What's new

உன் விழிகளில் விழுந்த நாட்களில் 13

Suhana

Well-known member
அத்தியாயம் 13


வருண் எங்கும். தேடி அலைந்து கலைத்து போய் வீடு திரும்பினான்........ "எங்கே போய்ருப்பா... ச்சே..." ஃபோன் நம்பர் வாங்காத தன் மடத்தனத்தை நொந்து கொண்டான்... அவன் தாய் தந்தை இறந்த பின் அவனது மனது இந்த அளவுக்கு பயந்து துடித்தது இப்போது தான்..... "யுகி வந்துடு டி..." என தன்னை மறந்து புலம்பி.... தான் மறந்த தன் குலசாமி எல்லாம் துணைக்கு அழைத்து... அவன் ஒரு ஏசிபி என்பதை மறந்து போய் அப்பார்ட்மெண்ட் கார்டனில் ஓய்ந்து போய் அமர்ந்தான்... அவன் மனது இனி அடுத்து என்ன பண்ணலாம் என திவிரமாய் யோசித்தது.அவன் சிந்தனையை கலைப்பது போல் அவளின் சிரிப்பு சத்தம் கேட்க... சந்தோஷமாய் திரும்பியவன் கண்களில் குரு அவளுடன் சிரித்து பேசிய படி நடந்து வருவது தெரிய.. வருண்னால் அதற்கு மேல் இருக்க முடியமால் அவள் அருகில் செல்ல...

அங்கே சம்முயுக்தா...

குருவிடம்... "எனக்கு லேட் ஆச்சு அவர் வர டைம் இது.. நான் போறேன்...நைஸ் டூ ஸ்பீக்... வித் யூ...”

குரு... "இருங்க..என்ன அவசரம். ஆமா . நீங்க... எம்பிஏ தானே படிச்சேன்னு சொன்னிங்க"

சம்முயுக்தா. புரியாமல்.. . அவனை பார்த்து..” ஆமா ஏன் கேக்குறீங்க.."

குரு.." பின்ன.. எப்பவும்.. அவருக்கு அது பிடிக்கும்.. இது பிடிக்காது.. லேட் ஆச்சு சமைக்கனும் இப்படியே ஏதோ ஏசிபி. வீட்ல சமையல் வேலைக்கு போற மாதிரி.. போகனும் போகனும்ன்னு...சொல்லிட்டு இருந்தா... அப்புறம் உங்க திறமை எல்லாம் மறந்து போய் டோட்டல சமையலக்காரி ஆயிடுவிங்க போலவே..."

சம்முயுக்தா...."ஏசிபி க்கு அது தான் புடிக்கும் அப்படினா...ஐ. ஆம்.. ரெடி. டூ.. தட்... குரு.”.. .என்ற... அவள் அழுத்தமான குரலில் கூறினாள்.

அவளின் குரலின் தீவீரத்தை.. உணர்ந்தவன்.. சுழ்நிலையை.. சகஜமாக்க.... “அப்படி எல்லாம் நாங்க விட்டுருவமா.. உங்கள் சேவை நாட்டுக்கு தேவை ன்னு இழுத்துட்டு வந்துட மாட்டோம்..."

சம்முயுக்தா.." ஓ மை காட்... குரு...நீங்க சான்ஸே இல்லை.. போதும் நான் கிளம்பறேன்.. "

குரு...." நீங்களே கிளம்பிட்டிங்க இனி நான் மட்டும் இங்க என்ன பண்ண போறேன் “.... என அவனும் கிளம்ப எத்தனிக்க.".. நிழல் தெரிவதை பார்த்தே அவன் வருண் என தெரிந்து சந்தோஷமாய் நிமிர்ந்தவள்... கன்னங்களில் இடியென இறங்கியது வருணின் கை..

குரு.." சார்.. "என எதோ பேச போக..

வருண்.." வில் யூ ஷட் அப்... "... என்றான்.. ருத்ரமூர்த்தியாய்..

அவன் கோபத்தை பார்த்த குரு அமைதியாய் நிற்க..

வருண்......" எவ்ளோ நேரமா இங்க இருக்க.."

சம்முயுக்தா..” ஒரு மணி நேரமாய்.. ."

வருண்...... "யூ... ஷிட்.. உன்னை நான் இரண்டு.. மணி நேரமா நாய் மாதிரி தேடி அலைஞ்சுட்டுருக்கேன்...தெரியுமா.. சிட்டி இப்போ எந்த நிலைமையிலே இரு‌க்கு தெரியுமா... அது எல்லாம் தெரியாது... இப்படி இந்த நேரத்துல இங்க சுத்திட்டு இருக்க.."

அ... அதுவந்து....

நீ இப்போ எதுவும் சொல்ல வேணாம் வீட்டுக்கு போ... என அவளை முன்னால் விட்டு அவன் பின்னால் சென்றான்..

அவன் வீட்டினுள் நுழையும் போது.. சம்முயுக்தா.." . ஏ.. சி... . வ... வருண்..." என அவனை அழைக்க...

வருண்... என்ன என்பது போல் திரும்பி பார்த்தான்.

“என்ன தேடுனிங்களா.... “என அவள் தன் கண்களை.. சிமிட்டிய படி கேட்க்க..

அவள் பானையில்.வருண் தான். ." இவள் என்ன லூசா.. நான் எவ்ளோ சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்.. இவ என்னமோ தேடுனிங்களான்னு ரொம்ப ஈசியா... கேக்குற.." . என உள்ளுக்குள் நினைத்து கொண்டு வெளியில் முறைத்து வைத்தான்... வேகமாக சென்று தன் வீட்டை "" டொம்"" "என்று சாத்த..


பின்னால் சென்ற சம்முயுக்தா. அப்படியே நின்றாள்...." யோவ்.... ஏசிபி... உனக்கு ரொம்ப தான் யா கோவம் வருது... என்னா.. அடி.... "என அவள் கன்னத்தை பிடித்தபடி கூற

இவர்கள் இருவரின் பின்னால் ஓடி வந்த குரு.." ம்ப்ச்... அவர் உங்களை அடிச்சதை பார்த்து நான் பயந்து போய் பின்னாடி ஓடி வந்தா நீங்க என்னமோ அவர் வீட்டு வாசலை நின்னுகிட்டு அவரை பார்த்தாலும் கூட பரவாயில்லை.. அவர் இழுத்து அடிச்சு சாத்துன கதவை பார்த்துட்டு இருக்கீங்க.."

"இல்ல என்னை காணமல் தேடுனேன்னு சொன்னாருல அதுல பிரிஸ் ஆயிட்டேன்..." என சிறு பிள்ளை போல் தன் கன்னத்தில் கை வைத்து கூறும் சம்முயுக்தாவை பார்த்த
குரு..... சற்று நேரத்திற்கு முன் அவளின் பின்புலனனும்.. தகுதியும் பற்றி தெரிந்த பின்... என்ன மாதிரி பெண்ணிவள்..... என்ன மாதிரியான காதல் அவன் மீது..” என அவள் மீது இன்னும் மரியதை தான் கூடியது..

சம்யுக்தா கன்னத்தில் உள்ள தன் கையை எடுக்க.. அவள் பால் வண்ண நிறத்தில் சிவப்பு கோடுகளாய் அவன் விரல் தடங்கல்..

குரு பதறி போய்.. "என்னங்க உங்க கன்னத்துல.." என அவன் கூறி முடிக்க அப்போது கதவை திறந்து கொண்டு வெளியே வந்த வருண்னும் அவளை பார்க்க.. அவள் கன்னத்தில் அவன் விரல் தடங்கலை பார்த்தவன் ஒரு நிமிடம் நின்று அவளை பார்க்க.. அவள் கண்களில் எதை கண்டனோ வேகமாய் சென்று விட்டான்..

சம்முயுக்தா அவன் செல்வதை சிரித்து கொண்டே பார்க்க..

குரு.. "லூசா நீங்க.. ஏன் இப்படி பண்றீங்க.." என அவன் சொல்ல வருவதை கேட்காமல் கதவை சாத்த போனவள்.. திரும்பி குருவிடம்.. "தாங்க்ஸ் அ லாட்.." என சிரித்தபடி கதவை சாத்தினாள்..

குரு... "இங்க என்ன தாண்டா நடந்துச்சு.. அந்த ஆளு என்னமோ சொல்வரதை எதுவும் கேட்காம அடிச்சாரு.. இவங்க என்னமோ ஆஸ்கார் அவார்டு வாங்குன பீல்ல இருக்காங்க.... காதலிச்சா இப்படி தான் லூசா சுத்தனுமோ." . என புலம்பியபடி வீட்டினுள் சென்றான்..

வீட்டினுள் வந்த சம்முயுக்தா.". ஏசிபி உன் கண்ணுல இன்னைக்கு என்ன ஒரு ரியாக்ஷன்... வாவ்... ஐ ஆம் ஸ்பீச் லெஸ்... ஒரு வழிய உன் கண்ணுல எனக்கான உணர்வை பாத்துட்டேன்... என்னை காணோம் தேடுனேன்னு நீ சொன்னப்ப உன் கண்ணுல இருந்த எனக்கான தேடலையும் பார்த்தேன்... இப்போ நான் காயம் பட்டுருக்கேன் தெரிஞ்சதும் உன் கண்ணுல தெரிஞ்ச தவிப்பயையும் பார்த்தேன்... ஐ லவ் யூ பாவா..." என மாலை நடந்ததை நினைத்து பார்த்தாள்..

எப்போதும் போல் இரவு சமையல்க்கான வேலையை முடித்தவள்...” ஓகே.. இனி வந்ததும் சூட சப்பாத்தி போட்டுக்கலாம்..” என அப்பார்ட்மெண்ட் கீழே இறங்கியவள். அங்கே விளையாடும் குழந்தைகளை பார்த்தபடி அமர்ந்தாள்.. அவளுக்குப் இது மிகவும் பிடித்தமான ஒன்று..

அவள் பிறந்ததுலிருந்து இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இருந்தது இல்லை.. அந்த அப்பார்ட்மெண்டை அனைத்தையும் சேர்த்தது போல் இருக்கும் மும்பையில் அவள் வீடு...எப்போதும் செக்கியூரிட்டிகள்.. வேலை ஆட்கள்... அவள் கேட்க்கும் முன்பே கிடைக்கும் அனைத்தும்... எப்போதும் எதோ ஒரு மயான அமைதி போல் இருக்கும்.... அவள் படிக்கும் போதும் அவளுக்குப் என்று வீடு வாங்கி ஆட்கள் வைத்து இருந்தார் விநாயகம்... இந்த மாதிரி நடுத்தர சூழ்நிலை.... அவனுக்கான சமையல்...அவனுக்கான தன்னுடைய காத்திருப்பு கூட அவளுக்கு பிடித்தது... அவள்.. அங்கிருந்த குழந்தைகளை ரசித்தபடி இருக்க.... அவள் அருகில் யாரோ... அமர நிமிர்ந்து பார்த்தவள் குருவை பார்த்ததும் சிநேகமாய் ஒரு சிரிப்பை மட்டும் சிரித்துக் வைத்து சிறிது நேரத்தில் எழ போனவளை....

குரு..... "சம்முயுக்தா உங்க கிட்டே கொஞ்சம் பேசணும் பிளீஸ் உக்காருங்க.."

சம்முயுக்தா.... "இந்த லூசு நம்ம கிட்ட என்ன பேச போகுது.." என அவனை பார்க்க..

குரு அமைதியாய் இருந்தான்..

சம்முயுக்தா "நீங்க என்னனு சிக்கிரம் சொன்னிங்கனா.. நல்லா இருக்கும்.."


குரு... "நான் உங்களை இங்க பார்த்த நாளிலிருந்தே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.. நிச்சயமாய் உங்களை நான் சந்தோசமா வச்சுப்பேன்... தென்.. விஷ்ணு சார் கிட்ட கூட நான் பேசுறேன் அவர் தானே உங்க கார்டியன்... என்ன பத்தி அவருக்கும் தெரியும்.. "

சம்முயுக்தா..” அட.. அற்பப் பதரே..” என்பதை போல் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

“ எங்க அம்மா பத்தி தானே யோசிக்கிறீங்க அவங்க அப்படி பேசுவாங்களே தவிர ரொம்ப நல்லவங்க.” . என என அவன் கொண்டே போக..

அதற்குக். மேல்.. பொறுக்க... முடியாமல் .” பிளீஸ் குரு ஸ்டாப் இட்.. என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும்... என்கிட்ட நீங்க இப்படி பேசறது... இதுவே கடைசியா இருக்கட்டும்... யூ காட் இட்.. “என கோவமாய் பேசி எழ போனாள்.

குரு அப்படியே நிற்க...அவனின் மனத்தில் இவ எதோ மதுரையில படிச்ச பொண்ணு ... அவங்க அப்பா கூட எங்கயோ போய்ட்டாருன்னு தானே சொன்னாங்க.. இவ எதுக்கு இப்படி கத்துறா.. .. நாமளும் அழகா தானே இருக்கோம்..”. என எண்ணி கொண்டே..” பிளீஸ் கொஞ்சம் நில்லுங்க... என்கிட்ட என்ன குறைன்னு சொல்லிட்டு போங்க.”.. என்றான்.

சம்முயுக்தா திரும்பி... “யூ நீட் அ ரீசன்... ஓ... தென் ஐ ஆம் இன் லவ்... வித் வருண்... யூ.. காட் ட்.. நவ் “

குரு.... யாரு ஏசிபி. வருணை யா ..

ஆமா...


அவருமா....

இல்லை

வாட்... இல்லையா அப்புறம் என்னங்க.. நான் அவரை விட எல்லாத்துலயும் பெட்டர்.. சாய்ஸ் தான்...

அவனின் பதிலில்.. கோபம் வந்தவள்...பெட்டர். மீன்ஸ் எதுலே ...

ம்ம்ம்... அவர் சேலரி... கலர்...லுக்...கேரக்டர்.. ஃபேமிலின்னு...

சம்முயுக்தா சிரிக்க..... “ஹா ஹா.. என்ன சொன்னிங்க கலர்... சேலரி... ஹா ஹா இப்படி இது எல்லாம் பார்த்து தான் காதல் வருமா... ஆமா உங்களுக்கு இப்படின்னு யாரு சொன்னது.. (அவளுக்குப் வருணை முதன் முதலில் தன் வீட்டில் அவனை பார்த்த ஞாபகம் வந்து போனது...).. யூ.... நோ... ஒருத்தவங்களை... பாக்கறப்ப.... நீங்க சொன்னா.... ப்ளா..... ப்ளா... ... அதையும் தாண்டி ஒரு பீல் இவனால மட்டுமே தன்னை உயிர்ப்புடன் வச்சுருக்க முடியும்னு தோணும்... அப்படி ஒரு பீல் வருணை தவிர யார் மேலயும் எனக்கு வரலை ... இனியும் வராது..

குரு... அவள் பேசுவதை “ஆ..” வென பார்த்து . “உங்களுக்கு இங்க வந்த கொஞ்ச நாளிலே ஏசிபியை பத்தி இவ்ளோ தூரம் புரிஞ்சிக்க முடியுமா என்ன... “


சம்முயுக்தா.. அவனை பார்த்து.. “இல்லை.. இங்க நான் வந்ததே அவரை லவ் பண்ண தான்.. என சிரித்தபடி கூற...


என்ன...

சம்முயுக்தா..... "எனக்கு அவரை டெல்லில இருந்தே தெரியும்..."

குரு குழப்பமாய் அவளை பார்த்து.. "நீங்க மதுரையில படிச்சிங்கன்னு சொன்னாங்க... உங்க நேட்டீவ் மதுரைன்னு தானே சொன்னாங்க.."

“அது எங்க அப்பா நேட்டீவ்... பட் நான் இது வரைக்கும் அங்க போனது இல்லை.. “என அவளை பற்றி கூற.. கடைசியில் அவள் தந்தை யார் என்பதையும் கூறி...முடிந்து நிமிர்ந்து பார்க்க..

குரு உடனே எழுந்து நின்றவன்
"... சா.... சா... சாரி மேடம்..."

சம்முயுக்தா..." பிளீஸ் உக்காருங்க.. ஏன் இப்படி... நான் இப்பவும் விஷ்ணுவோட தங்கச்சி தான்.." என சிரிக்க.. அதற்கு பின் தான் வருண் வந்து அடித்தது... இதை அனை‌த்தையு‌ம் நினைத்து பார்த்தவள்.. கடைசியா குரு பார்த்த பார்வையை நினைத்து..." பாவா உன்னால அவன் என்னை லூசுன்னு கன்பார்மே பண்ணிருப்பான்... "


வீட்டை விட்டு வெளியில் வந்த வருண்.... "தான் எப்படி ஒரு பொண்ணை அடித்தோம்.. எந்த உரிமையில் என யோசிக்க அவன் இதயம் சொன்னா பதிலில் சுகமாய் அதிர்ந்தான்.. இ‌னி முடியாது விஷ்ணுக்கு கால் பண்ணி பேசிடுவோம்" என தன் ஃபோனை எடுக்க அதே நேரத்தில் அவன் ஃபோனும் அடித்தது எடுத்தவன்..

ஃபோனில் சார்.. “நீங்க கெஸ் பண்ணுனது" கரெக்ட் தான் சார்.. நாங்க அல்மோஸ்ட் ரீச் பண்ணிடோம் சார் ஸ்பாட்க்கு.. "

வருண்.." எஸ்... நானும் இப்போ வந்துடுவேன்...". என ஃபோனையை கட் செய்து போட்டவன்..." உன்னால... நான் என்னயே மறைந்துட்டேன் டி. உன்னை.. வந்து பேசிக்குறேன்.." என அவன் அங்கிருந்து கிளம்பினான்.... அதன் பின் வந்த இரண்டு நா‌ட்க‌ளி‌லும் அவன் வீட்டிற்கும் கூட செல்லாமல் அந்த கொலைக்காரனை தேட... அவன் உடைகளை மட்டும் ராமனை விட்டு எடுத்து வர சொன்னான்..
அந்த சைக்கோ கொலைக்காரனுக்காக.. அவன் செய்த வியூகம் சரியாய் அமைய... வருண் வைத்த பொறியில் அவனும் சிக்கினான்... பின் அவனை விசாரிக்க... அவன் ஒரு நார்த் இந்தியன் என்றும்.. இங்கு வந்து வேலை செய்யும் போது இங்கு ஒருத்தியை காதலிக்க அவள் இவனை ஏமாற்றி வேறு ஒருவனை திருமணம் செய்ய... அவளை கொன்று... அதன் பின் அழகான பெண்களை பார்த்ததும் அவர்களை கொல்லும் எண்ணம் தலை தூக்க அதனையே வாடிக்கையாக்கி கொண்டுள்ளான்.. அதனை கேட்ட வருண் அவனை சரியாக அவனுடைய முறையில் கவனிக்க ... அவனை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்த பின் தான் அவன் அமைதியானான்...

நேராக I. G ஆபீஸ் சென்றவனை.. புன்னகையோடு வரவேற்றார் I. G...
".. அட்லாஸ்ட்.. யூ... காட்.. ஹிம்... . பட் உன்னோட டிரிட்மெண்ட்ல அவன் பொழப்பான மட்டான தெரியலை வருண்... ட்ரை டூ கன்டோரல் யுவர் செல்ப் யங். மேன்... உன்னோட அதிரடி நடவடிக்கை எல்லா நேரத்துலயும் கை குடுக்காது... Think before you did.....
இதை உன்னோட சூப்பிரியரா சொல்லல.. அஸ் வெல்விஷரா சொல்றேன்... "

" எஸ் சார்... "என வெளியில் வந்தவன் மனதில் சம்முயுக்தா...மட்டுமே நிறைந்திருந்தாள்....

🙂🙂🙂🙂🙂🙂🙂..
 
Last edited:
Top