• Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jlinepublications@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jlinepublications@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

Buy Tamil Novels online
JLine Bookstore Online

அ(ஆ)ழகா(மா)ய் ஓர் காதல் ❤️ 5

அ(ஆ)ழகா(மா)ய் ஓர் காதல் 💘 5 :

ராஜீவ் "பெண் பாருங்கள்" எனக் கூறியதும், அவனின் தந்தை மற்றும் அத்தைக்கு அவ்வளவு மகிழ்வாய் போயிற்று.

இதற்கு தான்... அவன் கூறும் வார்த்தைக்கு தான் இத்தனை நாள் காத்திருந்ததைப்போல் மும்முரமாக அலைந்து தேடி ராஜீவிற்க்கு இவள் தான் மிகப்பொருத்தமென்று எண்ணி ஒரு பெண்ணை பார்த்து முடித்தனர்.

அடுத்த மூன்று மாதங்களில் திருமணம் எனக் கூறி நிச்சயத்தை சிறியளவில் கோவிலில் முடித்துக் கொண்டனர்.

ராஜீவ் பெண்ணை பார்த்தானா? இல்லையா? என்பது அவனிற்க்கே தெரியும்... பெண்ணின் பெயராவது அவனின் மனதில் பதிந்ததா?, என்பதும் அவனிற்க்கே வெளிச்சம்.

பெண் பார்க்கும் படலத்தின் போதும், நிச்சயத்தின் போதும் ராஜீவ் நிமிர்ந்து ஒருமுறை பெண்ணை பார்த்திருந்தால் அவனிற்கு ஏதோ புரிந்திருக்குமோ?.. புரிந்த ஒன்று அவனின் வாழ்வில் மேலும் நடக்கவிருக்கும் துன்பத்தை தடுக்க வழி செய்திருக்குமோ!.

எல்லாம் அவனின் விதி அன்றி யாரை குற்றம் சொல்ல...

நிச்சியம் முடிந்த அன்று ராஜீவ் அவனை மணக்க போகும் பெண்ணின் அருகில் நின்றது... கடந்த ஒரு மாதத்தில் இவனோ அல்லது அப்பெண்ணோ ஒருவருக்கொருவரை அழைத்து பேசிக்கொண்டதோ சந்தித்ததோ இல்லை.

குடும்பத்தினருக்காக ஒப்புக்கொண்ட திருமணமென்பதால் எதிலும் ஒரு ஒட்டா தன்மை உடனே ராஜீவ் காணப்பட்டான்.

காதல் தோல்விக்கு பிறகு ராஜீவ் சிரித்த முகத்துடன் வலம் வந்தாலும்... அது யாவும் அவனின் குடும்பத்தினருக்காக, முக்கியமாக ஆருயிக்காக மட்டுமே.. ஆனால், இப்போது இத்திருமண பேச்சிற்கு பிறகு அவனின் சிரிப்பும் மறைந்து போனது. அதனை யார் கவனித்தார்களோ இல்லையோ ஆருயி கவனித்தாள்.

ஆனால், தனக்கு அனைத்து விதத்திலும் குருவாக இருக்கும் தன்னுடைய மாமாவுக்கு எவ்வாறு எடுத்துக்கூற வேண்டுமென்று பள்ளி வயது பெண்ணிற்கு தெரியவில்லை.

ஆருயியும் தனது மாமா மற்றும் அம்மா போன்று திருமணத்திற்கு பிறகு சரியாகி விடுவானென்று நினைத்து ராஜீவின் திருமண நாளை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

****************************************

"அர்ஜூன்......."

விடுமுறை நாளான அன்று, ரிஷி வீடே அதிர தனது நண்பனின் பெயரை ஏலம் விட்டான்.

"எதுக்குடா, நடு கூடத்தில் நின்னுட்டு இம்புட்டு சத்தமா கத்திட்டு இருக்க,"

அர்ஜுனின் பாட்டி கேட்ட கேள்விக்கு ரிஷி பதிலளிக்காது, மீண்டும் "அர்ஜூன்" என்று உரக்க அழைத்துவிட்டு உணவு மேசையை நோக்கி அகன்று விட்டான்.

அலமேலு பாட்டியும் மேவாயினை தோளில் இடித்துக் கொண்டவராக அவன் பின்னால் சென்று பலகாரங்களை தட்டு முழுக்க நிரப்பி "சாப்பிடு" என்றவாறே சென்று விட்டார்.

பாட்டி சென்றுவிட்டதை உறுதி செய்த ரிஷி அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சினை இழுத்து வெளியேற்றினான்.

"ஷ்ஷ்ஷ்..... இந்த பாட்டிக்கிட்ட மட்டும் மாட்டியிருந்தோம்.. செத்தோம். ஆனால், வழக்கமா இவ்வளவு அமைதியாக போகின்ற ஆளில்லையே இந்த அலமேலு" என்றவன்... "இவன் பேரன் லவ் பண்றதுக்கு நான் தெரு தெருவா அலைய வேண்டியதா போச்சே...."

"அலமேலுகிட்ட வாய் கொடுத்திருந்தோம் பேசியே விஷியத்தை கறந்திருக்கும்.. தப்பிச்சிட்டோம்" வாய்விட்டு புலம்பியவனாக தட்டிலிருந்த உணவினை வாயிற்க்குள் அடைக்கும் நேரம்.. அவனின் முதுகில் ஓங்கி அடித்த அர்ஜூன்,

என்னடா, "அலமேலுகிட்ட மாட்டிக்கிட்டியா" என்று வினவினான்.

"ஜஸ்ட் மிஸ்".. என பதிலளித்த ரிஷி,

"உன் ஆள பற்றி தெரிந்துகொள்ள எங்கெங்கு அலைந்தோம், கடைசியில் அவள் எங்க வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் டியூஷன் சென்டரில் தான் மச்சி படிக்கிறாள். இன்று தான் நானே பார்த்தேன்" என்று கூறினான்.

ரிஷி சொல்லிய செய்தி, இவ்வளவு நாள் ஆருயின் பெயரை மட்டும் தெரிந்து வைத்திருந்த அர்ஜூனிற்கு மகிழ்வினை அளித்தது.

"இப்போது சென்றால் அவளை பார்க்க முடியுமாடா??"

அர்ஜூன் ஒரு எதிர் பார்ப்போடு கேட்க,

"இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளாஸ் முந்துவிடுமென்று நினைக்கின்றேன் மச்சி" என அர்ஜூனிற்கு சாதகமான பதிலளித்த ரிஷி தன்னுடைய உணவினிலேயே கண்ணாக இருந்தான்.

ரிஷிக்கு உணவு முக்கியமாக பட, அர்ஜூனுடன் செல்லவில்லை. அவனும் வரவில்லையென கண்டு கொள்ளாத அர்ஜூன் தன்னுடைய சைக்கிளில் ரிஷியின் வீடிருக்கும் தெருவினை நோக்கி வேகமாய் பறந்தான்.

பயிற்சி பள்ளியின் எதிரே சாலையோரமிருக்கும் மரத்தடியில் தன்னவளின் வருகைக்காக அர்ஜூன் காத்திருந்தான்.

அவன் காத்திருந்த அரைமணி நேரமும் அரை யுகமாக அவனுக்குத் தோன்றியது.

"இப்போ தான் நம்ம ஆளு டென்த் படிக்கிறா போல.... அன்னைக்கு அவளோட பிரண்டு ப்ளஸ் ஒன் சொன்னாளே.. ஒருவேளை அது அவளுடையதாக இருக்கும். நம்ம ஆளு ப்ளஸ் ஒன்க்குலாம் டியூஷன் வர அளவிற்கு மக்காக இருக்க மாட்டாள். ரொம்ப குட்டியா வேற இருந்தாள், ஒழுங்கா சாப்பிடவே மாட்டாள் போல்."

தன் மனம் போன போக்கில் அர்ஜூன் சிந்தித்துக் கொண்டிருக்க, அவனது கண்கள் டியூஷனின் வாயிலிலே பதிந்திருந்தது.

வகுப்பு முடிந்து ஒவ்வொரு மாணவர்களாக வெளியேற, இறுதியில் அஜூவின் மனம் கவர்ந்த ஆருயியும் வெளியேறினாள்.

பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மிதிவண்டியை தள்ளிக்கொண்டு வெளியேறிய ஆருயி ஏதோ உள்ளுணர்வு உந்த, திரும்பி பார்த்தாள்.

தனக்கு நேரெதிரே நின்று கொண்டு.. தன்னையே பார்த்திருக்கும் அஜூவை பார்த்த நொடி ஆருயி இனம் கண்டு கொண்டாள்.

பார்த்ததும் விழி தாழ்த்திக்கொண்ட ஆருயி தன்னுடைய மிதிவண்டியிலேறி திரும்பியும் பாராது சென்று விட்டாள்.

பார்த்தநொடி அவள் விழி தாழ்ந்ததும்... அவளின் கைகளில் ஏற்பட்ட படபடப்பும் தன்னை தன்னவள் கண்டு கொண்டாள் என்பதை அஜூ உணர்ந்தான்.

அவள் நினைவில் தானிருக்கின்றோம் என்பதே அவனுக்கு ஆறுதலாக இருந்தது.

தினமும் மாலை அவளுக்கு வகுப்பு முடியும் நேரம் சரியாக ஆஜராகும் அஜூ ஒருமுறை கூட ஆருயிடம் சென்று பேச முயற்சிக்கவில்லை. பார்வையாலே தன் மனதினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

அவனின் பார்வையும், பார்வை கூறும் மொழியும் ஆருயிக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று செய்ய.. அது என்னவென அவளால் அறிய முடியவில்லை. இப்போதைக்கு அவன் தன்னிடம் வந்து பேசாமல் இருப்பதே போதுமென்று அமைதியாக இருந்தாள்.

தன்னை புரிந்தும் புரியாமல் செல்லும் அவளின் அமைதி அஜூவிற்கு, தேர்வு முடிந்து விட்டால் அவள் இங்கு வருவதும் நின்று போய்விடும். அதன் பின்னர் பார்ப்பதே கடினமாகிவிடுமென்று நினைத்து, நாளையே ஆருயிடம் சென்று பேச முடிவெடுத்தான்.

அன்றிரவு படித்துக்கொண்டிருந்த ஆருயி, தன்னுடைய ஒரே நண்பனான ஆதிக்கிற்கு கால் செய்தாள். அஜூவைப் பற்றி பேசத்தான் அவள் அழைத்தது, ஆனால் எப்படி கூறுவதென்று தெரியாது ராஜீவின் திருமணத்தைப் பற்றி உரையாடிவிட்டு வைத்துவிட்டாள்.

தனது நண்பனிடத்திலேயே தன்னால் கூற முடியாத விஷயம் ஒன்று இருக்கிறதென்றால் அது நிச்சயம் தவறான செயலாகத்தான் இருக்குமென்று உறுதியாக எண்ணிய ஆருயி அர்ஜூனின் விஷயத்திற்கு நாளையே முடிவுகட்ட வேண்டுமென்று நினைத்தாள்.

'யாருடைய நினைப்பு நிறைவேற போகிறது என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.'

அடுத்த நாள் மாலை பயிற்சி வகுப்பு முடியும் நேரத்திற்கு முன்பே ரிஷியின் வீட்டிற்கு வந்த அஜூ பரபரப்பாகக் காணப்பட்டான்...

அவனின் பரபரப்பு ரிஷிக்கு புதிது.

அர்ஜூன் எப்போதும் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்பவன் அல்ல... அவனின் மொத்த உள் உணர்வுகளும் வெளிப்படுமிடம் ஆதியிடத்தில் மட்டுமே.

கண்ணாடி முன்பு நின்று தனது நிழலுருவினையே ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தான் அஜூ.

"ஹாய் ஆரு.. அம் அர்ஜூன்... நீ அவ்ளோ அழகு"

"ஹோய்.. எனக்கு எப்போ ஓகே சொல்லப்போற"

"நீ அழகா இருக்கன்னு நினைக்கல, ஆனால் இதெல்லாம் நடந்திடுமோன்னு பயமா இருக்கு"

திடீரென, பலதரப்பட்ட மூவி காதல் வசனங்களை ரிஷி சொல்ல கேட்டு அவனை கேள்வியாய் நோக்க...

"அது வந்து மச்சி... இப்படி ஏதாவது ஒரு டயலாக் சொல்லி ப்ரொபோஸ் பண்ணிடுடா" என்றான் ரிஷி.

"யாரோ ஒருத்தர் சொன்ன வார்த்தைகள் எனக்கு வேண்டாம். நான் என்னுடைய ஸ்டைலிலே சொல்லிக் கொள்கிறேன்" என்ற அஜூ, "எனக்காக ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுடா" என்ற தன்னுடைய நண்பனை முறைத்துவிட்டு ஆருயியை காணச் சென்றான்.

முதன்முறையாக படபடப்புடன் தன்னவளிற்காக காத்திருந்தான்.

வகுப்பு முடிந்து, தனது மிதிவண்டியில் வீடு செல்ல தயாராகினாள் ஆருயி.

இங்கு அவளை மறித்து பேசுவது அடுத்தவரின் கவனத்தை இழுக்குமென்று அறிந்த அஜூ ஆருயின் பின்னால் சென்றான்.

அவளுடன் எப்போதும் துணை வரும் கயல் அன்று வராததால், பேச்சு துணைக்குக்கூட ஆளில்லாமல் சாலையோரங்களை பார்த்தவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தவளின் வழியை திடீரென குறுக்கே புகுந்து மறித்து நின்றான்.

அவனை பார்த்ததும் ஆருயி வெளியில் ஆயாசமாக வருவதைப்போல் முகத்தைக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் சில்லென்று உணர்ந்தாள்.

"இப்போ உனக்கு என்ன வேண்டும்?"

"நீதான் வேண்டும்." நொடியும் கடக்காது அவனிடமிருந்து பதில் வந்தது.

கீழே குனிந்து தன் தலையில் தட்டிக்கொள்வதைப்போல் மர்மமாக புன்னகைத்துக் கொண்டாள்.

அடுத்த நொடி.. நீ நேற்று எடுத்த முடிவென்ன ஆரு.. இப்போ இவனை பார்த்ததும் புன்னகைப்பது என்ன?, தனக்குத்தானே கேட்டுக்கொண்டவள்,

"எனக்கு உன் பேர் கூடத் தெரியாது.."

"அஜீஷ்"

ஆருயி தனது வாக்கியத்தை முடிக்கவில்லை அவன் தனது பெயரை சொல்லியிருந்தான்.

மிதிவண்டியிலிருந்து இறங்காது காலூன்றி அமர்ந்தவாறு இருந்தவள், அவனது குரலோடு சேர்ந்து ஒலித்த அவனின் பெயரை இதயத்தில் பதிந்து வைக்க, அவளையும் அறியாது இதழ் விரிந்தது. அதனை அவனிடமிருந்து மறைப்பதற்காக ஆருயி புறப்படத் தயாராக,

"ஒரேயொரு முறை கன்சிடர் பண்ணலாமே" என்றவன்,

"எனக்கு உன் பெயரைத் தவிர ஒன்றும் தெரியாது, இன்டெர் ஸ்கூல் காம்பெடிஷன் அன்று தான் உன்னை முதல்முறை பார்த்தேன். தெரியாத ஒருவனை எப்படி நம்புவது??" ஆருயி வினா எழுப்பினாள்.

கேள்வி கேட்டது அவளது வாயாக இருப்பினும் மனமோ... "உன்னை கண்ணை மூடிக்கொண்டு என் மனம் நம்ப சொல்கிறதே என்றாள்."

"ஒருவரைப்பற்றி தெரிந்துகொண்டு வருவதற்கு பெயர் காதலில்லை" எனக்கூறிய அஜீஷ் "நாளை உன் பதிலுக்காக காத்திருப்பேன்" என்றவாறு அங்கிருந்து சென்றான்.

*(அவளைப்பற்றி கொஞ்சமாவது அவன் தெரிந்து கொண்டிருந்தால், காதலென்று அவள்பின் சுற்றாது இருந்திருப்பானோ?!. அவனும் தன்னைப்பற்றி பெயர் மட்டுமில்லாது இன்னும் சில தகவல்களை சொல்லியிருக்கலாமோ?!)*

அவளோ முதன்முறையாக துளிர்விட்ட நேசத்தை தாங்கியவாறு, நாளை தன் உள்ளத்து உணர்வுகளை கொஞ்சமாவது அவனிடம் பிரதிபலிக்க வேண்டுமென்கிற எண்ணத்துடன் வீடு நோக்கி சென்றாள்.

அதற்கு முன் ஆதிக்கிடம் இதைப்பற்றி பேச வேண்டுமென்று நினைத்தவள் தன் வாழ்க்கை பயணம் மாறப்போவதை அறிந்திருக்கவில்லை.

அவனோ, அவளுக்காக அவள் கூறும் பதிலுக்காக இப்போதிலிருந்தே காத்திருக்கத் தொடங்கினான்.

தன் மனதை சாய்த்து வீழ்த்தியவள் எப்படியும் தன்னை ஒதுக்க போவதில்லை என்ற நம்பிக்கையை, அவனது பெயரை கேட்டதும் அவள் சிந்திய சிறு புன்னகையே அளித்தது.

அவனைத் தவிர்க்க வேண்டுமென்று நினைத்த ஆருயினால், அவனை நேருக்கு நேர் கண்ட பிறகு தவிர்ப்பது முடியாது போயிற்று.

'நாளை அவனிடம் காதலை சொல்லிட வேண்டுமென்று அவளும், அவள் சொல்லப்போகும் ஐ லவ் யூ'விற்காக அவனும் காத்திருக்க, விதி அவர்களுக்கு என்ன வைத்து காத்திருக்கின்றதோ!!!?'

#WE ALWAYS BREAK OUR OWN RULES FOR SOMEONE 💘

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
 
asasa11
asasa11
Top