ஆர் ஆர் டெஸ்ட்டைல் ரீடைல் ஸ்டோர் என்று அனைத்தையும் ஒன்றாகவே பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர் . நிஸ்வந்த்தின் மன உளைச்சல் கண்ட யஸ்வந்த் தனது இருப்பிடத்தை மும்பைக்கு மாற்றிவிட்டான் .

ராகினி தனது மனக்கவலையை இருவரிடமும் கொட்டி தீர்த்தாள் "ஏன்டா இத்தனை நாள் நிஷு தான் இங்க வராம மும்பைலயே இருந்தான் ... இப்ப நீயும் அவனோட சேர்ந்துட்டியா ! ... முன்னாடிலாம் என்னை பார்க்காம இருக்க மாட்டீங்க என்னைக்கு தனியா தொழில் ஆரம்பிச்சீங்களோ அன்னைக்கு இருந்து ரெண்டு பெரும் சரி இல்லை ... மாமா நீங்களும் ஏன் எதையும் கண்டுக்காம இருக்கீங்க ? " தனது மகன்களிடம் ஆரம்பித்து தனது அக்காவின் கணவர் ராஜ்குமாரிடம் முடித்தாள் தாய் அவள் .

"ராகினி விடு மா அங்க ஏதோ ப்ராஜெக்ட் இஸ்ஸுன்னு சொல்ரான் ...போகட்டும் இங்க சவுத் இந்தியா டெஸ்ட்டைல் ஸ்டோர்ஸ் நான் பார்த்துகிறேன் ... முடிலயா சஷ்டி பிரவீன் இருக்காங்க .. " என்று நிதானமாக கூறினார் ராஜ்குமார் .

கண்ணன் தனது தந்தையிடம் எதையும் மறைத்தது இல்லை . விட்டு பிடிப்போம் ஏதோ தொடர் வெற்றி ,வயதின் கோளாறு, பணம், நட்பு என்று எல்லாம் சேர்ந்து தவறான பாதையில் செல்கிறார்கள் என்று எண்ணினார் ராஜ்குமார் . பிரவீன் ராகினி இருவருமே மிகுந்த பாசமான அப்பா அம்மா ... அவர்களின் கவனத்திற்கு வராமல் இருக்கும் நிஸ்வந்த் யஸ்வந்த்தின் லீலைகள் ஒருவேளை அவர்களின் முன் கடைபரப்பப்பட்டால் நிலைமை என்னாகும் ?

நிஸ்வந்த் யஸ்வந்த் இருவரும் சேர்ந்து ஒன்றாக தொழில் பார்க்க ஆரம்பித்து இந்த இருமாத காலத்தில் ஆர் ஆர் சொலுஷனில் மட்டும் தொடர் சரிவு . அவர்களின் நிறுவனத்திற்கு வர இருந்த ப்ராஜெக்ட் அனைத்தும் சொல்லி வைத்தார் போல் ஒரே நிறுவனத்திற்கு சென்றது . யஸ்வந்த்துமே அதில் குழம்பித்தான் போனான் .

நிஸ்வந்த் முற்றிலுமாக உடைந்தான் . யஸ்வந்த் முன் வந்து நிஸ்வந்தை கட்டுமான தொழிலை பார்க்க சொல்லி ஆர் ஆர் சொலுஷனை முழுதாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான் . அதில் ஒரு ப்ராஜெக்ட் சம்மந்தம்மாக அமெரிக்கா செல்ல வேண்டி வந்ததால் நிஸ்வந்த்திற்கு ஆயிரம் பத்திரம் சொல்லி அமெரிக்கா கிளம்பினான் .

இங்கு நிஸ்வந்த் கட்டுமானத்தொழிலை மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொண்டான் . அமெரிக்கா சென்ற யஸ்வந்த் அந்த ப்ராஜெக்ட் கைகூடி வர இருந்த கடைசி நிமிடத்தில் எ ஜே சொலுஷனிற்கு சென்றதை தாங்கமுடியாமல் மிகுந்த கோபம் கொண்டான் . முதல் வேலையாக நாடு திரும்பியவுடன் அந்த நிறுவனத்தின் உரிமையாளரை சந்திக்க வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டான் . அவன் விசாரித்த வரையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திருமதி லீலாவதி அமெரிக்கா வாழ் இந்தியர் ... ஆனால் அந்த நிறுவனத்தில் முடிவு எடுப்பது அவரின் புதல்விகள் . என்ன முயன்றும் அவர்கள் இருவரை பற்றி யஸ்வந்த்தால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை அதிலும் ஒரு பெண் இந்தியாவில் இருக்கிறாள் என்பதை அறிவான் யஸ்வந்த் .

அமெரிக்காவில் முன்பெல்லாம் தானும் நிஸ்வந்தும் சேர்ந்து சுத்தும் நாட்களை நினைத்து ஏங்கியது . முன்பெல்லாம் இருவரும் வருவது வழக்கம் ...என்று ஒரு பெண்ணின் வருகை நிஸ்வந்த்தின் மனதை பாதித்ததோ அன்றில் இருந்து யஸ்வந்த் மட்டுமே தொழில் சம்மந்தம்மாக வந்தால் மேலும் கூடுதலாக இருநாட்கள் இருந்து உல்லாசமாக கழித்துவிட்டு செல்வான் .

அப்படி இரு நாட்களாக உல்லாசமாக இருக்க நினைத்த சமயம் அவனின் அறையில் அமர்ந்து மடிக்கணினியை திறந்து பார்த்த நொடி மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினான் . எவ்வாறு இது சாத்தியம் ?

இங்கு நிஸ்வந்த் தனது அலுவலக அறையில் குறுக்கும் நெடுக்கும் கோபத்துடன் நடந்துக்கொண்டு இருந்தான் . ஆர் ஆர் சொலுஷனின் பங்கு பங்குச்சந்தையில் மிகுந்த சரிவை தொட்டு இருந்தது . மேலும் அவர்களின் கட்டுமான தொழிலும் சரிவு ஆரம்பித்து இருந்தது . அனைத்தும் சொல்லி வைத்தார் போல் எ ஜே சொலுஷன் மற்றும் எ ஜே கன்ஸ்டருக்ஷனிடம் கைமாறியது . மிகவும் குறுகிய காலத்தில் எ ஜே குழும பங்குகள் உச்சத்திற்கு வந்தது .

இந்த கையறு நிலையில் தன்னுடன் ஒட்டி பிறந்த சகோதரனின் அருகாமைக்காக ஏங்கியது நிஸ்வந்த்தின் மனது . அதேநேரம் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் அமர்ந்து பங்கு சந்தை சரிவை கண்ட யஸ்வந்த் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாட்டை பார்த்துக்கொண்டு இருந்தான் .

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பணத்தை தண்ணியாக செலவு செய்ய அணைத்து விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ள நகரம் . அந்த நகரத்தின் விமான நிலையம் வந்தடைந்த யஸ்வந்த் தனது சகோதரனுக்கு அழைத்தான் . "நிஷு என்ன நடக்குது எப்படி ஷேர்ஸ் இவ்ளோ டவுன் ஆச்சு " யஸ்வந்த்தின் எந்த கேள்விக்கும் நிஸ்வந்திடம் பதில் இல்லை . அவனின் அமைதி தாங்க முடியாமல் "நிஷு டோன்ட் ஒர்ரி ... நான் கிளம்பிட்டேன் " என்று ஆரம்பித்து தனது பயனவிவரத்தை பகிர்ந்து கொண்டான் யஸ்வந்த் .

யஸ்வந்த் நாடு திரும்பி இருந்த இந்த இரண்டு நாளில் அவர்களின் கட்டுமானத்தொழில் நடக்கும் கட்டிடங்களில் தரம் இல்லாத பொருட்களை பயன்படுத்துவதாக கூறி மேலும் இரு ப்ராஜெக்ட் அவர்கள் கை நழுவிச் சென்றது .

"எ ஜே குரூப் ஒப் கம்பனிஸ் சிஈஓவை பார்க்க ஏற்பாடு பண்ணுங்க " என்று யஸ்வந்த் தனது செகரெட்டரியிடம் கூறிக்கொண்டு இருந்தான் .

"சூர் சார் " என்று கூறி அவர் நகர்ந்தார் .

"யாஷ் என்ன நடக்குதுனே தெர்ல கண்ண கட்டி காட்ல விட்ட மாதிரி இருக்கு எப்படி எல்லாம் அந்த நிறுவனத்துக்கே கைமாறுது ..இஸ் இட் எ ட்ராப் ? " என்று குழப்பத்துடன் கேட்டான் நிஸ்வந்த் .

"யா இட்சீம்ஸ் லைக் ட்ராப் போர் யூ " என்றான் நிதானமாக .

"வாட் ?? " மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானான் நிஸ்வந்த் .

"புரிலயா ... ஆர் ஆர் சொலுஷன் உன் கீழ இருந்தப்ப ஆரம்பிச்ச இந்த ட்ராப் நீ கான்ஸ்டருக்ஷன் கம்பனிக்கு போகவும் உன்னை விடாமல் துரத்துது " என்று நிறுத்தி நிதானமா ஆழ்ந்த குரலில் கூறினான் யஸ்வந்த் .

"பட் எதுக்கு ...ஒய் ஷுட் தே ட்ராப் மீ " குழப்பத்துடன் கேட்டான் நிஸ்வந்த் .

" மயிட் பி ...இட் மே பி ஹெர் " யஸ்வந்த் ஒற்றை புருவத்தை தூக்கி நிஸ்வந்தை நேராக பார்த்து கூறினான் .

"என்ன சொல்ற ...எப்படி அவளா இருக்க முடியும் நான் அவளை இந்த மூணு வருசத்துல தேடாத நாள் இல்லை ... அவளோட அம்மா அண்ணா எல்லாரும் இறந்துட்டாங்க அந்த விபத்துல யாரும் உயிர் தப்பலைனு கேள்விப்பட்டேன் ... " நிஸ்வந்த்தின் அதிர்ச்சி இன்னும் அவனை விட்டு மீளவில்லை .

"நான் ஒரு யூகத்தில் சொன்னேன் நிஷு ... ஸ்டில் அவங்க உடல் மட்டும் கண்டுபிடிக்க முடில ரைட் !!...இது உனக்கு வச்ச ட்ராப் எ ஜே குரூப்ஸ் டெசிஷன் மேக்கர் இஸ் எ எங் லேடி எல்லாம் சேர்த்து யோசிச்சா ... ?சோ ஜஸ்ட் கெஸ் ... " தனது மனதில் உதித்த சந்தேகத்தை கோர்வையாக பகிர்ந்துகொண்டான் யஸ்வந்த் .

"நிஜமாவா யாஷ் ... நான் இம்மீடியட்டா எ ஜே குரூப்ஸ் சிஈஓவை பார்க்கணும் ... " குரலில் மிகுந்த பரபரப்புடன் கேட்டான் நிஸ்வந்த் .

"நிஷு இட்ஸ் ஜஸ்ட் கெஸ் ... காம் டோவ்ன் ...மிகுந்த நம்பிக்கையான ஆட்களை தவிர்த்து அவங்க அடையாளத்தை யாருக்கும் காமிச்சது இல்லை ... லெட்ஸ் வெயிட் " என்று தனக்கும் சேர்த்து பொறுமையாக இருக்குமாறு கூறிக்கொண்டான் யஸ்வந்த் .

அன்று இரவு தொழில் முறை பார்ட்டிக்காக தாஜ் ஹோட்டலில் மும்பை மாநகரில் ஒரு நெடிய ஹால் பதிவு செய்யப்பட்டு இருந்தது . அந்த பார்ட்டி கொடுப்பது மல்ஹோத்ரா சிறந்த தொழில் அதிபர்... அவரின் மகள் யஸ்வந்த் நிஸ்வந்த்தின் அழகில் மயங்கி அவர்களின் பின் சுற்றுகிறாள் .

அந்த பார்ட்டி ஹாலில் அனைவரும் தங்களின் நட்புகளுடன் பேசிக்கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருந்தனர் . பெண்மணிகள் தங்களின் பணம் பெருமை அழகு அனைத்தையும் முன் நிறுத்தும் விதமாக அழகான உடைகளில் விலை உயர்ந்த நகைகள் போட்டு அழகு பதுமைகளாக வளம் வந்தனர் .

நிஸ்வந்த் அங்கு இருந்த பார் கவுண்டரில் அமர்ந்து மூக்கு முட்ட குடித்துக் கொண்டு இருந்தான் . யஸ்வந்த் கோபியர்கள் நடுவில் கண்ணனாக பெண்களின் நடுவில் கையில் மது கோப்பையுடன் பேசிக்கொண்டு இருந்தான் . மல்ஹோத்ராவின் மகளின் பார்வை தன் மீது ஆர்வமாக படிவதை உணர்ந்த யஸ்வந்த் அவளுடன் இழைந்தான் .

என்னதான் பெண்களின் நடுவில் தனது லீலைகளை அரங்கேற்றிக் கொண்டு இருந்தாலும் நிஸ்வந்த்தின் மீது தனது பார்வையை நொடிக்கு ஒரு முறை செலுத்திக்கொண்டே இருந்தான் . அப்பொழுது யஸ்வந்த்தின் கண்ணில் பட்டாள் அவள் . அழகான சிகப்பு நிற கல்வைத்து வேலைப்பாடு செய்து இருந்த சேலையில் மிதமான ஒப்பனையில் தோலை தாண்டி தொங்கிய முடியை நேர்த்தியாக விரித்துவிட்டு மிகுந்த செழிப்பான தோரணையுடன் நிஸ்வந்தை நெருங்கிய அவள் .

யோசனையுடன் அந்த அவளை பார்த்துக்கொண்டு இருந்த யஸ்வந்த் புரிந்துகொண்டான் . முன்பு பலமுறை நிஸ்வந்தை வன்மத்துடன் பார்த்த அவள் தான் இவள் என்று . நிஸ்வந்தை நெருங்கிய அந்த பெண் அவன் முன் எள்ளலான ஒரு சிரிப்பை படர விட்டு நின்றாள் . அவளை பார்த்ததும் "ஹே நீயா இப்ப எங்க வேலை பாக்கற ? " என்று குளறலுடன் கேட்ட நிஸ்வந்தை ஏளனமாக பார்த்துவிட்டு வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள் .

யஸ்வந்த் வருவதற்குள் அவள் சென்று விட்டாள் . " ச்ச " என்று சளித்துக் கொண்டான் யஸ்வந்த் . "யாஷ் " என்று எழுந்து நிற்கமுடியாமல் தள்ளாட்டத்துடன் விழ இருந்த நிஸ்வந்த்தை தாங்கி பிடித்த யஸ்வந்த் "நிஷு உஹ் இஸ் ஷீ ? " என்றான் கேள்வியாக .

"யாரு யாஷ் " என்றான் தள்ளாட்டத்துடன் . 'ச்ச இவன்கிட்ட கேட்டு பயன் இல்லை ஆளு மட்டை ' என்று எண்ணிய யாஸ்வந்த் நிஸ்வந்துடன் தங்களின் குடியிருப்புக்கு வந்தான் . யஸ்வந்த்தின் மனதில் 'அவள் யாராக இருப்பாள் ? அந்த பார்வை ஏன் அவ்ளோ வன்மத்துடன் நிஸ்வந்தை பார்த்துச்சு ... எனக்கு தெரியாம நிஷு வாழ்க்கையில் இவள் எப்படி ? ' என்று பல கேள்விகளுடன் அடுத்து வர இருக்கும் நாட்களை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருந்தான் .
அத்தியாயம் - 4

ஒரு வாரம் களித்து மும்பை மாநகரத்தில் இன்பினிட்டி வணிக வளாகத்தில் இருக்கும் ப்ஹுட் கோர்ட்டில் யஸ்வந்த் தனக்கு முன் ஒரு காபி கோப்பையுடன் கையில் அலைபேசியை நோண்டிக் கொண்டு நிஸ்வந்த்தின் வரவிற்காக காத்துக் கொண்டு இருந்தான் . அப்பொழுது தூரத்தில் "அம்மா " என்ற ஒரு மழலையின் தமிழ் விழிப்பு அவனின் கவனத்தை கவர்ந்தது .நிமிர்ந்து அந்த பெண் குழந்தையை பார்த்தான் . 'ஒரு இரண்டு வயது இருக்குமா ?' அழகாக கொலு கொலு என்று துரு துரு என்று இருந்தாள் . யாருக்கோ போக்கு காட்டி தனது பிஞ்சு கால்கள் கொண்டு ஓடிக்கொண்டு இருந்தாள் . அவனின் முகத்தில் ஒரு புன்னகை அவனையும் அறியாமல் அவனின் கால்கள் அந்த குழந்தையை நோக்கி முன்னேற துடித்தது . இதைத்தான் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று முன்னோர்கள் சொல்லி சென்றனரோ ....!!அப்பொழுது வேகமாக ஒரு பெண் அவனை கடந்து ஓடிச் சென்றாள் . நேராக அந்த பெண் சென்று குழந்தையை தூக்கிக் கொண்டாள் . குழந்தையோ "அம்மா " என்று கைதட்டி குதூகலித்தது . "ஹே பப்பு குட்டிமா அம்மா விட்டுட்டு இப்படி நீங்க ஓடலாமா ....பாட்டி பாருங்க உங்க மாதிரி ஓட முடியாம நிக்கிறாங்க " என்று குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டு இருந்தாள் .அந்த குழந்தை அம்மா என்று அழைத்தவளை நிமிர்ந்து பார்த்தவுடன் மின்சாரம் தாக்கியது போல் சமைந்து நின்றான் யஸ்வந்த் . 'இவள் இந்த பாப்பாக்கு அம்மாவா ? ' என்று யோசிக்கலானான் மேலும் 'இவள் அன்று பார்த்தவள் தானே ' என்று எண்ணினான் . . அவளோ லெவிஸ் ஜீன்ஸ் பாண்ட் அணிந்து பெண்கள் அணியும் கருப்பில் வெள்ளை கட்டம் போட்ட அழகான டாப்ஸ் அணிந்து முடியை விரித்து போட்டு இருந்தாள் . நிச்சயம் அவளை ஒரு குழந்தையின் அம்மா என்றால் எவரும் நம்பமாட்டார்கள் .யஸ்வந்த்தின் பார்வை அந்த பெண்ணை ஆழ்ந்து பார்த்துக்கொண்டு இருக்கையிலே அந்த பெண் தனது குழந்தையுடன் கொஞ்சுவதை நிறுத்திவிட்டு ஒரு இடத்தை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள் . அவள் பார்வையில் தெரிந்தது என்ன கோபம் , ஆற்றாமை , வெறுப்பு அவனால் அந்த பார்வையின் அர்த்தத்தை கணிக்க முடியவில்லை .அவள் பார்வை சென்ற திக்கை திரும்பி பார்த்த அவன் அதிர்ச்சியுற்றான் . காரணம் அவள் பார்த்துக்கொண்டு இருந்தது நிஸ்வந்தை . நிஸ்வந்த் தனது சகோதரனை தேடி வந்தான் . அவன் அவளை கவனிக்கவில்லை . அந்த பெண்ணின் பார்வை ,நிஸ்வந்த்தின் மேற்பார்வையில் இருக்கும் நிறுவனத்தின் பங்குச் சரிவு ,அனைத்து ப்ரொஜெக்ட்டும் சொல்லி வைத்தார் போல் ஒரே நிறுவனத்திற்கு கைமாறுவது என்று எல்லாத்தையும் சேர்த்து நினைத்த யஸ்வந்த் ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தான் .கண்ணை திறந்து பார்க்கையில் நிஸ்வந்த் இவன் அருகில் வந்துகொண்டு இருந்தான் . அவள் ....அவள் அவன் கண்களுக்கு தென்படவில்லை . ஒரு முடிவு தனக்குள் எடுத்துக்கொண்டு அடுத்தகட்ட வேலைகளை பார்க்க கிளம்பினான் யஸ்வந்த் ."ஹாய் யாஷ் " என்று கூறிக்கொண்டே வந்த நிஸ்வந்த் அவனின் யோசனையான முகம்கண்டு "என்னாச்சு யாஷ் ஏன் இவ்ளோ யோசனை ? " என்று கேட்டான் .

"நிஷு அந்த எ ஜே சொலுஷன் சார்மான் உடனான மீட்டிங் புக் ஆயிடுச்சா ? " என்று புருவத்தின் நடுவில் முடிச்சுடன் கேட்டான் .

"இல்ல யாஷ் அவங்க நம்மகூட மீட்டிங் அக்ஸப்ட் பண்ண மாட்டீங்கிறாங்க ... சம்திங் பிஷி " என்றான் யோசனையுடன் .

"ஓகே நிஷு வி ஹவ் லோட் ஒப் ஒர்க் ... பஸ்ட் எப்படி எல்லா கான்ட்ராக்ட்டும் சரியா எ ஜே குரூப் ஒப் கம்பனிஸ்க்கு போகுதுனு தெரியணும் .. தென் எதுக்கு உன்னை டார்கெட் பண்ணனும் ... இஸ் இட் ஹேர் இல்லைனா வேற யாரு என்பதை கண்டுபிடிக்கணும் அதுக்கான காரணத்தையும் தெரிஞ்சுக்கணும் " யஸ்வந்த் ஒரு தீவிரத்துடன் சொல்லிக்கொண்டு இருந்தான் .

நிஸ்வந்த் எதற்காக இவன் இவ்ளோ தீவிரமா சொல்கிறான் என்ற யோசனையுடன் அதையும் யஸ்வந்த்திடம் கேட்டான் "என்னாச்சு யஸ்வந்த் ஏன் இவ்ளோ தீவிரமா யோசிக்கிற "

"நிஷு நீயே சொல்லிட்ட சம்திங் பிஷி அண்ட் ஒரு பொண்ணு அடிக்கடி உன்ன ஒரு விதமான வன்மத்துடன் பார்க்கிறதை நான் பார்த்தேன் . லாஸ்ட் வீக் அந்த பார்ட்டில ஒரு பொண்ணு உன்ன பார்த்து வன்மத்துடன் சிரிச்சா நீ உன் சுயநினைவுல இல்ல நான் உன் கிட்ட வரதுக்குள்ள ஷி லெப்ட் ... அந்த பார்ட்டி புயர்லி போர் பிசினஸ் பீப்பிள் ரொம்ப சிலருக்கு மட்டும் தான் இன்விடேஷன் போயிருக்கு ... அண்ட் எனக்கு கிடைச்ச நம்பகமான தகவல் சொன்னது இது தான் மிஸ்டர் மல்ஹோத்ரா மட்டுமே எ ஜே குரூப் ஒப் கம்பனிஸ் சிஇஓ வை பார்த்திருக்கார் ... " என்றான் யோசனையுடன் .

"வாட் ஐ காண்ட் கெட் யூ யாஷ் என்ன ஒரு பொண்ணு பாக்குறா அப்படினு சொல்ற , எ ஜே குரூப் சிஇஓ பத்தி பேசுற இதுல மல்ஹோத்ரா எங்க இருந்து வரார் ... எனக்கு சுத்தமா புரியல என்ன ஒரு பொண்ணு பாக்குறதா சொல்ற இஸ் தட் ஹேர் ? " என்றான் கேள்வியுடன் .

"நோ நிஷு இட்ஸ் நோட் ஹேர் ... எனக்கு அவங்களை நல்லா அடையாளம் தெரியும் மோர் ஓவர் உனக்காக நானும் பல நாள் அவங்களை தேடிருக்கேன் இட்ஸ் புயர்லி மிஸ்டரி ஆனால் நாம் கண்காணிக்க படுகிறோம் அண்ட் உன்னோட பிசினெஸ் உன்னோட லாஸ் அது தான் எ ஜே கம்பனிஸ்க்கு முக்கிய டார்கெட்ன்னு புரியுது பட் வாய் ...மல்ஹோத்ரா எ ஜே கம்பெனி பவுண்டெர் லீலாவதியோட நல்ல ஒரு பிரண்ட் " என்றான் யஸ்வந்த் .

"அப்ப மல்ஹோத்ரா கிட்ட எ ஜே குரூப் கம்பெனி பத்தின டீடெயில்ஸ் கேட்கலாமே " என்றான் நிஸ்வந்த் .

"இட்ஸ் இம்பொசிபிள் மல்ஹோத்ரா எப்படி கேட்டாலும் ஒரு கிளு கூட குடுக்க மாட்டார் . ஐ ஹவ் சம் அதர் பிளான் லெட்ஸ் சி " என்று பேசிக்கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தனர் .

..................................................................

ஒரு மாதம் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் சென்றது . ஆர் ஆர் குரூப்ஸ் ஒப் கம்பனிஸ் ஒரு விஷயத்தை யோசிக்கிறதுக்கு முன்னாடியே அங்க எ ஜே குரூப் ஒப் கம்பனிஸ் சென்று அந்த ஒப்பந்தத்தை கைப்பற்றினார்கள் .

எங்குமே எ ஜே குழுமத்தின் தலைமையை எவருமே கண்டது இல்லை . வெகு சில முக்கியமான நபர்களையும் நெருங்கி அவர்களை பத்தின தகவலை திரட்ட முடியவில்லை .

யஸ்வந்த் நிஸ்வந்த்தின் தொடர் வீழ்ச்சியை பற்றி அறிந்த கண்ணனும் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை . இதன் இடையில் மல்ஹோத்ரா மகளுடன் யஸ்வந்த்தின் பழக்கம் நெருக்கமாக மாற ஆரம்பித்தது .

யஸ்வந்த் சுஷ்மாவுடன் (மல்ஹோத்ராவின் மகள் ) அதிக நேரம் செலவு செய்வதை கண்ட நிஸ்வந்த் பலமுறை கேட்டும் மௌனத்தையே பதிலாக கொடுத்தான் யஸ்வந்த் .

ஒரு நாள் திடீர் என்று அவசரமாக நிஸ்வந்த்தின் அறைக்குள் நுழைந்த யஸ்வந்த் (இருவரும் இப்பொழுதெல்லாம் ஒரே அலுவலகத்தில் இருந்தே வேலை செய்கின்றனர் ) நிஸ்வந்த்தின் மடிக்கணினியில் ஒரு பென்ட்ரைவை சொருகி சில புகை படங்களை பார்வையிட்டான் . ஏன் இவனிடம் இத்துணை அவசரம் என்று யோசித்த நிஸ்வந்த் தனது மடிக்கணினியில் பார்வையை செலுத்தி புகை படங்களை பார்த்தான் .

ஒரு படத்தை பார்த்தவுடன் "யாஷ் இவ எப்படி மல்ஹோத்ரா டாட்டர் கூட ? " நிஸ்வந்த் கண்களை அகல விரித்து ஆச்சர்யத்துடன் கேட்பதை கண்ட யஸ்வந்த்திடம் ஒரு பரபரப்பு .

"இவங்களை உனக்கு தெரியுமா நிஷு ? " என்றான் யஸ்வந்த் .

"ஹே இவங்களை உனக்கு தெரிலயா ஷி இஸ் ஜெயதி ... " என்றான் ஆச்சர்யத்துடன் .

"காட் இட் " என்று பெருமூச்சை வெளியிட்ட யஸ்வந்த் தனது கரங்கள் கொண்டு தலையை அழுந்த கோதினான் .

"என்னாச்சு யாஷ் ? " நிஸ்வந்த்திற்கு ஒன்றும் புரியவில்லை என்ன நடக்கிறது ஏன் என்று பல கேள்விகள் அவன் மனதில் .

"நிஷு ஷி இஸ் எ ஜே குரூப் ஒப் கம்பனிஸோட சார்பேர்சன் " என்றான் யஸ்வந்த் .

நிஸ்வந்தால் சத்தியமாக அதை நம்ப முடியவில்லை அவனின் அதிர்ச்சியை மேலும் அதிக படுத்தினான் யஸ்வந்த் "இவங்க தான் உன்னை அடிக்கடி வன்மத்துடன் பார்த்தது . டூ யூ நோவ் ஹேர் பிபோர் ? " என்றான் கேள்வியாக .

"யாஷ் இட்ஸ் ஷாக்கிங் அவங்களை நம்ம கம்பெனி ஸ்டாப் ,கண்ணன் அண்ணா ரெகமெண்டேஷன், குட் டாலேண்டட் அந்த அளவில் தான் தெரியும் அதுக்குமேல அவங்களை பற்றி ஒன்றுமே தெரியாது ...ஹே நீயும் இவங்க ப்ரொபைல் பார்த்திருப்பியே நம்ம ஸ்டாப் லிஸ்ட்ல இவங்களை உனக்கு தெரிலயா " என்று யோசனையுடன் கேட்டான் நிஸ்வந்த் .

"அது தான் ஆரம்பமே நிஷு..... இவங்க போட்டோ இன் பயோ டேட்டா வாஸ் டிஃபரென்ட் . ஷி வாஸ் சோ போர்மல் அண்ட் தட் ஸ்னாப் வாஸ் நோட் கிளீயர் அதான் என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை .ஐ டிடின்ட் சீ ஹேர் இன் பேர்சன் நான் நேர்ல பார்த்தப்ப எல்லாம் ஷி வாஸ் ட்ரெண்டி மாடர்ன் அண்ட் ஸ்டைலிஷ் அந்த பிக்ச்சருக்கும் நேர்ல பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் . ஷி ப்லயேட் பிரில்லியண்ட் " என்றான் யஸ்வந்த் . மேலும் தனது முகத்தில் தீவிரத்தை கொண்டு வந்த யாஷ்

"நிஷு இவங்களை பத்தி தெரிஞ்சுக்க தான் சுஷ்மாவோட நெருங்கி பழகினேன் . அண்ட் வாட்ஸ் தி ரீசன் டு டார்கெட் யூ இஸ் மிஸ்டரி ஸ்டில் . ஷி இஸ் ஆல்சோ எ மதர் ஒப் எ சைல்ட் பட் நோட் மாரிட் " நிதானமாக பல அதிர்ச்சிகளை நிஸ்வந்த்தின் முன் வரிசை படுத்தினான் யாஷ் . அனைத்தையும் கேட்ட நிஸ்வந்த் தலையில் கைவைத்து அமர்ந்தான் .

"யாஷ் எனக்கு சுத்தமா புரியலை அவங்க இங்க வேலை செய்தப்ப பர்சனல் மாட்டேர்ஸ் யார்கூடயும் பேசிக்கிட்டது இல்லை என்னை ஏன் குறிவைக்கிறாங்கனும் தெரியல . கண்ணன் அண்ணா எப்படி விசாரிக்காம இருந்திருப்பாங்க என்ற நம்பிக்கை மட்டும் தான் அவங்க கிட்ட என்ன வேற எதுவும் கேக்க யோசிக்கவிடலை " என்றான் நிஷு .

"நிஷு லுக் நம்மளையே இவ்ளோ பிரிலியண்டா யோசிச்சு அடிச்சிருக்கா நம்மளோட ஸ்ட்ராட்டஜிய முழுசா தெரிஞ்சு இறங்கி வேலை செஞ்சிருக்கா கண்ணன் அண்ணாக்கும் அவளோட க்ரெய் ஷாட் தெரியாம இருந்திருக்கலாம் . " இவ்ளோ நேரம் மரியாதையாக குறிப்பிட்டு கொண்டு இருந்த யஸ்வந்த் ஜெயதியின் துரோகத்தை நினைத்து முழுதாக ஒருமைக்கு தாவினான் .

தனது அலைபேசியை கையில் எடுத்த யஸ்வந்த் சில இலக்கங்களை அழுத்தி காதிற்கு பொருத்தினான் . அவனை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் நிஸ்வந்த் . அந்த பக்கம் அழைப்பை ஏற்றவுடன் "கேன் ஐ ஸ்பீக் டு மிஸ் ஜெயதி சிஇஓ ஒப் யுவர் கன்செர்ன் " என்றான் அழுத்தமாக .

அந்த பக்கம் ஒரு நொடி மௌனத்திற்கு பிறகு "நாளை அவங்களே உங்களை வந்து சந்திப்பாங்க மிஸ்டர் யஸ்வந்த் " என்று தகவலாக சொல்லி அழைப்பை துண்டித்தனர் .

"யார்கூட பேசுன யாஷ் " என்றான் நிஸ்வந்த் .

"ஜெயதியோட பர்சனல் செகிரேட்டரி . சுஷ்மா போன்ல இருந்து அந்த நம்பரை எடுத்தேன் " என்றான் யஸ்வந்த் . நிஸ்வந்த்திற்கு இன்று அதிர்ச்சி தரும் நாள் என்று எழுதி இருக்கோ என்னவோ !! அதிர்ச்சியுடன் தனது சகோதரனை நோக்கினான் .

"சுஷ்மா எளிதில் ஜெயதி பத்தி சொல்லல . ஷி இஸ் கிரேஸி ஓன் மீ அவளுக்கே தெரியாம அவ மொபைல் எடுத்து போட்டோஸ் டீடெயில்ஸ் எல்லாம் பென்ட்ரைவில் கோப்பி பண்ணேன் " என்றான் அசால்ட்டாக .

நிஸ்வந்த் மிகுந்த யோசனையில் ஆழ்ந்தான் . என்னதான் நடிக்கிறது என்று பொறுத்து இருந்து பார்க்க முடிவு செய்தான் .

.....................................................................................

அடுத்தநாள் காலை மூவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது .

யஸ்வந்த்திற்கு ஜெயதி மீதான கோபம் , நிஸ்வந்த்திற்கு நடப்பவைக்கான காரணம் என்ற குழப்பம் கடைசியாக ஜெயதி அவள் ஆவலுடன் எதிர் பார்த்த நாள் அதற்கான ஆர்வம் என்று ஒவ்வொரு விதமான மனநிலையுடன் அந்த நாளை எதிர்நோக்கி மூவரும் தங்கள் வேலைகளை செய்ய கிளம்பினர் .

காலை பத்து மணி என்று கடிகாரம் காட்டியது . சரியாக சொன்ன நேரத்தில் ஜெயதியின் வரவு யஸ்வந்த்திற்கு தெரிவிக்கப்பட்டது . தனது அலுவலக அறையில் வேலை செய்து கொண்டு இருந்த யஸ்வந்த் அவளின் வரவை எதிர் நோக்கி வாயிலை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் .

எந்த வித அறிவிப்பும் இல்லாமல் உள்ளே நுழைந்த ஜெயதி நேராக யஸ்வந்த்தின் எதிரில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள் .

அவளை எடை போடும் பார்வை பார்த்தான் அவன் . தூக்கி போட்ட போனிடைல் போர்மல்ஸ் ஷர்ட் டயிட் ஸ்கிர்ட் . அந்த இளம் உதா வண்ண சட்டைக்கு அவள் அணிந்திருந்த ஸ்கிர்ட் அழகாக பொருந்தி இருந்தது . பெரிய ஒப்பனைகள் இல்லாமல் மிதமான ஒப்பனை காதில் சின்னதாக வைரம் பதித்த பொட்டு தோடு , இடது கையில் ரோலெக்ஸ் கடிகாரம் வலது கையில் எ ஜே என்று வைர கற்களால் பதிக்க பட்ட முகப்பு கொண்ட கைச்சங்கிலி . ஒரு நிமிடத்திற்கும் குறைவான பார்வையில் அவளை எடை போட்டான் யஸ்வந்த் .

அவள் பார்வையில் தெரிந்த கடினம் என்னை முடிந்தால் நெருங்கிப்பார் என்ற சவாலை சுமந்து இருந்தது . ஜெயதி கால் மேல் கால் போட்டு மிகவும் கம்பீரமாக அமர்ந்து இருந்தாள் .

யஸ்வந்த்திற்கு அவளை பார்த்து அவ்ளோ ஒரு ஆத்திரம் .தனது அலுவகத்தில் தனக்கு எதிரே அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தவளை ஏதும் செய்ய இயலாமல் கையை கட்டி போட்டது போல் இருந்தது யஸ்வந்த்திற்கு .யஸ்வந்த்தும் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் வெறுமையான பார்வையுடன் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான் ."சோ யு ஆர் தி கலப்ரிட் " தீயென தகித்தது அவனின் வார்த்தைகள் . முகத்திலோ எந்த உணர்வும் இல்லை .ஒற்றை புருவத்தை தூக்கி மெச்சுவதை போன்ற ஒரு பார்வை பார்த்து நக்கலாக சிரித்த அவள் "ஓஹ் தி கிரேட் ட்வின் பிரோதெர்ஸ்க்கு என்னை கண்டு பிடிக்க இவ்ளோ மாதகாலம் ஆகிடுச்சா ? " அவ்ளோ ஒரு நக்கல் அவளின் குரலில் .

"வெல் மிஸ்டர் யஸ்வந்த் உங்க ட்வின் சோல் இப்ப போயிருக்கிற வேலை முடிந்து ஐந்து நிமிடம் ஆகிடுச்சு . அந்த ப்ராஜெக்ட் என் கன்சர்னுக்கு சாங்க்ஷன் ஆகி அதே அஞ்சு நிமிஷம் ஆயிடுச்சு . ரொம்ப நாளா யார் நான் அப்படினு தேடிட்டு இருந்தீங்கன்னு கேள்விப்பட்டேன் . சோ நீங்களே கூப்பிட்டு என்னை கண்டுபிடிச்சதை சொன்னப்ப இட் வாஸ் நோட் ஷாக்கிங் அட் ஆல் . சரி கண்ணாமூச்சி ஆடி போர் அடிச்சிடுச்சு இனி ஸ்ட்ரெயிட்டா பார்க்கலாம்னு நானே வந்துட்டேன் ." என்றாள் தெளிவாக .

"சீட் பண்ணி ஒரு விஷயத்தை சாதிக்கிறதை நினச்சா உனக்கே அசிங்கமா இல்லையா ? . பெண் புத்தி பின் புத்தின்னு காமிச்சிட்ட இல்ல " எரிச்சலுடன் கேட்டான் யஸ்வந்த் .

"லுக் மை டார்கெட் இஸ் நோட் யூ . யூ பெட்டெர் ஸ்டே அவெய் . எஸ் நான் சீட் பண்ணேன் . ஒருத்தங்க நமக்கு பண்ணதை அதே பாணியில் அவங்களுக்கு திருப்பி கொடுக்கிறேன் புரியுதா . ஏன் எதற்கு அப்படினு எஸ்பிளேன் பன்னிட்டு இருக்க முடியாது காட் இட் . தி ரியல் கேம் ஸ்டார்ட்ஸ் நொவ் . உன்னோட உடன் பிறப்பிடம் சொல்லிடு இனி என்னோட முழுநேர டார்கெட் உன்னோட ஆர் ஆர் கன்செர்ன் ஷுட் கம் அண்டர் எ ஜே குரூப் ஒப் கம்பனிஸ் " என்று சுட்டு விறல் நீட்டி எச்சரித்து விட்டு எந்த வித அறிவிப்பும் இல்லாமல் வெளியே செல்ல கதவை திறந்தாள் .

"மிஸ் ஜெயதி ஒன் மினிட் ப்ளீஸ் ... " என்று கூறி தனது இருக்கையில் இருந்து எழுந்து அவளின் அருகே வந்து அவளின் காதின் அருகில் குனிந்து "யூ லுக் சோ பியூடிபியுல் ஆஸ் லைக் யுவர் சிஸ்டர் அபிதா .... " என்று ஆழமான குரலில் கூறினான் .

இப்பொழுது அதிர்ச்சி ஆவது அவளின் முறை ஆகிற்று . கண்களை திறந்து "வாட் !! கம் அகைன் " என்றாள் .

"ஓஹ் கம் ஒன் மிஸ் உங்க சிஸ்டர் அபிதா எவ்ளோ அழகோ அதே போல் நீங்களும் அவ்ளோ அழகு . உங்க சிஸ்டரின் அழகில் வீழ்ந்த நிஷு இன்னைக்கு வரைக்கும் எழுந்திரிக்களை . மேலும் யோசிக்கும் திறனை மொத்தமா தொலைச்சுட்டு இருக்கான் . பட் ஆம் நோட் எ பூஹூல் யு க்நொவ் . நீ தான் அப்படினு தெரிஞ்ச நொடி உன்னை பத்தி தெரிஞ்சுகிறது அவ்ளோ கஷ்டமா இல்லை ...." யஸ்வந்த் மிகவும் எளிதாக சொல்லிவிட்டான் . ஆனால் அவன் சொன்ன செய்தியின் தாக்கம் அவளை விட்டு நீங்கவில்லை .
அத்தியாயம் - 5

ஜெயதி இந்த பக்கம் செல்கயில் அந்த பக்கம் உள்ளே நுழைந்தான் நிஸ்வந்த் . நிஸ்வந்த் தனது முக்கிய கூட்டத்தை முடித்து தனது ஆர் ஆர் சொலுஷன் வாசலை நெருங்குகையில் அவன் பார்த்தது ஜெயதி தனது உயர் ரக சிவப்பு நிற லம்போர்கினியில் ஏறியதை .

ஓட்டுநர் பக்கம் அவளின் காரியதரிசி மற்றும் தோழியுமான ஷில்பா ஏறினாள் . வாகனத்தை செலுத்தும் நிலையில் ஜெயதி இல்லை அவளின் அதிர்ச்சி அப்படி . ஜெயதி நிச்சயமாக யஸ்வந்த் அபிதாவை பற்றி அறிந்திருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை .

நிஸ்வந்த் பார்க்கும் சமயம் அவளின் லம்போர்கினி கிளம்பியது அதன் முன்னும் பின்னும் இரு இன்னோவாக்கல் சில ஆட்களுடன் நகர்ந்தது . வேகமாக தனது ஆடி வாகனத்தை அதற்குரிய இடத்தில் நிறுத்தாமல் சாவியை அங்கு இருந்த காவலாளியிடம் கொடுத்துவிட்டு வேகமாக படிகளை தாவி தாவி ஏறி ஐந்தாம் மாடியில் இருக்கும் அவர்களின் அறைக்குள் நுழைந்தான் .

உள்ளே நுழைந்தவுடன் அவன் கண்ட காட்சி யஸ்வந்த் இருகைகளையும் தனது தலைக்கு கொடுத்து ஓய்ந்து போய் அமர்ந்து இருந்ததை . "யாஷ் என்னாச்சு ஜெயதி அதுக்குள்ள வந்துட்டு போய்ட்டா போல ...என்ன சொன்னா ... அவள் ஏன் என்னை குறிவைக்கிறா ? " கேள்விகளை தொடர்ந்து அடுக்கினான் .

நிஸ்வந்தின் குரலில் தலை நிமிர்ந்து பார்த்த யஸ்வந்த் தனது வாயை திறக்காமல் அமைதி காத்தான் . "யாஷ் ப்ளீஸ் சொல்லு ..." என்று கெஞ்சலில் இறங்கினான் . தன்னவளை பற்றி ஏதேனும் தெரியுமோ என்று ஏங்கினான் . அனைவரும் அவள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறிய பொழுது அவனின் ஆள் மனது அவளின் இருப்பை அவனுக்கு உணர்த்தியது . தன்னை மட்டுமே குறி வைக்க வேண்டுமானால் அதன் முழுமுதற் காரணம் அவளாக மட்டுமே இருப்பாள் என்பதில் அவனுக்கு எள்ளவும் ஐயமில்லை .

"எஸ் நிஷு இட்ஸ் ஹேர் " என்றான் யஸ்வந்த் பொறுமையாக . அந்த நான்கு வார்த்தைகளில் ஒரு நொடி உறைந்த நிஷு தன்னிலை இழப்பதற்கான சமயம் இதுவல்ல என்று உணர்ந்து "அவள் அவள் இன்னும் உயிரோடு இருக்கிறாளா ? " என்றான் பரவசக் குரலில் .

"தெரியல " என்றான் யஸ்வந்த் . நிஸ்வந்த்திற்கு பல குழப்பங்கள் "என்ன யாஷ் சொல்ற இட்ஸ் அபிதா சொல்ற ஆனால் அவள் உயிருடன் இருக்கிறாளா என்று கேட்டால் தெரியலை சொல்ற...கொஞ்சம் தெளிவா சொல்லு " அவன் குரலிலே அவனின் பொறுமை எல்லை கடப்பதை உணர்ந்த யஸ்வந்த் தனது வாயை திறந்தான் .

"நிஷு காம் டௌன் ...இட்ஸ் போர் அபிதா ஆனால் அபிதாதான் இதை செய்கிறாளா என்றால் தெரியாது . ஜெயதி அண்ட் அபி ஆர் கசின்ஸ். அபியின் பெரியப்பா பெண் ஜெயதி . நல்ல தோழிகள் மற்றும் சகோதிரிகள் .ஜெயதி தனது பத்தாம் வயதில் தாய் தந்தையுடன் தொழில் சம்பந்தமாக ஸ்டேட்ஸ் சென்றுவிட்டாள் . "

யாஷ் பேசிக்கொண்டு இருக்கையிலே நிஸ்வந்த் இடையிட்டான் "அபிதா ஒருமுறை அவளின் சகோதரியை பற்றி கூறி இருக்கிறாள் ஆனால் பெயர் சொல்லல " என்றான் குழப்பத்துடன் .

"எக்ஸாக்ட்ல்லி அவள் தான் இந்த ஜெயதி . இதில் குழப்பம் என்னன்னா அபி உயிருடன் இருக்கிறார்களா என்பது தெரியலை . ஜெயதிக்கு ஒரு தங்கை உண்டு ஜெயதியை விட இறுவயது சிறியவள் ஆனால் அவளை லீலாவதி அவர்கள் சட்டப்படி தத்தெடுத்து இருக்கிறார்கள் . அவளின் பெயர் ரக்ஷிதா . எங்கும் அபியின் அடையாளங்கள் இல்லை . ஜெயதி என்று தெரிந்தவுடன் என்னால் அதிகபச்சம் கண்டு பிடிக்க முடிந்தது இவர்களின் உறவை மட்டுமே. அதற்குமேல் எவரை கேட்டாலும் சிறு தகவல் கூட இல்லை . அவர்களை சுற்றி பெரும் பாதுகாப்பு வலயம் . ஸ்டேட்ஸில் பெரும் தொழிலதிபர் லீலாவதி அவரின் துணை கொண்டு தனது சகோதரியின் வாழ்க்கையின் அஸ்தமனத்துக்கு காரணம் ஆன உன்னை பலி தீர்க்கவே இங்கு வேலைக்கு சேர்ந்துள்ளாள் " என்று தனக்கு தெரிந்த வரை நிஷ்வந்திடம் கூறி தனது வலது கையின் இருவிரல் கொண்டு நெற்றியை நீவி விட்டான் .

சற்று நேர அமைதிக்கு பின் சட்டென்று தலை நிமிர்த்திய யஸ்வந்த் "நிஷு எனக்கு என்னமோ கண்ணன் அண்ணாக்கு எல்லாம் தெரிந்து இருக்குமோ அவர்தான் இவர்களுக்கு உதவுகிறாரோ என்று சந்தேகமாக உள்ளது " என்றான் .

"ஹ்ம்ம் எனக்கும் அதே சந்தேகம் .... ஆனால் யாஷ் அண்ணாகிட்ட எதையும் கேக்க முடியாது கேட்டால் நம் வீட்டு ஆட்களே நமக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது " என்று வருத்தத்துடன் கூறி தலையை தொங்கபோட்ட நிஸ்வந்த் "தவறு செய்யும் பொழுது உற்சாகமாக இருந்தது இப்பொழுது ஒவ்வொரு செயலும் பூதாகரமா தெரியுது " என்றான் .

அதை கேட்ட யஸ்வந்த் கோபம் கொண்டு தனது இருக்கையில் இருந்து எழுந்து "லுக் நிஷு வயதின் கோளாறு மேலும் நாம் யாரையும் எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை . அதைவிட அனைத்துமே அளவில் தான் இருந்தது . அனைத்தும் அபியை நீ பார்க்கும் வரை " என்று கூறி குற்றம் சாட்டும் பார்வையை நிஷுவின் பக்கம் திருப்பினான் யாஷ் .

நிஷுவும் இயலாமையுடன் தலைகவிழ்ந்தான் ."நான் அன்னைக்கே சொன்னேன் அபி இஸ் நோட் யுவர் கயிண்டா பேர்சன்னு . நீ அவங்க குணத்துலயும் அழகுளையும் விழுந்த அவங்க உண்மையான முகம் தெரிந்து ஒரு தவறு செய்தாய் அதும் கோபத்தில் அது இவ்வாறு முடியும் என்று நீ நினைக்கவில்லை . விடு பார்த்துக்கலாம் எதா இருந்தாலும் சேர்ந்து சந்திப்போம் "

மேலும் தொடர்ந்த யாஷ் "நிஷு யூ லாஸ்ட் யூர்செல்ப் மான் . அபியை கோபத்தில் எதோ செய்து அது தப்பும் தவறுமாக முடிந்து நீ உன் இயல்பை தொலைத்தாய் . ஜெயதியை பக்கத்தில் வைத்துக்கொண்டே உண்மையான முகத்தை கண்டுகொள்ளும் திறனை ஏன் மறந்தாய் நிஷு " என்றான் ஒரு வித தவிப்புடன் .

"தெரியல யாஷ் அபியுடன் பழகும் நாட்கள் மிற்ற பெண்கள் போல இவளும் ஒரு நாள் தேவையற்று போவாள் என்று நினைத்து தான் பழகினேன் பிறகு எவ்வாறு இது காதலாக மாறியது என்று தெரியாது . அவளின் மரண செய்தி என்னை ஆட்டிவைத்தது அப்பொழுது உணர்ந்தேன் அவள் தான் என் உயிர் என்று . தொழிலை முழுதாக கவனத்துடன் பார்க்க முடியவில்லை . கடந்து வந்த நாட்களில் நான் வலியுடன் தெரிந்து கொண்டது ஐ லவ் அபிதா . ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுனு சும்மாவா சொன்னாங்க " என்று கூறி வெளியே சென்றுவிட்டான் நிஸ்வந்த் .

யஸ்வந்த் கோபத்தில் தனது மேஜையை ஓங்கி தட்டினான் "ஜெயதி " என்று கூறி பற்களை கடித்தான் .(இதோட இவங்க அறைக்கு மாற்றிய மேஜையின் எண்ணிக்கை 101 )

...................................................................

அங்கு ஜெயதியோ மும்பை மாநகரில் இருந்து சற்று ஒதுங்கினார் போன்ற இடத்தில் இருந்த விஸ்தாரமான மாளிகையினுள் நுழைந்தாள் . அவள் உள்ளே நுழைந்தவுடன் தாதியிடம் இருந்து நழுவி வந்து "அம்மா " என்று கூவி தனது அன்னைய நோக்கி ஓடினாள் அந்த தேவதை .

ஓடி வந்த மகளை ஆசையாக தூக்கிய ஜெயதி "அம்மு குட்டிமா " என்று செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள் .
தாயும் மகளும் தனி உலகில் லயித்து இருந்த சமயம் அவர்களின் கவனத்தை கலைத்தது ஜெயதியின் அலைபேசியில் வந்த காணொளி அழைப்பு . அதில் வந்த முகத்தை கண்ட அந்த சின்ன வாண்டு பாவமாக தனது அன்னையை ஏறிட்டு பார்த்து அவளின் கைகளில் இருந்து இறங்கி தாதியுடன் தனது அறைக்கு சென்றாள் .

அந்த சிரிகுழந்தையின் வாட்டத்தை காண இயலாத ஜெயதி கோபத்தில் அருகில் இருந்த பூ ஜாடியை ஓங்கி அடித்து உடைத்தாள் . விதியின் சதியால் நிந்திக்கப்பட்ட அந்த இளம் தளிரின் வாழ்க்கையை எண்ணி நொந்துகொண்டாள் .

அதற்குள் அவளின் அலைபேசி மூன்று முறை அடித்து ஓய்ந்தது . ஒரு நிமிடத்தில் தன்னுடைய கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்த ஜெயதி அலைபேசிக்கு உயிர் கொடுத்து "ஹாய் அம்மா " என்றாள் வரவழைத்த புன்னகையுடன் .

தாய் அறியாத சூளா இருந்தும் வேற ஏதும் கேளாமல் "சொல்லு ஜெயா மா அங்க என்ன நடந்துச்சு " என்று கேட்டார் .

அன்னையிடம் எதையும் மறையாமல் சொல்லி முடித்த ஜெயதி அங்கு காணொளியில் காட்சி தந்த ரக்ஷிதாவை கண்டு "ஹாய் ரக்ஷி எப்படிம்மா இருக்க " என்றாள் பாசமாக .

"நல்லா இருக்கேன் அக்கா அம்மா தான் உங்களை பத்தி கவலை படறாங்க " என்றாள் ரக்ஷிதா .

"ஹே உன்னை அக்கா சொலாதனு எத்தனை தடவை சொல்லிற்கேன் ... " என்று பொய் கோபத்துடன் செல்லமாக மிரட்டினாள் ஜெயதி .

"அக்கா ...எனக்கு வரலை " என்று கூறி வேறு பேச்சிற்கு தாவினாள் ரக்ஷிதா . ஜெயதி அவளின் நோக்கம் புரிந்து மேலும் வலியுறுத்தாமல் அவளின் பேச்சிற்கு இணையாக பேசினாள் .

இவை அனைத்தையும் ஜெயதி வீட்டின் கூடத்தில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த ஷில்பாவிற்கு தனது தோழியின் வருத்தம் பொறுக்க இயலாமல் 'பேசாமல் அவனுங்களை கொன்று விடுவோமா ' என்று என்ன ஆரம்பித்தாள் .

............................................................................................
நிஸ்வந்த் செயல் இழந்து இருந்த தனது மூளையை முடக்கி விட்டு நாலா பக்கமும் தன்னவளை தேடி அலைந்தான் . பலரை நியமித்தான் . தகவல் கொடுப்பவருக்கு பெரும் தொகையை தருவதாக கூறினான் அந்தோ பரிதாபம் எந்த ஒரு பாதுகாப்பு வலயத்தையும் தகர்த்த இயலாமல் ஓய்ந்து போய் இருந்தான் .

யஸ்வந்த் நிஸ்வந்த்தின் நிலை உணர்ந்து தொழிலை முழுதாக தன் கட்டுக்குள் கொண்டு வந்து பார்த்துக்கொள்ள ஆரம்பித்தான் . அவன் என்ன தான் முயற்சித்தாலும் அங்கு இவர்களை நியாயமான காரணத்திற்காக பலி தீர்க்க அவளின் எண்ணம் அறிந்த விதி கூட இவர்களுக்கு சதி செய்தது .

தொடர் தோல்வியில் கடும் கோபத்தில் இருந்த யஸ்வந்த் ஜெயதியின் ஆள் எவரேனும் தனது அலுவலகத்தில் இருக்கிறார்களா என்று அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஒவ்வொருவரை பற்றியும் ஆராய்ந்தும் எந்த தகவலும் உருப்படியாக இல்லாமல் அனைவரையும் சந்தேக கண்ணோடு பார்க்க ஆரம்பித்தான் .

அன்று ஒரு நாள் தோல்வியின் வலி தாங்காமல் மும்பை மாநகரத்தின் அடையாள சின்னமான கேட் வேய் ஒப் இந்தியாவின் அருகில் நின்று கடலை வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான் யஸ்வந்த் . அப்பொழுது அவனின் காலை உரசிக்கொண்டு புறாவை துரத்தி ஓடினாள் அந்த அழகு தேவதை .

அந்த மழலையின் உர்ச்சாகத்தில் தன்னை தொலைத்தான் யஸ்வந்த் . அப்பொழுது அன்று போல் இன்றும் ஒரு யுவதி ஓடி வந்து குழந்தையை தூக்குவதை கண்டான் . தெரிந்துகொண்டான் இது அவள் தான் என்று . அவன் என்ன முயன்றும் குழந்தை பற்றின தகவல் ஒரு துளி கூட அறிய இயலவில்லை .

ஜெயதியை கண்கொட்டாமல் பார்த்த யஸ்வந்த் மெதுவாக அவளை நெருங்கினான் . தனக்கு முன் அரவம் உணர்ந்த ஜெயதி கண்களை யஸ்வந்த்தின் பக்கம் திருப்பினாள் . அவளின் முகத்தில் தெரிந்த பாவம் என்ன ? குழம்பினான் யஸ்வந்த் . சரியாக அந்த சமயம் ஜெயதியின் அலைபேசியில் வந்த அழைப்பை கண்ட அந்த சின்ன வாண்டு கண்களில் தேங்கிய அழுகையுடன் தனது அன்னையின் முகத்தை பார்த்தாள் .ஜெயதி உயிர் துடித்து போனாள் . யஸ்வந்த் நடப்பவையை பார்த்து முற்றிலுமாக குழம்பினான் ஒரு அழைப்பு ஏன் ஒரு மழலையின் சந்தோசத்தை வாட செய்கிறது ...? . ஜெயதி மற்றும் யஸ்வந்த்தின் இடையில் ஒரு ஐந்தடி தூரமாவது இருக்கும் ஆகையால் அவளின் அலைபேசியை அவனால் காண இயலவில்லை . அந்த குழந்தை கண்களில் தேங்கிய கண்ணீருடன் ஜெயதியின் கரங்களில் இருந்து இறங்கி புறாக்களை நோக்கி சென்றாள் .

எதிரில் ஒருவன் இருப்பதை மறந்து அழைப்பை துண்டித்து கண்களில் கண்ணீர் தேங்க குழந்தையை பார்த்தாள் ஜெயதி . யஸ்வந்த்தின் கால்களோ அனிச்சை செயலாக குழந்தையை நோக்கி முன்னேறியது . ஜெயதி உணர்வற்று போனாள் . ஷில்பா குழந்தைக்கு உன்ன ஏதேனும் கிட்டுமா என்று வாங்க சென்றிருந்தாள் .

யஸ்வந்த் குழந்தையை தூக்கி " உங்க பெயர் என்ன " என்றான் . ஜெயதி யஸ்வந்த்தின் குரலில் தன்னிலை அடைந்து விரைந்து பதட்டத்துடன் செல்வதற்குள் "ஆஞ்சி " என்று மழலையில் கூறியது .

அவன் புரியாமல் நிற்கையில் "நீங்க " என்று கேட்டாள் அந்த தேவதை . அவள் தன் பெயர் கேக்கிறாள் என்றுணர்ந்து முறுவலுடன் "யஸ்வந்த் ...யாஷ் கூப்பிடுங்க " என்றான் .

"அப்ப நிஷு " என்று மழலையில் கூறிய குழந்தையை கண்ட யஸ்வந்த் உறைந்தான் . அவனின் தடுமாற்றத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திய ஜெயதி அவனிடம் இருந்து குழந்தையை பறித்து வேகமாக கூட்டத்தின் நடுவில் சென்று மறைந்தாள் . அதற்கு அவளின் பாதுகாவலர்களும் உதவினார் ஷில்பாவும் வந்து சேர்ந்தாள் .

ஷில்பா யஸ்வந்த்தை எரிக்கும் பார்வை பார்த்து குழந்தையை வாங்கி வாகனத்தில் வேகமாக ஏறினாள் .

யஸ்வந்த் நொடி பொழுதில் நிகழ்ந்தவையை தடுக்க இயலாமல் பார்த்து தனக்குள் யோசிக்கலானான் .

"பெயர் அஞ்சி அப்டின்னா ... புரிலயே இப்படி ஒரு பெயரா " என்று தனக்குள் பேசி அடுத்த நொடி "நான் யாஷ் சொன்னா அவ அப்ப நிஷு அப்படினு கேட்டாளே அது எனக்கு புரிந்ததே ... நிஷுவை பற்றி குழந்தைக்கு எப்படி தெரியும் ... அந்த ராட்சசி ஏன் பயந்து பதட்டமானா ..யார் அவளுக்கு கூப்பிட்டது " பல கேள்விகளுடன் அந்த குழந்தையின் அடையாளத்தை தேட எண்ணிக்கொண்டான் .

அத்தியாயம் - 6

யஸ்வந்த் மற்றும் அந்த குட்டி தேவதையின் அறிமுகத்திற்கு பிறகு ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் யஸ்வந்த்தால் எதையும் கண்டுகொள்ள முடியவில்லை . நிஸ்வந்தும் முயன்று ஜெயதியின் குடும்ப பின்னணியை அறிய முற்பட்டான் ஆனால் முடியவில்லை .

இருவரும் தொழிலும் தொடர் தோல்விகளையே சந்தித்தனர் . நிஷ்வந்தின் நிலை ஏதோ கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் பரிதாபத்திற்கு உரியதாக இருந்தது . இவை அனைத்தையும் கண்ட யஸ்வந்த் நிஷ்வந்தையும் அழைத்துக் கொண்டு நேராக கண்ணனின் முன் நின்றான் .

கே கே நகர் இல்லத்தில் ராஜ் மற்றும் கண்ணன் இருவரும் கூடத்தில் நீள்விரிக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் . அப்பொழுது வேகமாக உள்ளே வந்த இரட்டையர்கள் கண்ணனின் முன் நின்றனர் .

கண்ணன் புரிந்து கொண்டான் எதையும் முகத்தில் காட்டாமல் "உட்காரு யாஷ் ,நிஷு நீயும் உட்கரு "

யாஷ் பொறுமை இழந்தவனாக "அண்ணா நாங்க உங்க கிட்ட தனியா பேசணும் ..."

கண்ணன் நிதானம் இழக்காமல் "இங்கயே பேசலாம் " என்று கூறி அர்த்தம் பொதிந்த பார்வையை தந்தையின் பக்கம் செலுத்தினான் .

யாஷ் உடனே சிறு கோபம் எட்டி பார்த்த குரலுடன் " அண்ணா ஜெயதி யாரு ? " நேராக தனது கேள்விக்கு வந்தான் .

கண்ணன் சிறு புன்னகையுடன் "உனக்கே இந்நேரத்தில் தெரிஞ்சிருக்கும் யாஷ் " என்றான் பொறுமையாக . அனைத்தையும் ராஜ் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தார் .

"அபி இன்னும் உயிரோடு இருக்கிறாளா ? " இப்பொழுது கேள்வி வந்தது நிஷுவிடம் இருந்து .

"அபி ஹான் என்ன திடீர் அக்கறை .... !! " எள்ளலாகவே கேட்டுவைத்தான் கண்ணன் .

"சோ உங்களுக்கு எல்லாம் தெரியும் ரைட் " இந்த கேள்வி நிஷுவிடம் இருந்து கூர்மையாக வந்தது .

"எனக்கு எல்லாம் தெரியும் " கண்ணன் நிதானமாக அழுத்தமாக சொன்னான் .

நிஷு இயலாமையுடன் பொத்தென்று நீல் விரிக்கையில் அமர்ந்தான் .

யாஷ் தன் இரட்டை பிறவியின் துயரை போக்கும் வகையில் அவனின் முதுகை தட்டி கொடுத்து அவனின் அருகில் அமர்ந்தான் .

"அண்ணா இது சரி இல்லை எதுவாக இருந்தாலும் நேராக எங்களிடம் கேள்வி கேட்டிருக்கலாம், ஆனால் இது ...இது சூழ்ச்சி எங்களை முதுகில் குத்திவிட்டீர்கள் ...உங்களை எவ்ளோ நம்பினோம் நீங்களே இப்படி செய்யலாமா " என்று இயலாமை நிறைந்த குரலில் கேட்டது யாஷ் . தன்னுடைய குருவான சகோதரன் தங்களுக்கு செய்தது நம்பிக்கை துரோகம் என்று எண்ணி எண்ணி வருந்தினான் . இந்த நொடி வரை அண்ணாவிற்கு இதில் சம்பந்தம் இருக்காது என்ற சிறு நம்பிக்கையில் வந்த அவனின் மனதிற்கு கண்ணன் தன் வாய்மொழியாகவே ஒத்துக்கொண்டது பெரும் வலியை ஏற்படுத்தியது .

ராஜ் ஏதும் கூறவில்லை அவரும் அமைதியாகவே அமர்ந்து இருப்பதைய் கண்ட யாஷ் புரிந்துக் கொண்டான் இதில் தங்களின் பெரியப்பாவின் பங்கும் பெரும் அளவில் இருக்கிறது என்று .

அப்பொழுது கோவிலுக்கு போயிட்டு உள்ளே நுழைந்த ரஞ்சினியை கண்ட ராஜ் "ரஞ்சி என்னமா சாமி கும்பிட்டாச்சா ...இங்க பாரு யாரு வந்திருக்கானு பசங்களுக்கு பிரசாதம் வச்சு விடு " என்றார் .

அப்பொழுதுதான் இரட்டையர் பக்கம் திரும்பிய ரஞ்சினி "அடடே டேய் பசங்கள எப்ப வந்திங்க இந்தா பிரசாதம் வச்சுக்கோ " என்று கோவில் பிரசாதத்தை நீட்டினார் .

"இன்னைக்கு மதியம் இங்க தான் சாப்பிடணும் " என்று அன்பு கட்டளை விதித்து உள்ளே சென்றார் .

நிஷு முயன்று தனது முக பாவத்தை மாற்றிக்கொண்டான் . யாஷ் இப்பொழுது பேய் அறைந்தார் போல் அமர்ந்து இருந்தான் .

அவனை பார்த்த கண்ணன் கண்ணில் சிரிப்புடன் அவனையே பார்த்தான் .

யாஷ் தன்னிலை அடைந்து ராஜின் பக்கம் திரும்பி "பெரியப்பா பெரியம்மாவை நீங்க எப்படி கூப்பிடுவீங்க " என்று குழப்பத்துடன் கேட்டான் .

நிஷு ஒரு புரியாத பார்வையை அவனின் பக்கம் செலுத்தி "எதுக்கு யாஷ் இப்ப ? " என்று கேட்டான் .

கண்ணன் மனதில் ' ஹஹா பயபுள்ள எதையோ கண்டுபிடிச்சிடுச்சோ ' என்று எண்ணினான் . ராஜ் புன்னகையுடன் "ரஞ்சி " என்று நிறுத்தி நிதானமாக கூறினார் .

யஸ்வந்த் சட்டென்று எழுந்து விட்டான் நிஷு மேலும் குலம்பினான். கண்ணன் பக்கம் வந்த யாஷ் "நான் நினைக்கிறது உண்மையா இருந்தா அதை பலபேர் தாங்கிக்க மாட்டாங்க அண்ணா ...இதுக்காக நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க " என்றான் .

கண்ணன் யஸ்வந்த்தை ஆழ்ந்த பார்வை பார்த்து " யாஷ் நீங்க ஆடின ஆட்டத்தின் முடிவை நான் தீர்மானித்தேன் இதுல என்ன தப்பு இருக்கு " நியாயவாதியாக வினவினான் கண்ணன் .

கண்ணன் சொல்லும் கூற்றில் இருந்த உண்மை புரிந்தாலும் அதை ஒத்துக்கொள்ளாமல் கோபத்துடன் வெளியே சென்றான் யாஷ் . நிஷு முற்றிலுமாக குழப்பமான மன நிலையில் யஸ்வந்த்தை தொடர்ந்து வெளியே சென்றான் .

ராஜ் கண்ணன் பக்கம் திரும்பி "கண்ணா இனி என்னப்பா நடக்கும் எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் "
என்றார்

"அப்பா கூட இருக்கும் பொழுது ஒருவரின் அருமை புரியாது அதே ஒருவர் நம்மை விட்டு பிரிந்தால் அவர் பின் ஓடி பிரயோஜனம் இல்லை ....இவன் செய்த அனைத்து தப்பயும் பொறுத்துக்கொண்டு இவனை முழுமனதாக ஒருவள் ஏற்றுக்கொண்டால் எப்படி எல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும் ...ஆனால் இவனோ ஏதோ அரைகுறையாக புரிந்த விஷயத்தின் தாக்கத்தில் ஒரு பெண்ணை எவ்வாறு நடத்தி உள்ளான் ...இது பத்தாது இனி தான் அவன் வாழ்வில் தொடங்குகிறது உண்மையான ஆட்டம் ." தனது கருத்தில் மிகவும் அழுத்தத்தை கூட்டி சொன்னான் கண்ணன் .

....................................................................................

மும்பையில் தனது அலுவலகத்தில் முழுமூச்சாக வேலை செய்துகொண்டு இருந்த ஜெயதியின் கவனத்தை கவர்ந்தது அவளின் அலைபேசி அதை எடுத்து காதில் பொருத்தினாள் அவள் .

"எப்படிம்மா இருக்க " என்றது எதிர் முனையில் இருந்த குரல் .

"நல்ல இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க " மிகவும் மரியாதையுடன் ஒலித்தது ஜெயதியின் குரல் . அங்கே அதே அறையில் தனது நாற்காலியில் அமர்ந்து இருந்த ஷில்பா ஜெயதியின் மரியாதையான குரலில் யார் அழைத்திருப்பது என்பதை உணர்ந்துக் கொண்டாள் .

"குழைந்தை எப்படி இருக்கா " என்றது அந்த குரல் .

ஜெயதியோ சோர்வுற்ற குரலில் "இருக்கா ...இந்த வயசில் அவளுக்கு புரிந்த வரையில் சில விஷயங்களை புரிந்துக்கொண்டு அவளையே வருத்திக் கொள்கிறாள் "

அவளின் குரலில் இருந்த சோர்வை உணர்ந்த எதிர் முனைக்கு உரியவர் "எல்லாம் நல்லதாவே நடக்கும் அந்த சின்ன தேவதை எங்கள் வீட்டின் வரம் ! ஒருமுறை யாரேனும் அவளை பார்த்தாள் அவளை அந்த நொடியே கூட அழைத்து வந்து விடுவார்கள் !! ...அவளுக்காக இங்கு பல சொந்தம் காத்துக்கொண்டு இருக்கிறது "

"பல சொந்தம் இருந்தும் என்ன பிரயோஜனம் இரண்டு வயதில் அந்த குழந்த மனதளவில் படும் துன்பம் கொடுமையானது ...கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்க வேண்டிய நபரிடம் இருந்து வந்தாலொழிய அந்த குட்டி தேவதையின் சிரிப்பு மலரும் ." என்று வருத்தமான குரலில் கூறினாள் அவள் .

"அதுக்குத்தான் கூப்பிட்டேன்மா அவர்களை இங்கு வரவைத்துவிடலாம் " என்றது அந்த குரல் .

அந்த குரல் சொன்ன செய்தியில் உறைந்த ஜெயதி "நிஜமாவா !! அவர்கள் இங்கு வந்தால் தேவை இல்லாத துயர் தான் மிஞ்சும் " என்றாள் அதிர்ச்சி விலகாமல் .

"இல்லை நான் எல்லாம் நல்ல விசாரித்துவிட்டேன் ... டாக்டர் கிட்ட பேசிட்டேன் . அவர்கள் இங்கு நிச்சயம் வரலாம் வரவேண்டும் இந்த ஆட்டம் முடிவை நோக்கி செல்கயில் நீ அதை தடுக்காதே " கண்டிப்புடன் கூறியது அந்த குரல் .

"இல்லை நான் அவளின் உடல் நிலை கருத்தில் கொண்டு தான் பேசினேன் . எனக்கும் இந்த ஆட்டத்தை ஆடி சலித்துவிட்டது . எதற்காக ஓடுகிறேன் என்றே தெரியாமல் ஓடிக்கொண்டு இருக்கிறேன் " என்றாள் ஜெயதி .

"ஏன் இந்த சோர்வு நியாயத்தை கேட்டு என் முன் கம்பீரமாக நின்ற அந்த சிறு பெண் எங்கே ... புத்தி கூர்மையுடன் இந்த ஆட்டத்தை ஆடிய என் அன்பு தங்கை எங்கே " எதிர் முனையில் இருந்த குரல் ஒரு வித பாசத்துடன் ஒலித்தது .

"நீங்க இல்லைனா என்ன பண்ணிருப்போம் என்றே தெரியாது . உங்களால் மட்டும் தான் மூன்றாடுக்கு பிறகான இந்த விளையாட்டு ஆரம்பித்தது . உங்களை நம்பி மட்டுமே நான் இதில் முழு மூச்சாக இறங்கினேன் உங்கள் பேச்சை என்றும் மீறமாட்டேன் நான் அவர்களை வரவைக்கிறேன் " என்று கூறி அழைப்பை துண்டித்தாள் ஜெயதி .

அதற்குள் ஷில்பா எழுந்து வந்து "பயணத்துக்கான ஏற்பாடை பண்ணிட்டேன் நீ அவங்களுக்கு கால் பண்ணி இன்னும் நான்கு நாட்களில் கிளம்ப தயாராக சொல்லு " புன்னகையுடன் கூறினாள் அந்த ஆருயிர் தோழி .

ஷில்பாவை திரும்பி பார்த்த ஜெயதி "தேங்க்ஸ் ஷில்பா ...நான் இந்தியா போறேன் சொன்ன உடனே எதைப்பத்தியும் யோசிக்காமல் என்னோடவே வந்துட்ட இப்ப கூட நான் சொல்லாம நீயே எல்லாம் ஏற்பாட்டையும் பண்ணிட்ட " நெகிழ்வான குரலில் கூறினாள் ஜெயதி . அவளின் நெகிழ்விற்கான காரணம் தனக்காக தனது தோழி பல லட்சங்களில் வரும் சம்பாத்தியத்தை விட்டு ஜெயதி ஒருத்திகாக இந்தியா வந்ததே காரணம் .

.................................................................................................

அது ஒரு அழகான திங்கட்கிழமை . பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் விடிந்தது . இது வரை குழந்தை ஜெயதி ,அவளின் அன்னை லீலாவதி, மேலும் ஷில்பா, அவர்கள் வீட்டில் குழந்தைக்காக வேலையில் அமர்த்த பட்டிருக்கும் நபர் என்று சிலரோடு மட்டுமே பழகிய இருக்கிறாள் ரக்ஷிதாவிடம் எவ்வாறு பழகுவாள் என்று புரியாமல் தவித்தாள் ஜெயதி . மேலும் முன் போல் குழந்தையை காயப்படுத்தி விடுவாளோ என்ற கவலை அவளை ஆட்கொண்டது . ஆனால் என்ன செய்ய முடியும் எத்துணை நாள் தான் இவ்வாறு குழந்தையை மறைத்து வைக்க முடியும் என்ற முடிவுடன் விமான நிலையம் நோக்கி தங்கள் வீட்டில் இருக்கும் இன்னோவா வாகனத்தில் ஷில்பாவை ஏற்றிக்கொண்டு சென்றாள் .

விமான நிலையத்தில் ரக்ஷிதா மற்றும் லீலாவதியின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தனர் ஜெயதி ஷில்பா மற்றும் அந்த இரண்டு வயது தேவதை .

அப்பொழுது சரியாக தங்களின் கல்லூரி தோழனை அழைத்துச்செல்ல வந்த யஸ்வந்த்தின் கண்ணில் பட்டாள் அந்த குழந்தை . அவளை இப்பொழுது பார்வையில் ஒரு வித உரிமையுடன் நோக்கினான் யஸ்வந்த் .

அந்த குழந்தையை நெருங்க அவன் தனது கால்களை முன்னே எடுத்து வைக்க நினைக்கையில் "ரஞ்சி குட்டி " என்ற குரல் அவனின் கவனத்தை கவர்ந்தது .

அந்த குரல் வந்த திசையை நோக்கினான் யஸ்வந்த் அப்பொழுது அங்கே கைகளை விரித்துகொண்டு நின்றிருந்தார் லீலாவதி . யஸ்வந்த்தால் லீலாவதியை அடையாளம் காண முடிந்தது பலமுறை பத்திரிகையில் அவரின் புகைப்படத்தை கண்டிருக்கிறான் . அவரின் கைகளில் ஓடிச்சென்று பாந்தமாக அடங்கினாள் அந்த 'ரஞ்சி குட்டி ' என்று அழைக்கப்பட்ட அந்த சின்ன தேவதை .

ஏற்கனவே யஸ்வந்த் யூகித்து இருந்த விஷயம் என்றாலும் அதை நிஜத்தில் உணரும் தருணத்தில் அவன் அதிர்ச்சியாகினான் . அவனின் அதிர்ச்சியை கூட்டும் வகையில் லீலாவதியின் பின்னே வந்து நின்றாள் ரக்ஷிதா .'இவங்க எப்படி ...அதும் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் ' என்று யஸ்வந்த் எண்ணிக்கொண்டு இருக்கையிலே ரஞ்சி பாட்டியின் கைகளில் இருந்து இறங்கி கண்களில் தேங்கிவிட்ட கண்ணீருடன் ஜெயதியிடம் தாவினாள் . உணர்ந்தாற்போல் ஜெயதியும் ரஞ்சியை அன்போடு அனைத்துக் கொண்டாள் .

சரியாக அந்த சமயம் உள்ளே வந்தான் நிஸ்வந்த் பல முறை யாஷுக்கு அழைப்பு விடுத்து பார்த்து பதில் இல்லை என்றவுடன் உள்ளே வந்த நிஷு கண்டது உறைந்து நிற்கும் தனது தம்பியை . யாஸ்வந்தின் பார்வை சென்ற திக்கை பார்த்த நிஸ்வந்த் முழுதாக அடிபோனான் . அவனின் பார்வை சொன்ன செய்தியை அவனால் நம்ப முடியவில்லை .

அதற்குள் அவர்கள் அனைவரும் அவ்விடம் விட்டு பாதுகாவலர்களின் உதவியுடன் நகர்ந்தனர் . அதில் பார்வையின் திசையை திருப்பிய யஸ்வந்த் அங்கு நிஸ்வந்த் சற்று தள்ளி நிற்பதை கண்டு அவனின் அருகில் சென்று தோழில் கை வைத்தான் .

நிஸ்வந்த் கண்களில் கண்ணீருடன் "அது அவதான " என்றான் ஏக்கமாக . யஸ்வந்த்திற்கு அவனின் நிலை புரிந்தது ஆம் என்னும் விதமாய் தலை ஆடி வைத்தான் . அவர்களின் நண்பனும் வந்து சேர்ந்தான் தங்களை ஓரளவு சுதாரித்துக் கொண்டு நண்பனுடன் இயல்பாக இருப்பது போல் பேச ஆரம்பித்தனர் . இருந்தும் நிஷுவின் கலக்கம் மறைந்தபாடில்லை அதை யஸ்வந்த்தும் கவனிக்க தவறவில்லை .


அத்தியாயம் - 7

இரட்டையர்கள் இருவரும் தாங்கள் அறிந்த செய்தியில் ஸ்தம்பித்து இருந்தனர் . நிஸ்வந்தால் அவன் அறிந்துகொண்ட செய்தியை ஜீரணிக்க இயலவில்லை . அந்த செய்தி அவனுக்கு அதிர்ச்சியும் கூட !! . அவளை தூரத்தில் பார்த்து அவள் உயிருடன் இருப்பதை கண்டு சந்தோஷிப்பதா ? இல்லை அவளின் தோற்றத்தை கண்டு வருத்தமுறுவதா ? என்ற குழப்பத்தில் இருந்தான் .

அந்த கண்களில் உயிர்ப்பு இல்லை . சிகப்பாக அதில் ப்ளஷ் போடாமலே ரோஜா நிறம் கொண்ட அழகிய இரண்டு குண்டு கன்னங்கள் இன்று எழும்போடு ஒற்றி போய் கண்களின் கீழ் கருவலயத்துடன் , அமுல் பேபி போன்ற உடல் வற்றி ஏதோ சப்பிட்டே பல நாள் ஆனதை போன்ற தோற்றத்துடன் நிச்சயமாக அவன் எதிர்பார்க்கவில்லை . அதில் அவளின் தோற்றத்தில் தெரிந்த முக்கிய மாற்றம் அவனை கண்கொண்டு பாக்க விடாமல் குத்தியது .

யஸ்வந்த் தனக்கு தேவையான செய்திகளை சேகரித்து வைத்துக் கொண்டான். இப்பொழுது அதை நிஸ்வந்திடம் கூற அவன் தயாராக இல்லை . நிஸ்வந்த் முதல் கட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வர சற்று கால அவகாசம் தேவை என்று எண்ணினான் யாஷ் .

...............................................................

அங்கு ஜெயதி தனது வீட்டில் தாயுடனும் தங்கையுடம் தனது நேரத்தை செலவிட்டாள் . ரக்ஷிதாவிடம் இப்பொழுது எல்லாம் தெரிந்த மாற்றம் ஜெயதியை நிம்மதியுறச்செய்தது .

எங்கே குட்டி ரஞ்சியை கண்டவுடன் முன்போல் ஏதேனும் விபரீதம் நடந்துவிடுமோ என்று அஞ்சினால் அவ்வாறு ஒன்றும் நிகழாமல் இருந்ததே அவளின் மனதிற்கு பெரும் நிம்மதியாக இருந்தது .

லீலாவதி முடிந்தவரை ரஞ்சி குட்டியை தன்னுடனே வைத்துக்கொண்டார் . ரக்ஷிதாவையும் ஜெயதியுடன் தொழிலில் இறக்கினர் . ஷில்பா அந்த சகோதிரிகளுக்கு உறுதுணையாக நின்றாள் .

ரக்ஷிதா தொழிலில் முனைப்பாக இருப்பதை கண்ட ஜெயதி மகிழ்ச்சியுற்றாள் . ஜெயதியின் உதவி இல்லாமலே ரக்ஷிதா எதிரியின் பலம் பலகீனம் கொண்டு நேரடியாக தாக்கினாள் . அதன் பலன் ஆர் ஆர் குரூப் ஒப் கம்பனிஸின் பங்கு சரிவு மற்றும் பெரும் இழப்பு .

அன்று காலை ஜெயதியின் அலைபேசி ஒலித்தது எடுத்து பார்த்தவள் புன்னகையுடன் அழைப்பை ஏற்று காதில் வைத்து " நீங்க சொன்னது போல் நல்ல மற்றம் தெரிகிறது உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை " என்று ஆர்பரித்தாள் .

"ஹே ஜெயதி கூல் ....நான் விசாரிக்காம ஒரு முடிவு எடுக்க மாட்டேன் சரியா ...! சரி சொல்லு எங்கள் வீட்டு மஹாராணியும் இளவரசியும் எப்படி இருக்கிறார்கள் " என்றது எதிர் முனையில் இருந்து வந்த குரல் .

"அவர்களுக்கு என்ன நன்றாக இருக்கிறார்கள் . என்ன குழந்தை தான் அவளுடன் ஓட்டமாட்டேன் என்கிறாள் . இவளும் சிறிதும் அதை பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை ." வருத்தத்துடன் வந்தது ஜெயதியின் குரல் .

"முன் போல் ரகளை இல்லை அல்லவே .....அனைத்திற்கும் காலம் கனிந்து வரவேண்டும் . குழந்தைக்கு தாயாக நீ இருக்கும் பொழுது வேறு என்ன கவலை " பெருமிதத்துடன் வந்தது அந்தக் குரல்.

"ஹ்ம்ம் அந்த நல்ல நேரம் வரும் வரை காத்திருக்கேன் " என்று கூறி அழைப்பை துண்டித்தாள் ஜெயதி .

ரக்ஷிதா மற்றும் லீலாவதி வந்து இன்றோடு ஒரு மாதம் முடிந்தது . இன்று சகோதிரிகள் இருவரும் ஒரு முக்கிய அலுவலக விஷயமாக ஒரு கூட்டத்திற்கு செல்ல வேண்டும் . இப்பொழுது எல்லாம் ரக்ஷிதா ஏ ஜே குரூப் ஒப் கம்பெனிஸில் இன்றியமையாதவளாக மாறிப்போனாள் .

மாலை ஒரு விருந்திற்கு செல்லவேண்டும் அது தொழில் முறை நண்பர்களுக்கு ஒரு தொழில் அதிபர் குடுக்கும் விருந்து . அதை தவிர்க்க முடியாத காரணத்தினால் லீலாவதி அவர்கள் குழந்தையுடன் ஷில்பாவையும் பாதுகாவலர்களையும் அழைத்துக்கொண்டு சென்றார் .

மாலை மங்கிய நேரத்தில் மும்பையில் இருந்து சற்று தள்ளி இருந்த அந்த பெரிய வீட்டில் ஆட்டம் ,பாட்டம், மது ..இரவு உணவு என்று அணைத்து அம்சங்களுடன் ஒரு விருந்து நடைபெற்றுக்கொண்டு இருந்தது . அதில் பல பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர் .

பெண்கள் ஆடம்பர உடைகளுடன் கழுத்தில் கை காதுகளில் ஜொலிக்கும் நவரத்தினங்களுடனும் வளம் வந்தனர் . ஆண்கள் தொழில் முறை நண்பர்களுடன் எதிர்காலத்தில் தொழில் செய்வது பற்றியும் மது கோப்பைகளுடன் இருந்தனர் .

அங்கு கம்பீரமாக சந்தன நிற சேலையில் தங்க ஜரி சிறிதாக ஆனால் மிகவும் அழகாக நெய்யப்பட்ட புடவையில் கண்களில் கண்ணாடியுடன் கழுத்தில் முகப்பு வைத்த சங்கிலியுடன் உள்ளே நுழைந்தார் லீலாவதி . அவரை கண்டவர்கள் அவரின் தீட்சண்யமான பார்வையிலும் கம்பீரத்திலும் தங்களை மறந்து மரியாதையை செலுத்தினார்கள் .

லீலாவதி ஷில்பாவை தன்னுடன் இருக்கச்செய்து ஒரு முக்கிய பிரமுகரின் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தார் .

அப்பொழுது அவரின் கைகளில் இருந்து நழுவிய ரஞ்சி குட்டி தனது பிஞ்சு கால்களை எட்டிப்போட்டு அங்கு ஆறடி உயரத்தில் நின்று கொண்டு இறந்தவனின் கால்களை அருகில் சென்று சுரண்டினாள் .

அந்த பிஞ்சு கைகளின் ஸ்பரிசத்தில் கீழே குனிந்த அவன் முகம் மலர்ந்தது . அந்த குழந்தையை பார்த்த அவன் கண்கள் பணித்தது . ரோஜா மொட்டு போன்று கொழுக் மொழுக் என்று இருந்த குழந்தை பிங்க் நிற இளவரசி கவுன் அணிந்து குழந்தைகளுக்கென செய்யப்படும் வைர அணிகலன்கள் அணிந்து அழகாக அவனை பார்த்து அரிசி பல் தெரிய சிரித்தாள் .

அதில் கட்டுண்ட அவன் குழந்தையை கைகளில் அள்ளிக்கொண்டான் . அப்பொழுது அங்கே வந்த இன்னொருவன் "நிஷு உனக்கு .... " ஏதோ கேக்க வந்தவன் நிஸ்வந்த் குழந்தையை தூக்கி கொண்டு நிர்ப்பதைக் கண்டு ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாகினான் .

குழந்தையோ "நீங்க ?? " என்று யஸ்வந்த்தை பார்த்து இழுத்து கேட்டாள் . ஆம் குழந்தையை தூக்கியது நிஸ்வந்த் அப்பொழுது அங்கே வந்தது யஸ்வந்த் .

"நீயே கண்டுபிடி பார்ப்போம் ...? " என்றான் யாஷ் கண்களில் சிரிப்புடன் .

"ஹ்ம்ம் யாஷு " என்றது அந்த சின்ன சிட்டு .

"எஸ் ரைட் பேபி " என்று கூறி சிரித்தான் யஸ்வந்த் .

அப்பொழுது நிஸ்வந்த் எதோ கேக்க முற்படுகையில் ...நிஸ்வந்த் பக்கம் திரும்பிய அந்த தேவதை "அப்ப இது நிச்சு அப்பா !! " என்று மழலையில் கூறி ஆர்பரித்தாள் .

நிஸ்வந்த் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தான் . சற்று சுதாரித்து நடுங்கும் குரலில் "உங்க பெ..பெயர் என்ன ? " என்றான் .

"அய்யோ இது தெரியாதா நான் ரஞ்சி குட்டி என் பாட்டியோட பெயர் ...ரஞ்சினி நிச்சுவாந்த ..." அதே மழலையில் கூறி கிளுக்கி சிரித்தாள் .

நிஸ்வந்த்தின் கைகள் தளர்ந்தது குழந்தையை அவன் தவற விடுவதற்குள் யஸ்வந்த் பிடித்துவிட்டான் . அப்பொழுது எங்கு இருந்து வந்தாளோ ஷில்பா குழந்தையை தன் கைகளில் வாங்கிக்கொண்டு இருவரையும் முறைத்தாள் .

"ஷில்பா ஆண்ட்டி இது நிச்சு அப்பா " என்றாள் ரஞ்சி குட்டி .

ஷில்பா கொதிநிலைக்கு சென்றாள் நிஸ்வந்தை முறைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள் .

லீலாவதி அப்பொழுது ஷில்பாவை எதிர் கொண்டு "ஷில்பா இது சரி இல்லை " என்றார் கண்டிக்கும் குரலில் .

"எனக்கு அதெல்லாம் தெரியாது மாம் ...ஜெயதி உடனே நம்மளை கிளம்பச் சொன்னா ...சோ நீங்களும் கிளம்பனும்" என்று கூறி பாதுகாவலர்களுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தாள் .

எவ்ளோ நேரம் குழந்தை சென்ற திசையையே பார்த்து நின்றான் என்று தெரியாது . யஸ்வந்த்திற்கு தான் நிஸ்வந்தை அவ்விடம் விட்டு நகர்த்தி அழைத்து வரும் வரை வியர்த்துவிட்டது .

.............................................................................................................

ஜெயதி புயல் வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்தாள் . ரக்ஷிதா அவளின் பின் நிதானமாக வந்தாள் .

நீள்விரிக்கையில் அமர்ந்து இருந்த லீலாவதியின் முன் சென்ற ஜெயதி "அம்மா என்ன நினைச்சுட்டு இருக்கீங்க .....ஏன் இப்படி செஞ்சீங்க , பட்டது போதாதா ? " என்று பொரிந்து தள்ளினாள் .

அங்கு ஷில்பா நிற்பதை கண்ட ஜெயதி அவளிடம் காய்ந்தாள் "ஷில்பா வாட் தி ஹெல் ஹாஸ் ஹாட்பேண்ட் ...நீ இருந்து எப்படி குழந்தையை அவர்களிடம் செல்ல அனுமதித்தாய் ? " என்று அனல் கக்கும் பார்வையுடன் கேட்டாள் .

"இல்லை ஜெயதி மாம் ஹெல்ட் மை ஹாண்ட்ஸ் ...என்னை அவங்களை நெருங்க விடலை " தலை கவிழ்ந்து கூறினாள் ஷில்பா .

"மாம் என்ன நினச்சு இதெல்லாம் பண்றீங்க .... " திரும்ப தாயிடம் காய்ந்தாள் .

லீலாவதியோ பொறுமையாக பதில் கூறினார் "உரிமை உள்ளவர்களிடம் இருந்து எத்தனை நாள் மறைப்ப ?...எப்படியும் சேரவேண்டிய இடத்தில சேர்ந்து தானே ஆக வேண்டும் !! " என்றார் .

ஜெயதி கொதிநிலையில் உச்சிக்கே சென்றாள் "அம்மாஆ ... " என்று அவள் கத்தினாள் .

நல்லவேளை குழந்தை அலுப்பில் தூங்கிவிட்டாள் . ரக்ஷிதா அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவள் "அம்மா சொல்றது சரிதான் ஜெயதி " என்றாள் .

ஜெயதி கண்களை விரித்து அவளை பார்த்தாள் . இத்தனை நாள் அக்கா என்றே அழைத்து வந்தவள் இன்று பெயர் சொல்லி அழைப்பதில் சிறுவயது நியாபகங்கள் துளிர்த்தது . மேலும் இன்னொரு அதிர்ச்சியாக அவள் கூறிய செய்தி "ரக்ஷி ஆர் யு மேட் " என்றாள் ஜெயதி .

"ஆம் கிலீர் ஜெயதி ரஞ்சி எப்படியும் அவர் மகள் இல்லை என்று ஆகிவிடுமா இல்லை நான் தான் அம்மா இல்லை என்று கூறி விட முடியுமா " என்றாள் ரக்ஷிதா விரக்தியுடன் .

"ரக்ஷி " என்று ஆரம்பித்த ஜெயதியின் குரலை இடை இட்டது அவளின் குரல் "அபி ...கால் மீ அபிதா " என்றாள் ரக்ஷிதா எனும் அபிதா .

அபியின் நிமிர்வை கண்டு சந்தோஷித்தாள் ஜெயதி "அபி !! "என்ற கூவலுடன் ஓடிச்சென்று அவளை அனைத்துக்கொண்டாள் .

...........................................................................................

எப்படியோ நிஸ்வந்தை அவ்விடம் விட்டு அழைத்து வந்துவிட்டான் யஸ்வந்த் . வீட்டிற்குள் நுழைந்த நொடி நிஷு யாஷ் முன் நின்று "அவள் ...அவள் என் குழந்தையா ? " கண்களில் முழு உயிரையும் தேக்கி வைத்துக்கொண்டு கேட்டான் அவன் .

யாஷ் 'ஆம்' என்னும் விதமாய் தலையை மேலும் கீழும் ஆட்டினான் .

நிஸ்வந்த் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டான் "எப்படி யாஷ் " என்றான் குரலில் வலியுடன் .

"எனக்கு இது முன்னாடியே தெரியும் ....முதலில் ஒரு யூகம் தான் அன்று விமானநிலையத்தில் வைத்து உறுதியானது ." என்றான் யாஷ் .

நிஸ்வந்த்திற்கு இது பெரும் அதிர்ச்சி அவன் கண்கள் சொன்ன செய்தியை புரிந்து கொண்ட அவனின் இன்னொரு உயிரானவன் "இந்த குழந்தையை முன்பே இருமுறை பார்த்தேன் அப்பொழுது அவளின் பெயர் ஆஞ்சி என்று கூறினாள் மேலும் உன்னை பற்றி கேட்டாள் ...நான் குழம்பினேன் அப்பொழுது சரியாக கண்ணன் அண்ணா முன் பெரியப்பா பெரியம்மாவை ரஞ்சி என்று அழைத்தார் எனக்கு அங்கு பெரும் சந்தேகம் துளிர்த்தது ...எனக்கு தெரிஞ்ச வரையில் கண்ணன் அண்ணாக்கு இது ஆரம்பத்தில் இருந்தே தெரியும் ....அன்று விமான நிலையத்தில் அவளின் முழுப்பெயர் அழைத்து மிசெஸ் லீலாவதி அவர்கள் உறுதி படுத்தினார் " யாஷ் பொறுமையாக கூறினான் .

நிஸ்வந்த் முழவதுமாக உடைந்து போனான் . அவர்களின் இனிமையான நாட்களின் பொழுது ரஞ்சினி என்ற பெயர் பெண் பிறந்தால் ராஜ்குமார் என்ற பெயரை ஆண்பிள்ளை பிறந்தால் வைக்க வேண்டும் என்று அவளிடம் கூறியது நியாபகத்தில் வந்து வதைத்தது . இரட்டையர்கள் இருவரும் பெரியப்பா பெரியம்மா மேல் அளவில்லா அன்பு வைத்தவர்கள் ஆகையால் இப்படி ஒரு ஒப்பந்தம் இருவருமே போட்டனர் . ராகினி மற்றும் பிரவீன் சந்தோசமாக அதை சிறு வயதில் இருந்தே ஆமோதித்தனர் .


அத்தியாயம் -8

அடுத்தநாள் ரக்ஷிதா என்னும் பாவை அபிதாவாக கண்முழித்தாள் . அபிதாவாக அவளின் மனம் அவளை உணரச்செய்த பிறகு அவளின் மென்மையான மனம் தனது மகளை முதலில் தேடியது . தனது வேலைகளை முடித்துக் கொண்டு கீழ்தளத்தில் இருக்கும் மகளின் அறைக்கு சென்றாள் .


இத்தனை நாட்களில் மகளை கண்டவுடன் வராத ஒரு உரிமை உணர்வு பாசம் கனிவு அனைத்தும் ஒரு சேர கலந்து தனது பார்வையை இம்மியளவும் திருப்பாமல் தனது மகளை கண்டாள் . ரஞ்சினி குட்டியை பார்த்துக்கொள்ளும் பெண் அபிதா உள்ளே நுழைந்தவுடன் நாகரிகம் கருதி சத்தம் இல்லாமல் வெளியேறினார் .


அபிதாவின் கால்கள் நடுங்கியது முதல் முறை தன் குழந்தையை ஒரு தாயாக நெருங்கினாள் . இத்துணை நாட்கள் அவளிடம் இருந்து ஒதுங்கி செல்லும் அந்த தேவதை இவளின் வரவை கண்டு என்ன விதமான எதிர்வினை ஆற்றுவாள் என்ற பயத்துடன் நெருங்கினாள் .


ரஞ்சினி இன்னும் துயில் கலையாமல் போர்வைக்குள் அன்றில் அலர்ந்த மலராக முகத்தில் சின்ன புன்னகையுடன் தூங்கிக்கொண்டு இருந்தாள் . அபிதா கண்களில் இரண்டு ஆண்டுகாலத்தின் பிரிவை ஈடுகட்டும் விதமான உணர்ச்சிப்பெருக்குடன் தனது மகளை கண்டாள் . அருகில் சென்று அமர்ந்த அபிதா நடுங்கும் கரங்கள் கொண்டு ரஞ்சியின் தலையை மிருதுவாக கோதினாள் .


அதில் தனது தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்த அந்த சின்ன சிட்டு தூக்க கழகத்தில் சுகமாக புரண்டு அபிதாவின் மடியில் படுத்தாள் . அபிதாவின் மூச்சு ஒரு நொடி நின்று சீரானது . இவை அனைத்தையும் வழமையாக ரஞ்சினியை காண வரும் ஜெயதியின் கண்களில் விழுந்தது . ஜெயதி எதிலும் தலை இடாமல் ஓரமாக நின்று தாய் மகளின் நெருக்கத்தை நிறைந்த மனதுடன் கண்டுகொண்டு இருந்தாள் .


எவ்ளோ நேரம் மூவரும் அதேபோல் இருந்தனரோ ... சற்று நேரத்தில் ரஞ்சினி கண்முழித்தாள் . குழந்தை மனம் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாது . திட்டினால் சிணுங்கவும் அதட்டினால் அளவும் தெரியும் சற்று நேரத்தில் அந்த குழந்தை இயல்புக்கு மாறி அடித்தவரையே கொஞ்சும் குணம் கொண்டது .


தூக்கத்தில் இருந்து முழித்த ரஞ்சினி எழுந்து அமர்ந்து கண்களை தேய்த்துக்கொண்டே "குட் மோர்னிங் அம்மா" என்றாள் . அபிதா இன்பமாக அதிர்ந்தாள் . கண்களில் மிச்சம் இருந்த தூக்கத்துடன் உதட்டில் சிரிப்புடன் "அபிமா குட் மோர்னிங் சொன்னா நீங்களும் சொல்லணும் அதுதான் குட் ஹாபிட் " என்றாள் மழலையில் .


அபிதா கண்களில் தேங்கிய நீருடன் "கு குட் மார்னிங் குட்டிமா " என்றாள் . சிறிது தெளிந்தவுடன் குழந்தை ஒரு நொடி அருகில் இருக்கும் அபியை கண்டு துணுக்குற்றாள் . உடனே என்ன தோன்றியதோ குழந்தை "பாட்டிய்ய்ய் " என்று அலறிக்கொண்டே கையில் இருந்த மினி பொம்மையை தூக்கிக்கொண்டு வெளியே ஓடினாள் .


அபி மனதளவில் மறித்து போனாள் . நன்றாக பேசும் குழந்தை தன்னை முழு நினைவில் காணும் பொழுதான ஒதுக்கத்திற்கு தான் தானே கரணம் என்று அப்படியே கட்டிலில் அமர்ந்து கதற துடங்கினாள் .


ஜெயதி அபியின் அருகில் வந்து அவளின் தோளில் கை வைத்து "அபி " என்றாள் மென்மையாக .


"ஜெயா நானே என் மகளை என்னிடம் இருந்து ஒதுங்குவதற்கு காரணம் ஆகிட்டேனே " என்று ஜெயதியின் வயிற்றை கட்டிக்கொண்டு தேம்பினாள் .


"அபி அவ குழந்தை டி முழிச்சு பார்த்த ஒடனே எப்படி பேசினா ஏதோ சில நினைவுகள் ...அவள் உன் மகள் நிச்சயம் உன்னை ஏற்றுக்கொள்வாள் " ஆறுதலாக கூறினாள் ஜெயதி .


அபி ஏதும் சொல்லாமல் எழுந்து சென்று தனது அறைக்குள் புகுந்து கதைவடைத்து கண்ணீர் வற்றும் வரை அழுதாள் . சற்று நேரத்தில் தன்னை நிலை படுத்திகொண்டு முகத்தை கழுவி அலுவலகம் செல்லுவதற்கு ஏற்ற உடையுடன் கீழே உணவு மேஜைக்கு சென்றாள் .


அங்கு ஜெயதி குழந்தைக்கு இட்லியை பிட்டு சாம்பாரில் தொட்டு ஊட்டிக்கொண்டு இருந்தாள் . குழந்தை சமத்தாக மேஜை மேல் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டு இருந்தாள் .


அங்கே வந்த அபி இருவரையும் கண்டு ஒதுங்கி செல்ல எத்தனித்தாள் . ஜெயதி அபியின் கரங்களை பிடித்து அருகில் அமரவைத்தாள் . அபி மனதில் ஒருவித பயத்துடன் அமர்ந்தாள் .


"ரஞ்சி குட்டிக்கு ஜெயாமா என்ன சொல்லிக்கொடுத்தேன் " என்று ஆரம்பித்தாள் ஜெயதி .


"என்ன சொன்னிங்க" மழலை மொழியில் வந்தது பதில் .


"யாரையும் அழவைக்க கூடாதுனு சொல்லி கொடுத்தேனா இல்லையா " அழகாக குழந்தைக்கு ஏற்றவாறு வினவினாள் ஜெயதி .


'ஆமாம் ' என்னும் விதமாக தலையை ஆட்டினாள் ரஞ்சினி .


"அப்ப ஏன் பப்பு குட்டி அபிமாவை அளவச்சீங்க "


"நானா நான் ஏதும் சொல்லலையே " அந்த இரண்டு வயது குழந்தை நடப்பது புரியாமல் கேட்டாள் .


"அது நீங்க மார்னிங் அபிமா உன் பக்கத்துல இறுக்கப்ப ஓடிபோய்ட்டீல அதான் அபி அம்மா அழுதாங்க " சொன்ன ஜெயதியை மிரட்சியாக பார்த்தாள் குழந்தை .


"அது அபி அம்மா சொன்னா அவங்க அடிப்பாங்க தள்ளி விடுவாங்க அதான் " பயத்துடன் தனக்கு தெரிந்ததை கூறினாள் குழந்தை .


தன் மகளை அவனின் மகளாக கண்ட வினையை உணர்ந்த அபி சத்தம் வராமல் அழுதாள் .


அதை பார்த்த குழந்தை ஜெயதியின் காதை கடித்தாள் "ஜெயாம்மா அபிம்மா எதுக்கு அழறாங்க " என்று மழலை மொழியில் கேட்டாள் .


"அது நீங்க பேசலைல அதான் அம்மா அழறாங்க நீங்க பேசுங்க அழமாட்டாங்க " குழந்தைக்கு புரியும் விதத்தில் எடுத்து கூறினாள் ஜெயதி .


"அபிமா !!" குழந்தைத்தனத்துடன் சிரிப்புடன் கூப்பிட்டாள் ரஞ்சினி .


அபி சட்டென்று நிமிர்ந்து குழந்தையை பார்த்தாள் . "நான் உங்க கூட பேசுறேன் ஆனா நீங்க ஒரு ப்ரோமிஸ் பண்ணனும் " என்றாள் ரஞ்சினி .


ஜெயதிக்கு குழந்தையை பற்றி நன்கு தெரியும் விஷம புன்னகையுடன் இருவரையும் பார்த்தாள் . கண்துடைத்து வரவைத்து புன்னகையுடன் நிமிர்ந்த அபி "சொல்லுமா " என்றாள் .


குழந்தை கள்ள சிரிப்புடன் "எனக்கு ...எனக்கு ஐஸ் கிரீம் ...கேக் , சாக்கி , ஜூஸ் , சாக்கி க்ஷேக் எல்லாம் வேணும் இன்னைக்கே ... " கண்கள் மின்ன ஜெயதியையும் லீலாவதியையும் கள்ளத்தனத்துடன் பார்த்துக்கொண்டே கூறினாள் .


லீலாவதியோ இவை அனைத்தையும் பொறுமையுடன் பார்த்தவர் சத்தமாக சிரித்து "அடி ...நீ சரியான ஆளு நாங்க வேண்டாம் சொல்வோம்ன்னு அபிமா கிட்ட ப்ரோமிஸ் வாங்கிட்டு லிஸ்ட் போடறியா " என்று சந்தோசத்துடன் வினவினார் .


அனைவரும் சிரித்துவிட்டனர் . ஷில்பா மன நிறைவுடன் அனைவரையும் பார்த்து அன்றைய நாளுக்கான நாட்காட்டியை எடுத்து இரு சகோதரிகளையும் வேலையில் கவனத்தை திசை திருப்பினாள் .


...........................................................................


நிஸ்வந்த் தன்னவள் தன்னருகில் வந்துவிட்டாள் எப்பாடுபட்டேனும் அவளை நெருங்க வேண்டும் என்று தீர்மானித்து சற்று தொழிலும் கவனத்தை செலுத்த தொடங்கினான் . அவனுக்கு மனது ஒருநிலைக்கு வந்தது . இத்தனை ஆண்டுகாலம் அவர்களின் எதிரி என்று சொல்லிக்கொள்ளும் அளவு எவரும் இல்லை ஆதலால் இவனின் தடுமாற்றம் பெரிதாக தொழிலை பாதிக்க வில்லை அந்த அளவுக்கு அவனின் மனம் அறிந்து யஸ்வந்த் தோல் கொடுப்பான் . ஆனால் இப்பொழுது நடக்கும் தொடர் சறுக்கல் இவர்களை குறிவைத்து தாக்குவது என்று அறிந்த நொடி சற்று குழம்பினான் . அதே தோல்வி தன்னவளின் நிறுவனத்திடம் என்று அறிந்தவுடன் பெருமை கொண்டான் .


அவனுக்கு இருக்கும் ஒரே வருத்தம் தனது மகளின் பிறப்பை கூட அறிய முடியாத பாவி ஆக்கிவிட்டாள் என்பதே .


நிஸ்வந்த் கணினியில் மூழ்கி இருந்த சமயம் உள்ளே நுழைந்த யஸ்வந்த் "கிளம்பு கிளம்பு " என்று நிஸ்வந்த்தை துரிதப்படுத்தினான் .


நிஸ்வந்த் புரியாமல் "என்ன ? யாஷ் எதுக்கு இந்த அவசரம் " என்று புருவத்தின் நடுவே முடிச்சுடன் வினவினான் .


"இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் ஹோட்டல் தாஜில் நீ போயி ஆகணும் " என்று யாஷ் மர்ம புன்னகையுடன் கூறினான் .


"ஹே என்ன புதுசா இப்ப எல்லாம் நீ தான போவ யாஷ் " என்று புரியாமல் கேட்ட நிஸ்வந்த்தை பார்த்த யஸ்வந்த் " நீ தான் போகணும் எதுக்குன்னா ? " என்று கூறி நிறுத்தி அவனின் முகம் பார்த்து "உனக்கு தெரிஞ்சவங்க புடிச்சவங்க கூட மீட்டிங் " என்றான் யஸ்வந்த் .


ஒரு நொடி முழித்த நிஷு மண்டைக்கு மேல் தாமதமாக எறிந்த பல்பு மூலம் அறிந்து நிமிர்ந்து பார்த்தான் அங்கே யஸ்வந்த் இல்லை . அவன் தான் எப்பவோ ஓடிவிட்டானே .


பிறகு நிஸ்வந்த் ஒருவித பரபரப்புடன் நிறுவனத்தின் மேலாளரை அழைத்து அன்றைய மீட்டிங் என்ன என்று கேட்டறிந்து ஒரு வித லப்டப் இதயத்துடிப்புடன் தாஜ் ஹோட்டல் சென்றான் .


நிஸ்வந்த் உள்ளே நுழைகையில் அங்கே அவனுக்கு முன் வந்து அமர்ந்து இருந்த அவளை கண்டு புருவத்தை தூக்கி கடிகாரத்தை பார்த்தான் .


அவளும் அதே நேரம் தனது கைக்கடிகாரத்தை பார்த்தாள் . ஒரு வித சலிப்புடன் முகத்தை கோப்புக்குள் நுழைத்தாள் அந்த சலிப்பிற்கு கரணம் இரண்டு நிமிட தாமதம் . நிஸ்வந்த் ஒரு வித உற்சாகத்துடன் அவளின் எதிரில் சென்று நின்றான் .


அவள் எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்தாள் "ஹாய் மிஸ்ஸஸ் அபிதா " என்றான் சந்தோசத்துடன் .


கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்த அபிதா "வாட் ? " என்றாள் .


"உங்களை தான் மிஸ்ஸஸ் அபிதா நிஸ்வந்த் " என்றான் மீண்டும் .


இப்பொழுது வெளிப்படையாக கோபத்தை காட்டிய அவள் " எஸ்க்கியுஸ் மீ ...ஆம் மிஸ் ரக்ஷிதா ...ரக்ஷிதா ரங்கராஜன் " என்றாள் நிமிர்வுடன் .


அவன் ஏதும் தெரியாததை போல் தோள்களை குலுக்கி கொண்டு அவளின் எதிரில் அமர்ந்தான் .


அருகினில் கோபாவிழிகளுடன் அபிதாக்கு அரணாக நின்று கொண்டு இருந்த ஷில்பா அன்றைய மீட்டிங்கிற்கான அவசியத்தை கூறி ஒப்பந்தங்களை இருபுறம் வைத்து கையெழுத்து வாங்கினாள் . ஆனால் அவனின் விழிகளோ அவளை தவிர்த்து எதையும் கண்டுகொள்ளவில்லை . அந்த ஒப்பந்தத்தையும் சரியாக படிக்காமல் கையொப்பம் போட்டான் .


அதனால் வரும் பின்விளைவுகளை அவர்கள் ஆர் ஆர் கன்ஸ்டருக்ஷன் சந்திக்கும் பொழுது நிச்சயம் அவர்களால் அதை எதிர்கொள்ள முடியாது . இந்த ஒப்பந்தம் முக்கியமாக அவர்களின் மென்பொருள் நிறுவனத்தின் இன்னொரு கிளையை பூனாவில் கட்ட இருப்பதாகவும் அதற்காக ஆர் ஆர் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடுவதுமே . ஏ ஜே குழுமத்தில் கட்டுமான தொழில் இருந்தும் அவர்கள் ஆர் ஆர் குழுமத்தை நாடியதை தீர விசாரிக்க அந்த இரட்டையர்கள் தவறினர் . தனது சகோதரனின் துயர் தீர்க்க யஸ்வந்த்தும் தன்னவளை தன்னருகில் இருத்தி வைக்க நிஸ்வந்தும் உணர்ச்சி பெருக்கில் எதையும் அலசி ஆராயாமல் செய்தனர் . அது எவ்ளோ பெரிய சறுக்கல் என்பதை அவர்கள் உணரும் பொழுது காலம் கடந்து இருக்கும் .


ஏ ஜே குலமத்தின் சார்பாக சொல்லப்பட்டது கட்டுமான துறை அவர்களுக்கு புதிது அவர்களின் மென்பொருள் நிறுவனமே அவர்களின் முக்கிய தொழில் ஆகையால் இத்தகைய பெரும் ஒப்பந்தத்தை இந்திய நாட்டில் அனுபவமிக்க ஆர் ஆர் குழுமத்துக்கு தருவதில் அவர்களுக்கு திருப்தி என்றும் அதற்கு முக்கிய காரணம் லீலாவதி என்று முன்னிறுத்தினர் . லீலாவதியின் தொழில் பக்தி அறிந்த யஸ்வந்த் அதை உண்மை என்று நம்பி அவர்களின் அனுபவம் இல்லாத கட்டுமான நிறுவனத்தை தற்சமயம் நாட சற்றே தயங்குகிறார்கள் என்று முழுதாக நம்பினான் .


ஷில்பாவின் கண்களில் வந்த வெற்றி புன்னகையையும் ரக்ஷிதா எ அபியின் கண்ணில் தெரிந்த க்ரோதத்தையும் காண தவறினான் நிஸ்வந்த் . அவன் அவளைத்தான் அளவிட்டு கொண்டு இருந்தான் .


அவளின் பூசின உடல் வாகு வற்றி ..ரோஜா போன்ற கொலு கொலு கன்னங்கள் எழும்போடு ஒட்டி போய் நவீன பெண்ணிற்கான அம்சத்துடன் பெண்கள் அணியும் கருப்பு நிற கோட் சுய்ட் அணிந்து நிமிர்வுடன் அவளை காண அவனின் நெஞ்சில் ஈட்டியை சொருகியது போல் இருந்தது . அவளின் நிமிர்வு அவனிற்கு கசக்க வில்லை அவன் இழந்துவிட்ட தேவதை பெண்ணை நினைத்து வருந்தினான் . கண்களில் குறும்பு இருந்த இடத்தில வெறும் கோபம் ஆவேசம் என்று அனைத்தும் குடி கொண்டு இருந்தது . மேலும் அவன் மிகவும் நேசித்த அவளின் முடி ....!! அவளின் முடி அவளின் இடை வரை நீண்டு இருக்கும் பட்டு போன்று மிகவும் அழகாக இருக்கும் இப்பொழுதோ ? குட்டையாக வெட்டி கழுத்தை தொட்டும் தொடாமலும் இருந்தது .


அவள் எந்த முகமனும் இல்லாமல் சட்டென்று எழுந்து கிளம்ப திரும்பினாள் . அவன் எதை பற்றியும் யோசிக்காமல் அவளின் கையை பிடித்துவிட்டான் . அவளின் கண்களில் தெறித்த அனல் அவனையே ஒரு நொடி ஆட்டம் காண செய்தது வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் காதலுடன் அவளை நோக்கினான் .ஒரு நிமிடம் அவனையும் அவன் கையையும் மாரி மாரி பார்த்த அவள் சட்டென்று அவளின் வலது கையில் இருந்த பேனாவில் எதையோ அழுத்தினாள் "கிளிக் " என்ற சத்தத்துடன் ஒரு சிறு கத்தி .


"சதக் சதக் சதக் " என்று சரமாரியாக அவனின் கையில் கீறலை போட்டு அவ்விடம் விட்டு நொடியில் மறைந்தாள் . அவனும் கையில் வலியுடன் கண்களில் காதலுடன் அவளையே நோக்கினான் .


அங்கு வந்த அந்த உணவகத்தின் மேலாளர் "சார் வாட் ஹாட்பேண்ட் ... கிஷோர் கால் போலீஸ் " என்று சத்தம் போட்டவனை தடுத்த நிஸ்வந்த் "இட்ஸ் பர்சனல் லீவ் இட் " என்று கூறி நேரே தனது நண்பனின் மருத்துவமனைக்கு சென்றான் .


இவனின் நிலையை கூறி அந்த மருத்துவ நண்பன் உடனே யஸ்வந்த்தை அழைத்துவிட்டான் . அங்கே புயல் வேகத்தில் உள்ளே நுழைந்த யஸ்வந்த் "வாட் தி ஹெல் ..." என்று சரமாரியாக கத்த தொடங்கி விட்டான் .


"சில் யாஷ் எனக்கு ஒன்னும் இல்லை விடு பாத்துக்கலாம் " பொறுமையாக கூறினான் நிஸ்வந்த .


அவனை ஆழ்ந்த பார்வை பார்த்த யாஷ் "என்ன கருமம் பிடிச்ச காதலோ !! " என்று கூறி தலையில் அடித்துக் கொண்டான் .


...........................................................................


வீட்டிற்கு வந்த அபிதா தன்னை இலகுவான ஜீன்ஸ் டாப்ஸ் உடைக்கு மாற்றிக்கொண்டு மகளுடன் நேரத்தை செலவழிக்க புறப்பட்டுவிட்டாள் .


ரஞ்சினியை லீலாவதி சந்தோசமாக தயார் செய்து ஷில்பாவின் துணையுடன் அனுப்பினார் . வெளியே ஒரு மாலிற்கு வந்த அபிதா ரஞ்சினியுடன் அன்று மலை பொழுதை முழுதாக மகளுடன் செலவளித்தாள் .


'அலாதின்' ஆங்கில படத்துக்கு சென்று ஷில்பா,அபி மற்றும் ரஞ்சினி மூவரும் ரசித்து பார்த்தனர் . பிறகு காலையில் மகள் கேட்ட கேக்காத அனைத்தையும் வாங்கி குவித்தாள் .


ஷில்பா நொடிக்கு ஒருமுறை ஜெயதியை அழைத்து மனநிறைவுடன் அனைத்தையும் ஒப்புவித்தாள் .


"என்ன ஷில்பா உங்க நட்பின் ஆழத்தை இப்படித்தான் காட்டணுமா !! " என்று விளையாட்டாக கேட்ட அபிக்கு அசட்டு தனமாக புன்னைகைத்தாள் .


தலையை இடமும் வலமுமாக அசைத்து தனது அலைபேசி எடுத்து ஜெயாவிற்கு அழைத்து "ஜெயா ஆம் பைன் ...இப்படி ஷில்பாவை துருவி துருவி போன் பில்லை ஏத்தாதே " புன்னகையுடன் கூறினாள் .


ஜெயதி அந்த பக்கம் என்ன கூறினாளோ "ஜெயா ஆம் ஆல் ரைட் .... நான் ரைட் ஹா இல்லைனா இந்தியா வர மாமா அனுமதிச்சிருக்க மாட்டாங்க ... நான் பாத்துக்கிறேன் நீ வேலை முடித்து சீக்கிரம் வா " என்று புன்னகையுடன் பேசி வைத்தாள் அபிதா .


ஷில்பா சந்தோசமாக அதன் பின் அந்த தாய் மகளுடன் ஒரு அங்கமாக ஒன்றினாள் . ஷில்பாவை போன்ற தோழி கிடைப்பது அரிது என்பதை அபிதா லச்சமாவது முறையாக எண்ணிக்கொண்டாள் .


அதன் பின் சில நாட்கள் மிகவும் சந்தோசமாக சென்றது அவர்களுக்கு . ஜெயதி தங்களுக்கு எல்லாமுமாக இருந்து உதவிய அந்த நபருக்கு அழைத்து "என்னோட அபியை மீட்டு எடுத்து தந்ததுக்கு நன்றி " என்று பலமுறை ஆனந்த கண்ணீருடன் கூறினாள் .


அந்த ஆனந்தம் அனைத்தும் ஆர் ஆர் குழுமம் ஏ ஜே மென்பொருள் நிறுவனத்துக்கு கட்டுமான வேலை ஆரம்பிக்கும் வரை மட்டுமே என்பதை எவரும் அறியவில்லை . அனைவரும் அவர்களை நோக்கி வரும் புயலில் சிக்கி மீண்டும் எவ்வாறு உயிர்த்தெழுந்து வருகிறார்கள் என்பதை இனி வரும் காலத்தில் பார்ப்போம் .
 
Top