What's new

உன் விழிகளில் விழுந்த நாட்களில் 16

Suhana

Member
அத்தியாயம் 16

வருணுக்காக காத்திருந்த சம்முயுக்தா ... மணியை பார்த்தாள் இரவு எட்டை நெருங்க... மேலும் அவள் காலையிலிருந்து சாப்பிடாமல் இருப்பது வேற.. மேலு‌ம் பசி எடுக்க..... "யோவ் ஏசிபி.. பேசறது மட்டும் பெருசா பேசுன... இன்னும் வர காணோம்... இந்த மாதிரி ஒரு கல்யாணம் யாருக்கும் நடந்திருக்காது.....காலையிலிருந்து கொலை பட்டுனி..." என எண்ணி கொண்டிருக்கும் போதே வருண் உள்ளே வந்தான்.... வந்தவன்..
அவளுடைய கண்களை பார்த்தே அவளின் பசியை அறிந்தவன்..
" நீ சாப்பிடு... நான் பிரஷாகிட்டு வரேன்..." என குளிக்க உள்ளே சென்றான்...


அவன் குளித்து வெளியில் வரும் வரை சாப்பிடாமல் இருக்க... வெளியில் வந்தவன்" உன்னை சாப்பிட சொன்னேன்ல.. எதுக்கு வெயிட் பண்ற.." என அவன் சொல்லி கொண்டே அவளுக்கும் பரிமாறிய படி அவன் சாப்பிட ஆரம்பிக்க...

நே‌ற்று மாதிரி இன்றும் ஷார்ட்ஸோடு வந்து உக்காந்த அவனை விழி ஆகலமால் பார்த்து கொண்டிருந்தாள் சம்முயுக்தா... அவள் மனதில்... "நேத்து மாதிரி போய் ஒரு சட்டையாச்சும் போட்டு வாயேன் டா... என்னை போட்டுக் ஏண்டா படுத்துற." .. என மனத்திற்குள் கவுன்டர் கொடுக்க..

வருண் கீ‌ழே.. குனிந்து... சாப்பிட்டு கொண்டிருந்தவன்.. ... "நேத்து வரைக்கும் நீ ஒரு பொண்ணு... ஆனா இன்னைக்கு என் பொண்டாட்டி... சோ இனிமேல் அது எல்லாம் நடக்காது... இனி இப்படி தான்... இ‌ன்னு‌ம் சொல்லனும்னா.. இதுக்கும் மேல.". என குறும்புடன் நிமிர்ந்து அவளை பார்த்து கண் சிமிட்டி சிரிக்க...

இவ்வளவு.... அருகில்... அவன் முகம்... அதுவும் அவன் கன்னகுழி சிரிப்பில் மொத்தமாய் தன்னை இழந்து அவனை "ஆ "வென பார்க்க..

" ஏய்... போதும் டி... என்னை பார்த்தது... இப்போ ஒழுங்க சாப்பிடு... வேணும்னா நீ சாப்பிட்டதும் நான் அங்க போய் நிக்கிறேன்... அப்புறம் என்னை சுத்தி சுத்தி பாரு.."... . என.. அதட்ட...

சம்முயுக்தா வேகமாக தலையை ஆட்டினாள்..

என்னது...

ஓ... ஒன்னும் இல்லை...

ஆமா.. உங்க அம்மா என்ன நார்த் இந்தியனா..

சாப்பிட்டு கொண்டிருந்த சம்முயுக்தாவிற்கு விக்கல் வர... வருண் வேகமாக தண்ணீரை குடுத்து தலையில் தட்டி.. "ஏண்டி.. அப்படி என்ன அவசரம்..."

நீங்க ஏ.... ஏன்.. அப்படி கேட்டீங்க....

இல்ல...எப்பவும் உன்னோட சமையல்ல ஒரு நார்த் இந்தியன் டச் தெரியும் அதான்.. கேட்டேன்... ஒரு வேலை விஷ்ணு
சொன்னானோ... ..

"ம்ம்ம்ம்.." என தலையை ஆட்ட..


"ஓ... நினைச்சேன்.. ... அவனுக்கு... டெல்லி புடிக்காது.. ஹிந்தி புடிக்காது... ஆனா அவங்க சாப்பாடு மட்டும் புடிக்கும்... ஹா ஹா.. ஆமா அவன் கால் பண்ணுனான.. எனக்கு ரொம்ப ஹாப்பியா இருந்துச்சு... நியூஸ்.. கேட்டதும்....

அவள் என்ன.. என்பதை போல் பார்க்க...

" விஷ்ணு.... பிஹாம் அ ஃபாதர்.. .. ரொம்ப ஹாப்பியான மொமன்ட்ல..." என்றான்.. தன்னவளை.. ஆழ்ந்து... நோக்கி..

அவன்..பார்வையில்....
.தடுமாறியவள் "இதை பத்தி யாரும் என்கிட்ட சொல்லாலயே.." என அவள் ஃபோனை தேட.. அப்போது தான் ஞாபகம் வந்தது அதை விஷ்ணு வீட்டில் வைத்து விட்டாள் என.". ப்ச்..." என உதடு சுழிக்க..

இதை பார்த்து கொண்டிருந்த வருண்னின் மனத்தில் தான் சுனாமி வந்து போனது.. மெதுவாய் தன்னை மீட்டு.. "என்ன வேணும் இப்போ... "

ஃபோன்... அந்த வீட்ல இருக்கு..

"ஓ..." வருணின் மனதுக்குள் "அதுக்கு ஏண்டி இப்படி என்னை போட்டுக் இம்சை பண்ற.. அதுவு‌ம் சாப்புடறப்ப..." என பெருமூச்சுடன் எழுந்து போய் கை கழுவி வர செல்ல.. பின்னால் எழுந்தவளை... "ஏய்.. ஒழுங்க சாப்புடு.. எதுவும் வெஸ்ட் பண்ணாத புரியுதா..."

"ம்ம்ம்..." என தலையை ஆட்ட...

" எல்லாத்துக்கும் இப்படி தலையை ஆட்டூறீயே.. உங்க ஊர்.. என்ன தஞ்சாவூர... "என சிரித்துக் கொண்டே உள்ளே போனான்...

உள்ளே சென்ற வருண்னை பார்த்து கொண்டிருந்தவள் மனத்தில் அவன் வரும் முன் தோன்றிய படபடப்பு சற்று குறைவது போல் இருந்தது...

வெளியில் வந்த வருண்.. கையில் அவன் மொபைலை விஷ்ணுவிற்கு டயல் செய்து கொண்டே வந்தான்...

என்னடா நீ ஆபீஸ் போகலாயா

இல்ல டா... மச்சான் ஒரே மயக்கம்...

"என்னடா சொல்ற... டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனியா... கீர்த்தி இப்போ எப்படி இருக்கா.." என வருண் வரிசையா கேள்வியை அடுக்க...

"டேய்.... டேய்... . மயக்கம் எனக்கு டா... அவ நல்லா தான் இருக்கா...அதான் எனக்கு ஜுஸ் கேட்டேன்.. அதை ரெடி பண்ணா போய் இருக்கா..." என விஷ்ணு கூற

அட சீ... எருமை... இந்த மாதிரி நேரத்துல போய் அவளை போய் வேலை எடுக்குற... உன்னை என்ன பண்ணலாம்...

அட போடா... உன்னால தான் இப்படி மயக்கம் வந்து கிடக்கிறேன்... இதுல நீ என்னையை திட்ற... போ டா..

" ஏண்டா.. உன்னை.. "என திட்ட வாய் திறந்தவன்.. அருகில் சம்முயுக்தா இருப்பதை பார்த்தவன்.. அப்போது தான் அவனுக்கு எதற்கு கால் செய்தோம் என நினைவு வர.. "ஃபோனை கீர்த்தி கிட்ட குடு டா யுகி பேசனுமாம்" ...

கீர்த்தி.... "ஹலோ" என்றதும் ஃபோனை சம்முயுக்தாவிடம் கொடுத்து விட்டு ஜன்னல் அருகில் போய் நின்று கொண்டான்.. மெதுவாய் கதவு திறந்து குளிர்ந்த காற்று அவன் முகத்தில் அடிக்க.. அங்கே பேசி கொண்டிருந்த சம்முயுக்தாவை பார்த்தான். அவள்.. தன் ஒவ்வொரு விரல்களாய் சப்பி சப்பி சாப்பிட்டு கொண்ட பேசி கொண்டிருந்தாள்......சிறு குழந்தை போல் அவள் சாப்பிடும் அழகை ஒரு வித ரசனையோடு அவளை பார்க்க.. ... கீர்த்தி எதோ சொல்ல வெக்கத்தில் அவள் முகம் சிவக்க வருனை பார்த்தாள்..

அதே நேரம் வருண்னும் அவளைக் பார்த்து தன் ஒற்றை புருவத்தை தூக்கி "என்ன" என்று கேட்டு சிரிக்க... அவள் சாப்பிடுவதை விட்டு அவனை" ஆ.." வென பார்க்க..

கீர்த்தி.. ஃபோனில்..". ஹலோ... ஏய்... லைன்ல இருக்கியா டி..."

ம்ம்ம்ம்... சொ... சொல்லு...

என்னடி.. நான் லைன்ல இருக்கும் போதே ட்ரீம்ஸ.. ம்ம்ம்... ம்ம்ம்

ஏண்டி.. நீ வேற... நேரம் காலம் தெரியாமல்... படுத்துற...

ஓ... அப்போ ஃபோனை வைக்க சொல்ற.. ..

போடி.. நான் ஃபோனை வைக்கிறேன்..

ஏய்... வச்சுடாத.. விஷ்ணு...
வருண் அண்ணா கிட்ட பேசணுமா.. குடு..

"ம்ம்ம்... சரி.." . என வருணை பார்க்க..அவன் வானத்தையும்.. அங்கே புள்ளிகளாய் தெரிந்த நட்சத்திரத்தையும் எண்ணி கொண்டிருந்தான்..

மெதுவாய் அவனிடம் செ‌ன்றவள்... "அண்ணா உங்க கிட்டே பேசுனுமாம்.." என ஃபோனை அவன் கையில் குடுத்து வெளியில் செல்ல எத்தனிக்க... அவள் கையை பிடித்து. ஜன்னலின் புறம் அவளை சாய்த்து....

ஹலோ... சொல்லு டா...

விஷ்ணு... "அப்புறம் எப்படியோ... உனக்கு கல்யாணம் ஆயிடிச்சு..."

சரி..ஆமா.. அதுக்கு..
என்ன இப்போ ...

உன்னை விட சீனியர் நானு... உனக்கு ஏதாச்சும் டவுட் இருந்துச்சுனா என்கிட்ட கேளு மச்சான்... வெக்கபடாத சரியா...

அவன் எதை சொல்கிறான் என வருணிற்கு புரிய..."டேய்.. ஈர வெங்காயம்... நீயே ஃபோனை வச்சு விடு.. இல்ல அடுத்த என்கவுன்ட்டர் உனக்கு தான் பார்த்துக்கோ.."

"சரி மச்சான்.... ஹாப்பி ஃபர்ஸ்ட் நைட்" என கூறி வை‌த்து விட... கீர்த்தி அவனை பார்த்து முறைத்து கொண்டிருந்தாள்..
...
வருண் ஃபோனை கட் செய்து சம்முயுக்தாவிடம் திரும்பியவன்..

இப்போ எங்க கிளம்பின ... என்றான்.. எப்போதும் போல் தன் ஒற்றை புருவத்தை தூக்கி..

வீட்டுக்கு...

அப்போ இது என்ன வண்டலூர் ஜூ வா.. இல்ல நான் என்ன சிங்கமா.. பார்த்து இப்படி ஓடுற... ம்ம்ம்... ஆமா நீ தமிழ் நாட்டு பொண்ணு தாணே... உனக்கு இந்த தாலி சென்டிமென்ட்.. ஃபார்மாலிட்டி எல்லாம் தெரியாதா... (ஆமா அப்படியே... நீ ஊர கூட்டி கல்யாணம் பண்ண மாதிரி..
ஏண்டா... டேய்..)

அவன் எதை சொல்ல வருகிறான்.. என புரிந்ததும்... அவள் கன்னம் சிவந்து கீழே பார்த்தாள்...

இது வரை இருந்த கடுமை போய்.. மெதுவாக அவள் காது அருகில் போய்.." யுகி... யுகி..."

"ம்ம்ம்..". என்றாள்...தன்னை மறந்த நிலையில்..

யுகி...

ம்ம்ம்ம்...

இல்ல கீழே எதுவும் போட்டுடியா... ரொம்ப நேரமா தேடுறீயே...

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க....

"ம்ம்ம்... இப்போ ஓகே ....பொஷிஷன் கரெக்டா இருக்கு... "என அவள் முகத்தை தன் கைகளால் தாங்கி... அவள் கண்களை பார்த்தவன் மெல்ல தன் வசம் இழக்க.. தன் இதழ் கொண்டு அவள் இதழை சிறை செய்யும் நேரம்.. சம்முயுக்தா கண்களை மூட... வருண் அவள் காது அருகில் குனிந்து.. "எனக்கு இது தான் ஃபர்ஸ்ட் டைம்... ஏதாச்சும் சொதப்பிட்ட அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ... சரியா..."

அதுவரை கண்களை மூடி இருந்தவள் விழி அகல பார்த்து அவனுக்கு பதில் சொல்ல வாயை திறக்கும் முன்.. வருண் அவள் இதழை தன் இதழ் கொண்டு மூடி இருந்தான்...

நீண்ட நெடிய .. ஒரு முத்தம் ஒருவனை உயிர் வரை கொல்லும் என இருவரும் உணரும் தருணம்..
வருண் மேலும் மேலும் அவளுள் மூ‌ழ்‌க.. சம்முயுக்தா தான் மூச்சு விட திணறி முடியாமல் அவனை விட்டு சற்று தள்ள...

"ப்ச்... என்னடி..." என அவளை பாக்க

அவள் வேகமாய் மூச்சு விடு வதை பார்த்தவன்...

"ஓ.." மெதுவாய் தன் தலை கோதி தன்னை சமன் செய்து அவளை பார்த்தான்...

அவள் கண்களை மூடி ஜன்னல் மேல் சாய்ந்து நிற்க... குளிர் காற்று அவள் மேல் மோத... அங்கங்கே அவள் முடி கலைந்து... இன்னும் அவள் அழகை மேன் படுத்திருந்தது.. அவள் இதழ் நோக்கி போனவன்.. இன்னும் அவள் விழி திறவாமல் நிற்பதை பார்த்து ... அவள் நிலமையை புரிந்து கொண்ட வருண் அவளை இறுக அனைத்து... அவள் முன் நெற்றியில் முத்தமிட்டு..

யுகி...

.........

யுகி.....

ம்ம்ம்ம்....

நான் எதுவும் சொதப்லயே...

"இவனை என்ன பண்றது." .. என அவனை திட்ட அவள் கண்களை திறக்க...

அவன் அவளை இன்னும் இறுக அணைத்து.. "இது ஓக்கே ... நீ இப்படி கண்ணை மூடிட்டு இருந்த நான் என்னனு நினைக்க ... நம்ம தான் எதோ சொதப்பிட்டோமோன்னு பயந்துட்டேன்.."

சம்முயுக்தாவிற்கு தான் என்ன சொல்வது என புரியவில்லை... அவன் வெற்று மார்பில் மேலும் அவள் முகம் புதைக்க...

வருண்... அவள் முகம் நிமிர்த்தி.." யுகி... "

என்ன என்பது போல் அவள் நிமிர...

நம்ம இப்படியே எவ்ளோ நேரம் நிக்கறது...எனக்கு ஓகே தான்... ஆனா நாளைக்கு நாம ஊருக்கு போறோம்... காலைல ட்ரைன்... உனக்கு தேவையானதை மட்டும் எடுத்து வச்சுக்கோ... சிக்கிரம் கிளம்பனும்... என அவன் சொல்ல... சொல்ல..

எதோ மந்திரித்து விட்ட கோழி போல் அவன் சொன்னா அனைத்திருக்கும் தலை ஆட்டியவளை... பார்க்க பார்க்க
தெவிட்ட வில்லை வருணுக்கு.... உதட்டில் புன்னகையுடன் அவளை தூக்கி கட்டில் மேல் போட்டு... "சரி இப்போ தூங்கு.. நான் காலையில எழுப்புறேன்..."

"இல்லை" ... என எழபோனவளை.. பிடித்து தன் புறம் சாய்த்து...

"என்ன இல்லை ... மறுபடியும் ஆரம்பிக்கனுமா..." என அவள் உதட்டில் கை வைத்து.. "சேதாரம் உனக்கு தான் என அவள் அருகில் வர...

சம்முயுக்தா... "இல்ல நான் தூங்கிடேன்"...

வருண்... "ஹா ஹா... தட்ஸ் பெட்டர் " என அவளை தன்னொடு இறுக அணைத்து கொண்டு தூங்க ஆரம்பித்தான்....

வெகு நேரமாய் அவன் அணைப்பிலே இருந்தவள்... மெதுவாக எழுந்து அவனை பார்க்க... தூக்கத்திலும் தன் கம்பீரம் குறையமால்... தூங்கும் தன்னவனை பார்த்தவள்... மெதுவாய் அவன் புறம் சாய்ந்து நெற்றியில் முத்தமிட்டாள்." ஏசிபி .. உனக்கு இவ்ளோ அலும்பு ஆகாது... எல்லா வேலையும் பண்ணிட்டு... எதுவும் சொதப்பிட்டேனான்னு நல்ல புள்ளை மாதிரி கேக்கற.." . என அவன் செய்த குறும்பினை நினைத்து சிரித்தவாறே...

காலையிலிருந்து அவன் செய்த அதிரடியை நினைத்து பார்த்தாள்... "கூட்டமே இல்லாத கல்யாணம்...சினிமால காண்பிக்கிற மாதிரி.... பால் பழம்.. இன்னும் ஏன் ஒரு பூ கூட இல்லாத ஃபர்ஸ்ட் நைட் ரூம்... ஹா ஹா.... ஒரு சேரி... வேஸ்டி கூட இல்லாத மாப்பிள்ளையும் பொண்ணும்.. ஹா ஹா .. ஆனா மனசு முழு‌க்க சந்தோஷதோடு நான்... நீ என்னை கிஸ் பண்ணுன அந்த நொடி... நான் எப்படி பீல் பண்ணுனேன்னு எனக்கு சொல்ல முடியலை... ஆனா நீ உடனே கேட்ட பாரு ஒரு கேள்வி... உன்னை... நீ ஒரு யூனிக் பீஸ் தான்... இப்போ இந்த உலகத்துல சந்தோஷமான மனுஷி நான் மட்டும் தான்...." என அவன் தலை கோதி மீண்டும் முத்தமிட்டு அவன் நெஞ்சில் தலை சாய்ந்தாள்... வெகுநேரம் அவனையே பார்த்தவள்.. விடியும் பொழுது தூங்கி போனாள்...

..............

விடிந்த பின்.. விழித்த வருண் தன் மேல் சுகமாய் தூங்கிய மனைவியை பார்த்தவன்..பால் வண்ண நிறத்தில் .. ஏதும் அறிய குழந்தை போல் கையை தன் கன்னத்தில் வைத்து தூங்கும் அவளின் அழகில் நேரத்தை தொலைத்தவன்.. மீண்டும் மணியை பார்க்க.. "ஓ.. இவ்ளோ நேரமா தூங்கினேன்" ... என அவளைக் எழுப்ப...

யுகி... கெட் அப்... லேட் ஆகுது... எழுந்திரு..


"எங்க பாவா..." என கேட்டு மீண்டும் தூக்கத்தை தொடர.

"என்னது பாவா வா.. என்ன இவ இப்படி பேசுறா..." ...மீண்டும் எழுப்ப... அவன் கைகளை கன்னத்தில் வைத்து மீண்டும் தூங்க... "சரி தான்... இவளை இப்படி எழுப்புனா.. நம்ம நைட் கூட போக மாட்டோம்.." என அவன் குளிக்க உள்ளே சென்றான்...

அவன் வந்த போதும் அதை மாதிரி தூங்கி கொண்டிருந்தவளை பார்த்தவன்.." . நீ விஷ்ணு தங்கச்சியா ன்னு... எனக்கு அடிக்கடி டவுட் வரும்... ஆனா இப்போ கன்பர்ம் ஆச்சு... அவனுக்கு மேல தூங்குவா போலயே.....இவ்ளோ வச்சு நான் குடும்பம் நடத்தி... பேரன் பேத்தி எடுத்து விளங்கிடும்.." . என மீண்டும் அவளை எழு‌ப்‌ப... "யுகி... ஏய்... யுகி..." அவள் எழாமல் இருக்க... அவள் காது அருகில் சென்று தன் வாய்யை மட்டுமே அசைத்து... மெதுவாக யுகி என அழைக்க...

திடிர் என விழித்துக் எழுந்தவள்... அவன் முகம் அருகில் காண... இது கனவா இல்லை நினைவா என புரியாமல் முழித்தாள்.

அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகளில் தன்னை தொலைத்தவன்... அவன் இதழ் கொண்டு இதழ் மூட.....சிறிது நிமிடங்களில் விட்டவன்..".இப்போ டவுட் தீர்ந்தாத
Mrs. வருண்... எழுந்துருங்க... போய் ரெடி ஆகுங்க... லேட் ஆகுது... இனிமேல் எழுந்திரிக்காலேனா இப்படி தான் எழுப்புவேன்... புரியுதா..." என சிரிக்க

"ம்ம்ம்....." என வேகமாய்.. உ‌ள்ளே சென்று கதவை தாழிட்ட.... பின்பும் அவன் சிரிப்பு சத்தம் கேட்க.... ஏசிபி .. உன் அலும்பு இருக்கே இப்படியா எழுப்புவ... ஆனா....இத்தனை வருஷங்களில் என்னோட.. இனிதான விடியல் இது தான்... ஒவ்வொரு நாளும் என்னைக் அவ்ளோ ஹாப்பியா பீல் பண்ண வைக்கிற... பாவா... உன்னோட நான் வாழும் வாழ்க்கை கனவா மட்டும் போய்டுமோன்னு நான் பயந்துருக்கேன்... இப்போ அது எல்லாம் நிஜமா நடக்கறப்ப... ஜஸ்ட் ஐ அம் பிளையிங். "

ஏய்.....இவ்ளோ நேரமா குளிக்கிற.. இல்லை உங்க அண்ணன் மாதிரியே உள்ள போய் தூங்குறியா... இல்லை இன்னும் எதுவும் ஷாக் ட்ரீட்மெண்ட் தேவை படுதா...

இ... இல்லை... இதோ வாரேன்...

" ம்ம்ம்ம்..".. என வெளியில் சிரித்து கொண்டே வந்து அமர்ந்தான்... அவனது ஃபோன் அடிக்க.. எடுத்து பார்த்தவன்...கருணாகரன் என வர.....

சொல்லுங்க சார்...

என்னடா... அப்போ நெஜாமா தான் சொன்னியா கல்யாணம்னு...

பின்ன... சும்மவா சொல்லுவாங்க...

வருண்... நீ இருக்க பாரு உங்க அப்பானை தாண்டிடுவ... ஆமா எங்க என் மருமகள்...

குளிக்கிறா சார்...

அவங்க ஃபேமிலி பத்தி... அவங்க அப்பா என்ன பண்றார்...

அது எல்லாம் தெரியலை ... அவ விஷ்ணுவோட தங்கச்சி அது போதாதா சார்... இனி எதுக்கு ஃபேமிலி பத்தி எல்லாம்... அவங்க அப்பா எதோ காசி ராமேஸ்வரம்ன்னு போய் இருக்காராம்..

அப்போ அவர் வந்தும் கல்யாணம் பண்ண வேண்டியது தானே... நாங்க எல்லாரும் வந்துருப்போம்ல...

சார்... ஏன் எல்லாரும் அதையே கேக்கறீங்க... எனக்கு அவ என் கூட இருக்கன்ம்னு தோணுச்சு பண்ணிக்கிட்டேன்...... இப்போ என்ன எல்லார்க்கும் ஒரு ரிசப்ஷன் வச்சுறேன்... சரியா..


எல்லாத்துக்கும் ஒரு பதில் ரெடியா... வச்சுருப்ப டா... ரஸ்கால் நீ... சரி...நீ சந்தோஷமா இருந்த எனக்கும் நிம்மதி தான்... பிரியாவை பாக்க வாராப்ப வாரேன்... சரி வைக்கிறேன்....

"ஓகே... சார்.. வாங்க " என பேசிவிட்டு திரும்பியவன் எதிரில்... பயணத்துக்கு வசதியாய் காட்டன் சுடிதாரில் வந்து நின்றாள் சம்முயுக்தா..

சிறிதும் ஒப்பனை இல்லாமல்....அவள் முகம் மேலும் அழகாய் மிளிற... கண் சிமிட்டாமல் அவளை பார்க்க... அவன் பார்வையில் தெரிந்த உணர்வுகளில் வெக்கம் கொண்டு அவள் தான் கீழே பார்த்தாள் ... வேகமாய் அவள் அருகில் வந்தவன்.. "நம்ம வேணும்னா ட்ரிபை கேன்சல் பண்ணிடுவோமா..." என கேட்கும் ... அதே நேரம் அவன் ஃபோனும் அலற... எடுத்தவன்...

சொல்லுங்க அத்தை.....

.....

ம்ம்ம்... இதோ கிளம்பிட்டேன்.... ட்ரைன்ல தான் வற்றேன்...

"ஊப்ஸ்.... கிளம்பு போகலாம்.." .. நேரமே சரியில்லை டா வருண் உனக்கு.." என தனக்குள் புலம்பினான்...

.......

ட்ரைனில் ஏறியதும் தான் அவள் கேட்டாள்...

ட்ரைனை ஆர்வமாய் பார்த்தபடி... "நம்ம எங்க போறோம்..."

வருண்னுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது இது வரை அவளிடம் எதுவும் சொல்லவில்லை என... "திருச்சி... பக்கத்துல உன் மாமனார் ஊருக்கு.." .

"ஓ..." என.. அங்கிருக்கும் பொருள்களை ஆர்வமாய் பார்த்தபடி வர...

அவளை வித்தியாசமாய் பார்த்தபடி வந்தான்... வருண்..." ஏன் நீ இதுக்கு முன்னாடி ட்ரைனை பார்த்தது இல்லையா..."


"நோ... பாத்துருக்கேன்.. பட்..இவ்ளோ கூட்டமா... இ‌ப்படி ஒரு பிளாட்பார்ம் "என அவள் லண்டனில் பார்த்த ட்ரைனோடு ஒப்பிட்டு பேசி கொண்டே வர... அவனின் ஆராய்ச்சியான பார்வையில் தான் சம்முயுக்தாவிற்கு அவள் உளறி கொண்டிருப்பது ஞாபகம் வர..... "மாட்டுன டி... உன் பாவா கொஞ்ச கொஞ்சமாய் ஏசிபியா மாறிக்கிட்டு வர்றாரு... அலர்ட் ஆகிடு .."என மனதிற்குள் கவுன்டர் கொடுக்க... "இல்ல இது வரைக்கும் நான் ட்ரைன்ல போனது இல்ல..."

ஓ... அப்போ சென்னைக்கு எப்படி வந்த...

ம்ம்ம்... பஸ்ல..

"ஓ......" என கையிலிருந்த பேப்பரை படிக்க ஆரம்பித்தான்.. சிறிது நேரத்தில் சம்முயுக்தா.. அவனை நெருங்கி உக்கார... என்னாச்சு இவளுக்குத்... என எதிர் திசையில் பார்த்தான்...

அங்கே சில கல்லூரி பெண்கள் அவனை பார்பதும்.. எதோ பேசுவதுமாய் இருக்க... சம்முயுக்தா ... கோவாமாய் அவர்களை பார்த்தாள்...

ஏய்... ஏண்டி... அப்படி பாக்குற... அவங்களை...

"அவங்களும் உங்களை அப்படி தான் பாக்குறாங்க..." என முகத்தை திருப்பி கொண்டாள்....

ஹா ஹா.... ஏய்... என்னை .. யாரு பார்த்த என்ன டி..... நான் உன்னை தானே பாக்குறேன்... அப்புறம் என்ன... என்றான் அவள் கையை பிடித்து கொண்டு..


"ம்ம்ம்..." என அவனை பார்த்தாள்..

ஓ கே இரு... நான் என்னனு கேக்குறேன்..
என அவர்களிடம் திரும்பி....
" ஹலோ... "

அவர்கள் அவனை பார்த்து... சிரித்து... "ஹலோ சார்..."

நான் வருண்... இவங்க என்னோட வைப் Mrs.. சம்முயுக்தா வருண்...

"சார்.... உங்களை எங்களுக்குத் தெரியும் சார்.. நீங்க ACP வருண் தானே... நாங்க த்ரீ மான்த்ஸ் சென்னைல ப்ராஜெக்ட் பண்ணிட்டு இன்னைக்கு தான் லீவுக்கு போறோம்... நீங்க அந்த சைக்கோ கொலைக்காரனை பிடிச்சது.. செம சார்...எங்க எல்லாருக்கும் நீங்க பெரிய ரோல் மாடல் சார்... ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆகலன்னு போட்டுருந்தாங்க... "
என அவர்கள் மூச்சு விடாமல் பேசி கொண்டே போக...

அனைத்தயும் சிரித்து கொண்டே வருண் கேட்க்க.
" சார்..... நீங்க சிரிச்சா இன்னும் அழகா இருக்கிங்க... "

" இது வரை தன்னவனின் பெருமையை... கொஞ்சம் கர்வத்துடன் கேட்டவள்... அவர்கள் அவனை அழகன் என்றதும்..." கோவமாய் முறைக்க...

வருண்.. அவளிடம் ...
"யுகி அவங்களை எரிச்சுடாத டி." .. என்றான்... அவள் புறம் சரிந்து.. . அவர்களிடம்.. "தாங்க்ஸ்.." என மட்டும் கூற...

சம்முயுக்தா அவனை இன்னும் நெருங்கி உக்காந்தாள்... "ஏய்... இனிமேல் நீ உக்காரனும்னா என் மடிலே தான் உக்காரனும் பாத்துக்கோ.... போடி... தள்ளி.."

"எனக்கு தெரியும்..." என வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள்.. மெதுவாய் கண் மூட.. அவன் தன் தோள் சாய்த்து கொண்டான்...

தூங்கும் அவளை பார்த்தவன்... "நீ எங்க இருந்து வந்த... உன்னிடம் மட்டுமே என் சுயத்தை இழக்கிறேன் நான்... உன்னை என் கைக்குள்ளயே வச்சுக்கணும்ன்னு தோணுதே... ஏன் இவ்ளோ அவசரமா கல்யாணம் பண்ணுனேனு எனக்கே தெரியலை ... ஏதோ உன்னையும் இழந்துடுவேன்னு பயம் தான் அதுக்கு காரணமா.. என்னை பற்றி உனக்கு எதுவும் தெரியாமலே நான் கட்டுன தாலியை அவ்ளோ சந்தோஷமாய் வாங்கிட்டியே டி எனக்கே அது ஷாக் தான் .... திடிர்னு நீ முடியாதுன்னு ஏதாச்சும் சத்தம் போடுவியோன்னு மனசுக்குள்ள ஓரு பயம் இருந்து கிட்டே தான் இருந்துச்சு...இன்னைக்கு கூட நான் எங்க போறேன்னு சொல்லாமலே என்ன நம்பிக்கையிலே கிளம்பி வர.... இது வரை எனக்கு உறவுகள் சொல்ல பெருசா யாரும் இல்லை... உன் அண்ணனை தவிர.. ஆனா இப்போ எல்லாமுமாய் நீ இருக்க'".. என காதலுடன் கூறி கொண்டு வந்தான்....

:love::love::love::love::love:...
 

Author: Suhana
Article Title: உன் விழிகளில் விழுந்த நாட்களில் 16
Source URL: JLine Tamil Novels & Stories-https://jlineartsandsilks.com/community
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Super Super Super pa... Semma semma episode..... Ore romance தான் இந்த வருண் semma kedi first time first time ne காரியத்தை saathichikiraan.... விஷ்ணு 😊 😊 😊 ஒரே மயக்கம்... Ava avana vittutu போக kudaathu avala avan kudave vrchikanum nu avvallavu sikiram sikiram ah கல்யானம் pannikitaan... ஊருக்கு vera போறாங்க... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Suhana

Member
Super Super Super pa... Semma semma episode..... Ore romance தான் இந்த வருண் semma kedi first time first time ne காரியத்தை saathichikiraan.... விஷ்ணு 😊 😊 😊 ஒரே மயக்கம்... Ava avana vittutu போக kudaathu avala avan kudave vrchikanum nu avvallavu sikiram sikiram ah கல்யானம் pannikitaan... ஊருக்கு vera போறாங்க... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Thk u so much sissy 😍😍😍💞💞😍😍😍😍💞😍😍💞😍😍💞😍😍
 
Top