What's new

கவிதைகள்!

JLine

Moderator
Staff member
சங்க காலத்தில் தமிழர் வாழ்ந்த அற்புதமான வாழ்க்கையை காலத்தால் அழியாத கவிதைகளாகவும் காவியங்களாகவும் அன்றைய புலவர்கள் எழுதி வைத்துச் சென்றதால்தான், இன்று நாம் படித்துத் தெரிந்துகொள்ள முடிகிறது.

கவின் மிகு வார்த்தைகளால் கற்றல் என்பதும் எளிமையாகிறது. கவிதை என்பது அழகியல்; கவிதை என்பது இலக்கியத்தின் கண்கள்; கவிதை என்பது ரசனையின் உச்சம்; கவிதை என்பது வாள்வீச்சு.

வாசகர்கள் தங்களுடைய கவிதைகளை இங்கே மற்றவர்களுக்குப் படைக்கலாம். புதுக் கவிதை, மரபுக் கவிதை, ஹைக்கூ எந்த வகையாக இருந்தாலும் சரி, உங்களது விருப்பம்..

பதிவு
செய்யும் முன்னர் ஒன்றுக்கு இரு முறைகள் பிழைகளை மட்டும் சரி பார்த்துக்கொள்ளவும், ஏனெனில் நான்கு வரிக் கவிதையானாலும் நாம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளினால் அக்கவிதையைப் படிப்பவர்களால் எந்நாளும் மறக்க இயலாது செய்யக் கவிஞர்களால் இயலும்.. அங்கு வார்த்தைகளில் பிழைகள் இருப்பின், அது கவிதையின் சுவாரசியத்தையே கெடுத்துவிடும்.. இது என்னுடைய தாழ்மையான கருத்து..

உங்கள்
JB
 
Top