What's new

உன் விழிகளில் விழுந்த நா‌ட்க‌ளி‌ல் 5

Suhana

Member
அத்தியாயம் 5
ராமனுக்கு கால் செய்து பேசிய பின் அரவிந்த் நேரத்தை பார்த்தான்...இரவு ஒன்பதை… தொட.....விஷ்ணுக்கு கால் பண்ணுவோம்...

ஒரே ரிங்ல் அட்டென்ட் செய்தான் விஷ்ணு..

விஷ்ணு "சொல்லு அர்வி... வருண்னுக்கு என்னாச்சு.."

என்னடா கால் போன மாதிரியே தெரியல... பட் நீ எடுத்துட்டே… .எடுத்ததும் .. கரெக்டா வருணுக்கு என்னாச்சுன்னு வேற கேக்குற...

விஷ்ணு "ஹா ஹா... இல்ல டா... பிரியா மெயில் பண்ணி இருக்கா.. வருணுக்கு கல்யாணம் ஆயிடுச்சானு...இல்லையான்னு கேட்டு..... இப்போ தான் பார்த்தேன்.. நீயும் கால் பண்றியா.. அதான்... சொல்லு என்னவாம் சார்க்கு.."

ம்ம்ம்.... எப்பவும் சம்யுக்தா பத்தி கேக்க மாட்டான்... இன்னைக்கு யாரோ ஒரு பொண்ணுக்கு அவ பேரு இருந்துச்சாம்.. அதுக்காக கேரளா பார்டர்ல உக்காந்து இருக்கான்.. அந்த இடியட்

“ ஓஹ்...” என விஷ்ணுவின் குரலில் வருத்தம் தெரிய

என்னடா நீயும்” ஓஹ்” ங்கற.

“ இல்லாடா அவன் ரொம்ப ரெஸ்ட் லெஸா இருந்தா தான்.. இப்படி பிஹவ் பண்ணுவான்... அதான் யோசிக்கிறேன்..."

ம்ம்ம்ம்... ரொம்ப டென்சனா தான் என்கிட்ட பேசினான்.... தென் ஹி பிகம் நார்மல்ன்னு நெனைக்கிறேன்..

“ ம்ம்ம்....... அப்பவும் இவன் அவளை தேடனும்ன்னு நினைக்கல.. பார் அர்வி...” என்றான் வருத்தம் மேலோங்க

நம்ம சொல்லாலும்ன்னு சொன்னா நீயும் சம்யுக்தாவும் கேட்கல.. இப்போ சொன்னா கண்டிப்பா அவன் ரொம்ப ஹாப்பி ஆய்டுவான் மச்சான்.. .

"இப்போ தான் அவளை பத்தி யோசிக்கிறான் அர்வி... வருண் அவளை மறக்கலை.. ..மறந்துட்டேன்னு தன்னையே ஏமாத்திட்டு இருக்கான்... அவன் காலேஜ்ல இருந்த மாதிரி இருந்தா அவனால அவன் ஃபீல்டுல இவ்ளோ சக்சஸ் ஃபுல்ல இருக்க முடியாது.." சோ ....லேட்ஸ்… வெயிட் அண்ட் சீ…. வாட் ஹி ஹுட்… ரியாக்ட்…”

ம்ம்ம்... நானும் அதான் நினைக்கிறேன் விஷ்ணு... இவங்க ரெண்டு பேரோட கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு நிலைக்கு வரணும்னு... அவங்களும் சந்தோஷமா இருக்கனும்...

" ம்ம்ம்ம்...நம்ம நினைக்கறது… மட்டுமே… நடந்தா… வாழ்க்கை… சுவாரசியமா… இருக்காது… அதுவும் அவன் வாழ்கையிலே… எதுவும் நினைச்சா மாதிரி நடக்கலை… அவன் கல்யாணத்திலே. இருந்து… அவங்க பிரிவு வரைக்கும்…” என நீண்ட மூச்சினை விட்டவன்…” அப்புறம் உன் லைப் எப்டி போகுது... மது எப்படி இருக்கா... பசங்க எங்க..."

அர்விந்த் "எல்லாரும் நல்லா இருக்கோம் டா... கீர்த்தி எப்டி இருக்கா... பையன் எப்டி இருக்கான்.."

ம்ம்ம்ம்..ந‌ல்லா… இருக்கோம் ... நான் ஆபீஸ் போயிட்டு இருக்கேன்.. ... நீ சம்யுக்தா கிட்ட பேசுனியா...

ம்ம்ம்.. ஜெய்க்கு உடம்பு சரி இல்லன்னு சொன்னா.... அப்புறமா நார்மல் ஆயிட்டான்னு மேசஜ் பண்ணுன...

ம்ம்ம்... கீர்த்தி சொன்னா டா.. நான் தான் ஃபோன் பண்ணா மறந்துட்டேன்... இப்போ லேட் ஆயிடுச்சு சோ காலைல பேசனும் அர்வி.

ம்ம்ம்...டேக் கேர்… மச்சான்.. என ஃபோனை… வைத்தவன்.. மனதில்… வருண்… விஷ்ணுவுடன்… சேர்ந்து இருந்த நாட்கள்… நினைவில்…. வந்து போனது…
....................
வருண் வீட்டின் கார்டனில் உக்காந்து வருண்யை பற்றி யோசித்து கொண்டிருந்தாள் ப்ரியா... அவளை வெட்டவா குத்தாவா என ராகவ் பார்க்க..

பிரியா "என்ன ராகவ் அப்படி பாக்குற.."

"பின்ன என்னடி... நான் பேசாம வீட்லயே சமைச்சு சாப்டுட்டு படுத்திருப்பேன்.. சும்மா இருந்தவனை சொறிஞ்சு விட்ட மாதிரி.. டின்னர்க்கு வா ன்னு சொல்லிட்டு அவரை ஆளையே காணோம்... நேரத்தை பாரு மணி ஒன்பது… .... இன்னும் காணோம்... இனி வந்து சாப்டுட்டு கிளம்பி... "என ராகவ் புலம்ப..

பிரியா" இரு டா... சாப்பாடு ராமா... எப்போ பாரு சாப்பாட்டு சாப்பாடு ன்னு சொல்லி கிட்டு...உன்னை எல்லாம்... எதுக்கு போலீஸ் வேலைக்கு எடுத்தாங்க….

ஏன்…போலீஸ்னா… பசிக்காதா.. என்ன…!

“இப்படி என்கிட்ட வெட்டியா.. பேசுறதுக்கு. எனக்கு ஏதாச்சும் ஐடியா குடுக்காலமல..."

ராகவ் "எதுக்கு... எதை பத்தி..."

பிரியா 'நம்ம எதை பத்தி பேசிட்டு இருந்தோம் அதுக்கு.. "

" என்ன சாப்பாட்டை பத்தியா…
பிரியா.. ராகவை… முறைக்க…

“ ஓகே…. ஓகே” … என… சரண்டர் என்பதை போல் தன் கையை.. தூக்கியவன்.. . இதில… நான் என்ன சொல்ல முடியும்… பிரியா ... நான் அவரையே இப்போ தான் பாக்குறேன்.. இதுல அவருக்கு கல்யாணம் ஆயிடிச்சா இல்லையா... யாரை பண்ணுனார்.. இதை எல்லாம் கேட்டா... நான் என்ன பண்ணுறது... நீ தான் அவரு ஃபிரான்ஸ் கிட்ட கேக்குறேன் சொன்னிள்ள.. அப்புறம் என்ன.... இல்ல எப்போதும் அவர்… கூடவே இருக்க நான் என்ன ராமன் அண்ணா வா..." என இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த ராமனை பார்த்து சொல்ல...

" வாவ்.... ராகவ் தாங்க்ஸ்... "என அவன் கன்னத்தை பிடித்து கிள்ளி சொன்னவள்..

"ஓஹ் ஷிட்.. நான் எப்படி மறந்தேன்... ராம் அண்ணா அவரு கூடவே தானே இருக்கார்... அவர் கிட்ட கேட்டுருக்கலாம்.".. என அவள் எண்ணி கொண்டிருக்க..

ராமன் இருவருக்கும் காப்பி எடுத்து கொண்டு அருகில் வந்து..

ராகவ்விடம் "வருண் தம்பி இன்னும் அரை மணி நேரத்தில் வந்துருவாராம் உங்களை வெயிட் பண்ண சொன்னார்... இந்தாங்க இதை குடிங்க... "

ராகவ்" ராம் அண்ணா.... நீங்களாவது என் பசியைத் புரிஞ்சு காப்பி எடுத்துட்டு வந்திங்க பாருங்க... ஐ லவ் யூ..."

பிரியா.. "ராகவ் சும்மா இருக்க மாட்டே.. ராம் அண்ணா என்கிட்ட உண்மைய சொல்லுங்க... வருண் சார்க்கு கல்யாணம் ஆயிடிச்சா.. இல்லையா... அவங்க யாரு... இப்போ எங்க இருக்காங்க... "

“ அது வந்து...” என ராமன் இழுக்க..
பிரியா" அண்ணா நான் விஷ்ணு அண்ணாக்கு மெயில் அனுப்பிருக்கேன்... பிளீஸ் அது வரைக்கும் எனக்கு பொறுமை இல்ல... சொல்லுங்க. "
கல்யாணம் ஆயிடுச்சு மா 5 வருஷத்துக்கு முன்னாடியே........................................ அவர் சென்னைல ஏசிபி யா இருக்கறப்ப
திடிர்னு ஒரு நாள் என்கிட்ட நாளைக்கு கல்யாணம் வந்துடுங்கன்னு சொன்னார்... நானும் போனேன்... அப்புறமா ஒரு பத்து நாள் கழிச்சு அவர் சொந்த ஊருக்கு போனாங்க... போய்ட்டு வந்ததும் நல்ல தான் இருந்தாங்க... அடுத்த நாள் என்ன நடந்ததுச்சுன்னு தெரியலை...
அந்த பொண்ணு இங்க இல்ல மா.... அந்த பொண்ணு போனதுக்கு அப்புறம் தம்பி நடைப்பிணமாவே ஆயிடுச்சு… ..உடனே ஐதராபாத்க்கு கிளம்பிட்டார்.... விஷ்ணு தம்பி கூடவும் பேசுறது இல்ல... ஐதராபாத்துக்கு இவரு போறப்ப... விஷ்ணு தம்பி தான் அவன் தனியா இருப்பான் நீங்க போங்கன்னு.. உங்க அப்பா கிட்ட சொல்லி.. அவர் கூடவே.. போக வச்சது… “

ராகவ்.. "அவங்க அதுக்கு அப்புறம் இவரை பார்க்க வரலையா... '

ராமன்" வந்தாங்க தம்பி ... ஒரு மாசம் கழிச்சு இவரு எங்க இருக்காருன்னு தேடி வந்தாங்க... ஆனா இவரு பாக்க முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டார்..".

“ அவங்க எ‌ப்படி இருப்பாங்க அண்ணா..” . என பிரியா… ஆர்வமாய் கேட்கக்..

ரொம்ப அழகா இருப்பாங்க மா... விஷ்ணு தம்பி பேசுனதை வச்சு அவங்க ரொம்ப பெரிய எடுத்து பொண்ணு போல தெரிஞ்சது.... ஆனா அவங்க இவரு கூட இருக்கறப்ப நான் வீட்டுக்கு போன எதுவும் சாப்புடமா அனுப்பாது மா.. அப்படியே வருண் சார் அம்மா மாதிரி...

ராகவ்... "அப்போ உங்களுக்கு வருண் சார் அம்மாவையும் தெரியுமா.." .

"ஆமா தம்பி.. என் கல்யாணமே வருண் தம்பி அப்பா தான் நடத்தி வச்சாங்க.. தம்பி அப்படியே அவங்க அப்பா மாதிரி மாநிறம்..குணமும் அப்படி தான்... அம்மா நல்ல நிறமா இருப்பாங்க..."
அவங்க எப்படி இறந்தாங்க...

"வருண் தம்பி அப்பா இன்ஸ்பெக்டரா சென்னைல வேலை பார்த்துட்டு இருந்தார்... அப்போ ஒரு ரவுடியை அர்ரெஸ்ட் பண்ணுணார்... அவன் குரூப்ல இருந்து சில பேர் வீடு புகுந்து வருண் தம்பி அம்மாவையும் அப்பாவையும் வெட்டி போட்டாங்க..தம்பி தூங்கிட்டு இருந்துச்சு அவனுங்க வந்தவுடனே அவங்க அம்மா இவரை ரூம்ல வச்சு பூட்டிடாங்க.. நாங்க போய் தான் திறந்து விட்டோம்... அப்போ தம்பிக்கு 14 இல்ல 15 வயசு தான் இருக்கும்...அப்போவே தம்பி தனியா இருக்க பழகிடுச்சு... அவங்க சொந்தக்காரங்க வந்து கூப்பிட்டாங்க... ஆனா போகலயே... அவங்க அப்பா பிராண்ட் யாரோ ஒரு ஃபாதர் வந்து டெல்லிக்கு கூப்பிட்ட உடனே போய்டுச்சு... அப்புறம் நான் ஏசிபியா தான் பார்த்தேன்"... என ராமன் கூறி முடித்து..

சரி தம்பி நான் உள்ளே போறேன்.. நீங்களும் வாங்க...
ராகவ் வருணின் தன்னம்பிக்கையை எண்ணி வியந்து போனான்...

"பிரியா வருண் சார்... எவ்ளோ க்ரேட் ல..".. அவள் கவனிக்காமல் இருக்க...

" ஏய் என்ன யோசிக்கிற... "

பிரியா '"கிருஷ்ணன் அங்கிள் பத்தி எனக்கு முன்னாடியே தெரியும்... அது விஷயம் இல்ல... அவங்க பேரு கூட தெரியாம இப்போ எ‌ப்படி கண்டு புடிக்கறது... இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சினை யா இருக்கும்..

ராகவ்" பிரச்சனை என்னனு எனக்கு தெரியாது.. ஆனா அவங்க பேரு தெரியும்"..

"என்ன தெரியுமா.... எப்படி... என்ன பேரு.."

ராகவ்... 'ஏய் லூசே... இன்னிக்கு கடைசியா ஒரு பொண்ணு பேசுனுசே அது பேரு என்ன..."..

ஏன்.... யாருக்கு தெரியும்...

" அந்த பொண்ணு போன உடனே தான் இவரு மூஞ்சி சேன்ஜ் ஆச்சு… சோ தட் ஹுட் பி ஹேர் நேம்.. ..

ஆமா ராகவ்... சூப்பர் டா.. அப்போ அவங்க பேரு என்னவா இருக்கும்...

" ம்ம்ம்.. இதுக்கு தான் என்னை மாதிரி ஒரு திறமையான போலீஸ் ஆபிசர் வேணும்னு சொல்றாது...."

"இப்போ நீ சொல்ல போறியா இல்லையா டா... "என பிரியா கோவமாய் பார்க்க...

" ஓகே.. ஓகே.. கூல் பேபி.... அவங்க பேரு சம்யுக்தா வா இருக்கலாம்... ஆனா.. ராம் அண்ணா அவங்க ரொம்ப அழகா இருப்பாங்கன்னு சொன்னாரு.. ஒரு போட்டோ இருந்தா பார்த்திருக்கலாம்... "

பிரியா அவனிடம்... "ரொம்ப கவலை படாதே ராகவ்.... இப்போ வருண் சார் வந்துடுவார்... நீ அவர் கிட்ட போய்..ஸார்… ஸார் உங்க வைப்பை நான் சைட் அடிக்கனும் கொஞ்சம் போட்டோ குடுங்கன்னு சொல்லு.. அவர் தருவார் நல்ல வாங்கிக்கோ.... "

" அடிப்பாவி... "உன்னை என ராகவ் அவளை துரத்த... வருண் வந்து அவனின் கேட் கதவை திறக்காவும் சரியாய் இருந்ததது...
..
எப்போதும் போல்… தன் நிதானம். மாறாமல் உ‌ள்ளே… வந்தவன்…” என்ன ரெண்டு பேரும் ஓடி புடிச்சு விளையாடுறிங்களா... ஹா ஹா.. பிஹவ் லைக் IPS ஆபிசர்ஸ்.... "என சொல்லி கொண்டே தன் வண்டியை நிறுத்தி இறங்கி.. ராமனிடம்..

"சாரி அண்ணா... நான் உங்க கிட்டே சொல்லிட்டு போய் இருக்கனும்.. எதோ ஞாபகம்... இந்தாங்க நான் டின்னர்க்கு வெளில வாங்கிட்டு வந்துட்டேன்... இதை சர்விங் பவுல்ல போடுங்க... "

" வாங்க உ‌ள்ள போகலாம்...." என வருண் உள்ளே செல்ல...
பின்னாடி சென்ற பிரியா திரும்பி பார்க்க... ராகவ் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான்...

" ஏய் என்னாச்சு ராகவ்..."

" ஒன்னும் இல்ல பிரியா... அவரை பார்த்தாலே ஒரு ஹீரோ வெர்ஷிப் வந்துடுது...இப்போ அவர்… பத்தி தெரிஞ்சாதுக்கு அப்புறம் இன்னும் அதிகமா.. இருக்கு. " என வருணை பார்த்து கொண்டே… ராகவ் கூற..

பிரியா அவனை பார்த்து.." ராகவ்."..என கூப்புட்டு சற்று தள்ளி நின்று..

“ ச்சே... அவனா நீ"".... என கூறி சிரித்து விட்டு உள்ளே ஓடினாள்..

சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் முழித்த ராகவ்.. புரிந்த பின்.. "சீ... சீ... ஏய் பிரியா உன்னை நில்லுடி" என பின்னால் ஓடினான்..

இவர்கள் இருவரையும் பார்த்த வருண்... பிரியா உனக்கும் ராகவ்க்கும் கல்யாணம் பண்ணா சொல்லி அப்பா கிட்ட பேசிட்டேன்.. ஆனா பேசுனது தப்புன்னு இப்போ தான் புரியுது...

“அய்யோ…. ஏன்… சார்.. .." என வேகமாய் ராகவ் கேட்க.

வருண் சிரித்து கொண்டே.." பின்ன இப்படி சின்ன புள்ள மாதிரி விளையாடிட்டு இருந்தா.. சைல்ட் மேரேஜ் தப்பு இல்லையா ராகவ்..."
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க..

ஜஸ்ட்… கிட்டிங்… ராகவ்...யூ டன் அ… குட் ஜாப்.. மேன்” .. அதுவு‌ம் அந்த எம்எல்ஏவை சமாளிக்கிறது பெரிய டாஸ்க் தான்.... இதுல பிரியாவை உள்ள இழுக்க வேண்டாம் ன்னு நெனச்சேன்… ஏன்னா… இந்த ஆர்வகோளறு ஏதாச்சும் பண்ணிடும் அதான்.. உன்னை உள்ளே கொண்டு வந்தேன்.... இன்னிக்கு உங்களுக்கு நான் குக் பன்னனும் நெனச்சேன் பட் முடியல சாரி... சோ நாளைக்கு கண்டிப்பா லன்ச் இங்க தான்... சரியா... "என வருண் சொல்ல

" இல்ல சார்... நாங்க சென்னை போறோம்.." என பிரியா கூற...

" இது எப்போ டா நடந்துச்சு" என ராகவ் பார்க்க..

பிரியா தொடர்ந்து…” ஆமா போய் டாடி கிட்ட பேசணும்... ராகவ்வை ஒரு இன்ரோ கொடுக்கலாம்ன்னு...”

" ம்ம்ம்ம்... தட்ஸ் அ குட் ஐடியா... ராகவ்..". என வருண் கூற...

" என்னத்துக்கு இந்த ஐடியான்னு எனக்குத்தானே.. தெரியும்..." என பிரியாவை பார்த்து முறைத்து கொண்டிருந்தான்..

வருண் சாப்பிட்ட பின் எழ... ராகவ் ப்ரியாவிடம் "ஏண்டி இவ்ளோ நேரம் ஒன்னுமே சொல்லாம இப்போ சென்னை போறோம் சொல்ற... '

"நீ வந்தாலும் வராவிட்டாலும் நான் போறேன்..."

ஏன்....

அவள் தன் மொபைலை ராகவ்விடம் காண்பிக்க... அதில் விஷ்ணு அனுப்பிய மெயில் ஒரு இரண்டு பக்கம் இருக்க... மேலும் அரவிந்தின் கான்டேக் நம்பர் இருந்தது.

"ஓஹ்....சரி சரி நானும் வரேன்...."

"தட்ஸ் மை பாய்..." என பிரியா சிரித்தாள்...
இவர்கள் இருவரும் தன் குவார்ட்ஸ்க்கு கிளம்ப....

வருண் தன் அறைக்கு வந்து படுத்தான். அவன் தனிமைக்கு துணையாய் அவள் ஞாபகங்களும் வர... புரண்டு கொண்டிருந்தவன்.. அதற்கு.. மேல் முடியாமல் .. எழுந்து கொண்டான்…

"என்னாச்சு வருண்... பி ஸ்ட்ராங்... டோன்ட். . கிவ் அப்… "என தனக்கு தானே சொல்லி கொண்டான்...
எவ்வளவு முயன்றும் முடியவில்லை.. அவள்ளோடு இருந்த நாட்கள்... அவளுக்குள் அவனை தொலைத்த நிமிடங்கள்.. ஒவ்வொன்ரும் அவன் கண் முன்னால் தோன்ற.. ச்சே... என தன்னையே வெறுத்தவன்... தனக்குள்ளே தன்னிடமே சண்டை போட்டுக் தோற்று போய் அமர்ந்தான்... முடிவில் வென்றது என்னமோ சம்முயுக்தாவின் கணவன் தான்..

இத‌ற்கு மே‌ல் தாள மாட்டாமல் வேகமாய் சென்று தன் லாப் டாப்பை திறந்தான்........ அவனின் பெர்சனல் ஃபைல்லை திறந்து அதில் தெரிந்த சம்முயுக்தா வின் பால் வண்ண கன்னங்களையும்.... திராட்சை விழிகளில்லும் எப்போதும் போல் தன்னையே தொலைத்து பார்த்து கொண்டிருந்தான்....
அவன் நினைவுகளும் பின்னோக்கி சென்றது...
...........
🙂🙂🙂🙂🙂🙂
 
Last edited:

Author: Suhana
Article Title: உன் விழிகளில் விழுந்த நா‌ட்க‌ளி‌ல் 5
Source URL: JLine Tamil Novels & Stories-https://jlineartsandsilks.com/community
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Super Super Super pa... Semma semma episode... Samyuktha avan friend vishnu irukara இடத்துல irukaala ஜெய் nu yaaru ah சொல்றாங்க avanga samyuktha வருண் kuzhanthai ah... ஏன் என்ன ஆச்சி ethuku திடிர்னு கல்யாணம் panni... நல்லாதானே irunthhyஇருகாங்க... Avanodaya சொந்த ஊருக்கு poitu வந்து மறுநாள் ஏன் போனா appram one month kazhichi avana paakka வந்த appo இவன் paakka maatenu anupitaan ah... Enna பிரச்சனை nu theriyala... ப்ரியா தான் அது kandupidippaala arvi vera மைல் panni இருகான்... So ராகவ்.. ப்ரியா சென்னை poranga... Super Super Super pa.. Story ah semma ah kondu pooringa... Eagerly waiting for next episode
 
Top