What's new

தனி ஒரு நான் தனி ஒரு நீ நினைக்கையில் வலிக்குதே .................

saaral

New member
தலைப்பு : தனி ஒரு நான் தனி ஒரு நீ நினைக்கையில் வலிக்குதே .................

கதாநாயகன் : அபிரஞ்சன் ...

நிறைய திமிர் ஆண் என்ற ஆணவம் ...நாம் கடந்து வரும் பலரைப் போல் சற்றே மேம்பட்ட நடுத்தர வர்க்கத்தில் பிறந்தவன் . ஈர்ப்பினால் காதலில் விழுந்து அது தவறான முடிவு என்பதை உணரும் பொழுது காலம் கடந்து அவனின் வாழ்கை அவனின் உயிர் அவன் கை விட்டு போயிருக்கும் . அவனின் வாழ்வை அவனின் உயிரை மீட்டு எடுப்பானா ???

கதாநாயகி : கண்டுபிடியுங்கள் ........

மென்மையானவள் , அவள் கடந்து வந்த பாதை அவளை கடுமையானவளாக மாற்றி இருக்கும் . உலகை தன்னவன் துணை இருந்தால் எதிர்த்து தயிரியமாக போராடலாம் ..... அதே கொண்டவன் துணையில்லாமல் போராடும் பொழுது பல தடைகளை ,இன்னல்களை ,மனித போர்வை போர்த்திய மிருகங்களை தாண்டியே செல்ல வேண்டி இருக்கிறது .
 

saaral

New member
அத்தியாயம் - 1

அந்த குளிரூட்டப்பட்ட அறையில் பலவகையான பனி கூல் (ஐஸ் கிரீம் ) வித விதமான நிறங்களில் அழகாக கண்களை கவரும் வகையில் அடுக்கி வைக்க பட்டு இருந்தது . அங்கு ஒரு சிறுவன் தனது பெற்றோருடன் வளம் வருவது நம் கண்களுக்கு தெரிகிறது .

அந்த சிறுவனின் கண்களில் தெரிந்த மின்னல் எதை வாங்குவது என்ற ஆர்வம் ... !! இவை அனைத்தையும் ரசித்தப்படி அவனின் தாய் அவன் பின் அலைந்து கொண்டு இருந்தாள் .

அவர்களின் அருகினில் இருவரையும் கண்களில் தாய்மாயுடன் முகத்தினில் மென்மையுடன் அவர்களையே வைத்த கண் வாங்காமல் கைகளை கட்டி நிற்பவனை பார்த்தால் அந்த சிறுவனின் தந்தை போன்று தெரிகிறது . தாய்மை பெண்களுக்கானது மட்டுமே அல்ல..., ஆண்களும் பிரத்யேக அன்பை தங்களின் பிள்ளைகளின்மேல் வைத்திருப்பார்கள் .

பிள்ளை விழுந்தால் பதறி துடிப்பவள் தாயாக இருந்தால் தனது பதட்டத்தை வெளியே காட்டாமல் அடுத்தமுறை எப்படி விழாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி கொடுப்பவர் தந்தை . அதே தந்தை அனைவரும் உறங்கிய பின் மனது கேளாமல் எவரும் அறியாமல் பிள்ளை விழுக்காயத்தின் மீது மருந்து தடவுவதும் நாம் அரியமாட்டாத ஒன்று .

வாருங்கள் அருகில் சென்று அவர்களை கவனிப்போம் .

"அப்பா எனக்கு ...எனக்கு " என்று தனது ஆட்காட்டி விரலினை நாடியில் தட்டி யோசிக்கும் சிறுவன் பிடிபட்டது போல் "ஹ்ம்ம் எனக்கு ஸ்ட்ராவ்பெர்ரி ஐஸ் கிரீம் வேணும் ...ஒன் டப் ...அம்மாக்கு வேண்டாம் ஓகே " என்று கண்களில் குறும்புடன் தந்தையை நோக்கி பேரம் பேசிக்கொண்டு இருந்தான் .

இதை கேட்ட அவனின் தாயோ "ஷ்ரவன் இது அநியாயம் ...நான் தான் ஐஸ் கிரீம் சாப்பிட கூட்டிட்டு வந்தேன் அதும் எனக்கு பிடிச்ச ஐஸ் கிரீம் சொல்லிட்டு எனக்கு குடுக்க கூடாது சொல்ற இரு உனக்கு இருக்கு " என்று பொய் கோபத்துடன் இடுப்பினில் இரு கைகளையும் ஊன்றி மிரட்டினாள் .

இவர்களின் செல்ல சண்டையை பார்த்த அவன் "ஹே ரதிமா என்ன இது சின்ன பிள்ளை மாதிரி ...ஷ்ராவனுக்கு தான் ஐஞ்சு வயசு நீயும் ஐந்து வயது குழந்தை போலவே அடம் பிடிக்கிறாயே வேணும் என்றால் உனக்கு தனியா வாங்கி தரேன் " என்றான் ஆனால் அதில் கண்டிப்பு என்பது மருந்தளவிற்கும் இல்லை .

"உனக்கு தெரியாது அக்ஷய் விட்டா ஒன் டப் முழுசா சாப்பிட்டு ஸ்கூலுக்கு போகாமல் மட்டம் போட்ருவான் ....இப்பதான் நாடு விட்டு நாடு வந்திருக்கோம் இங்க சீதோஷண நிலைக்கு அவன் செட்டாகணும் .... சோ எனக்கு தனியா வேண்டாம் " என்று புரியும் படியாக அந்த அக்ஷய் என்பவரின் காதின் அருகினில் சென்று எதிரில் நிற்கும் மகனுக்கு கேக்காமல் மெதுவாக கூறினாள் .

"அங்க என்ன சீக்கிரட் " என்று மூக்கை துருத்தி கண்களை சுருக்கி ஆழ்ந்து பார்த்து கேட்டான் ஷ்ரவன் .

"அக்ஷய் பார்க்கிறது பாரேன் அப்படியே அப்பா மாதிரி கொஞ்சமாச்சும் என் மகன் என்னை போல இருக்கானா ? " என்று குற்ற பத்திரிக்கை வாசித்தாள் ரதி .

அவளின் கூற்றில் சற்றே சத்தமாக சிரித்த அக்ஷய் "ரதி பிள்ளை அப்பா மாதிரி இருக்கிறதுக்கு நீ சந்தோச படனும் இப்படி கோபப்படக்கூடாது " என்று கூறிக்கொண்டே ஷ்ரவனை தூக்கிக் கொண்டு பணம் செலுத்தும் இடத்திற்கு சென்ற அக்ஷய் அவர்களுக்கு தேவையான ஐஸ் கிரீம் சொல்லிவிட்டு பணம் செலுத்தி , காலியாக இருந்த மேஜையின் அருகில் வந்து ஷ்ரவனை அமரச்செய்தான் . ரதியும் எதிர் இருக்கையில் அமர்ந்தாள் .

இவர்களின் சம்பாஷணை ஒரு புறம் என்றால் அதே அறையில் இவர்களின் கண் மறைவான இடத்தில் இருந்து பார்த்த நான்கு விழிகள் வேறு கதை பேசின . ஒரு ஜோடி விழிகள் அந்த குளிரூட்டப்பட்ட அறையை உஷ்ணநிலைக்கு எடுத்து செல்லும் அளவிற்கு கொதித்து கொண்டு இருந்தது . ஒரு ஜோடி விழிகளோ வன்மத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தது .

அக்ஷய் தாய் மகன் இருவருக்குமான பிரச்னையை தீர்த்து ஐஸ் கிரீம் சாப்பிட்டு கிளம்புவதற்குள் போதும் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டான் . இருந்தும் மனதில் தளும்பிய சந்தோசத்துடன் அவர்களை கையாண்டான் . அவனின் தனிமைக்கு கிடைத்த வரம் அல்லவே அவர்கள் . அவனின் குடும்பமல்லவா தொல்லைகள் தந்தாலும் அந்த உறவுகள் இனிக்க தான் செய்யும் .

அக்ஷய்,ரதி மற்றும் ஷ்ரவன் மூவரும் அவ்விடம் விட்டு கிளம்புவதை நம்மால் காண முடிகிறது . ஷ்ரவன் தங்களின் காரை நோக்கி கதவை திறந்து கொண்டு ஓடினான் . எங்கே அவன் ரோட்டிற்கு சென்று விடுவானோ என்று ரதி அவன் பின் வேகமாக ஓடினாள் .

அக்ஷய் இருவரையும் பார்த்துக்கொண்டே வேக எட்டுக்களுடன் முன்னே நடந்தான் . அவனின் நடை ஒரு நொடி தயங்கினார் போல் தெரிகிறதே ?? ஏன் என்ன ஆச்சு ? . அவனின் கண்களில் அணிந்து இருந்த கருப்பு கண்ணாடி அவனின் பார்வை சென்ற திக்கை நமக்கு காட்டாமல் மறைத்துவிட்டது .

(ஹ்ம்ம் கத்திரிக்காய் முற்றினால் கடை தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும் ) மூவரும் ஒரு வாரம் முன் புதிதாக வாங்கப்பட்ட சுசூகி சியாஸ் அடர் நீல நிற காரில் ஏறினர் .

மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளை கவனமாக அழைத்து செல்வது என்பது கட்டாயம் . நிச்சயம் அவர்களுக்கான குழந்தைகளுக்கான பிரத்யேக இருக்கை வைத்து பாதுகாப்பு பட்டயம் போட்டு அழைத்து செல்ல வேண்டும் . சில நாட்கள் முன் தான் இவர்கள் இந்தியா வந்திருந்தனர் ஆகையால் அதே போல் ஷ்ரவனின் பாதுகாப்பு கருதி பின் இருக்கையில் அவனின் இருக்கையில் அமரச்செய்து பாதுகாப்பு பட்டயம் போடுவதை நம்மால் காண முடிகிறது .

அக்ஷய் ஓட்டுநர் இருக்கையில் அமர ரதி முன் பக்க இருக்கையில் அமர்ந்தாள் . அந்த வாகனம் சென்னை சாலை நெரிசலில் தாம்பரத்தை நோக்கி சீரிப் பாய்ந்தது .

தாம்பரம் .....

தாம்பரத்தில் சற்றே உள்ளே வந்தால் நடுத்தர மக்கள் வாழும் இடம் போல் நமக்கு தெரிகிறது . அங்கு அந்த அடர் நீல நிற கார் ஒரு அடுக்குமாடி குடி இருப்பின் உள் நுழைகிறது . வாருங்கள் அந்த வாகனத்தை கவனிப்போம் .

ஹ்ம்ம் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடி இருப்பு போல் தெரிகிறது மிகவும் சுத்தமாக ,குழந்தைகள் விளையாட புள் தரை ,பார்க் ,செயற்கை நீர் ஊற்று என்று அனைத்து வசதிகளுடன் ரம்மியமாக இருந்தது .

அக்ஷய் , ரதி மற்றும் ஷ்ரவன் மூவரும் மின் தூக்கியில் ஏறுகின்றனர் . அவர்களை தொடர்ந்து போனால் அந்த மின் தூக்கி நான்காம் தளத்தை அடைவதை காண முடிகிறது .

நான்காம் தளத்தில் அவர்களின் வீட்டிற்குள் சென்றனர் . மூன்று படுக்கை அரை கொண்ட நவீன குடி இருப்பு . அவ்ளோ அழகாக சுத்தமாக தேவையான பொருள் மட்டுமே அதன் அதன் இடத்தில் வைக்கப்பட்டு நேர்த்தியாக இருந்தது .

"ரதிமா நாளைக்கு ஆபீஸில் ரிப்போர்ட் பண்ணனும் , ஷ்ரவனுக்கு பஸ் வசதி உண்டு வீட்டு வாயிலில் ஏற்றி விடலாம் . அதற்கு ஏற்பாடு செய்து விட்டேன் . மாலை நான்கு மணிக்கு மீராவின் அத்தை பத்மா ஆண்ட்டி வந்து ஷ்ரவனோட இருப்பாங்க ஷ்ரவன் லீவு நாளும் அவனுடன் இருக்க வேண்டும் என்றால் இருப்பார்கள் ...ஆனால் நாம் முழு மாத சம்பளம் தான் கொடுக்க போகிறோம் பாவம் தனியாக இருப்பவர் நம்மோடு இருப்பது அவர்களுக்கும் ஆறுதலாக இருக்கும் " என்றான் அக்ஷய் .


"அக்ஷய் பத்மா ஆண்ட்டி இங்கயே தங்களாமே எதுக்கு வந்து வந்து போகணும் ?? " என்றாள் ரதி .

"அருகில் ஒரு சிறிய வீடு தான் அவர்களுது ரதி ஆனால் அவர் கணவருடன் வாழ்ந்த வீடு அதை விட்டு வர அவர்கள் சம்மதிக்கவில்லை அதான் இப்படி ஒரு ஏற்பாடு " என்றான் அக்ஷய் .

"ஒஹ் சரி அக்ஷய் எனக்கு தூக்கம் வருது நான் போய் தூங்கிறேன் " என்று கூறி மகனின் அருகில் சென்று உறங்கிப் போனாள் .

அக்ஷய் மற்றொரு அறையில் அவர்கள் அமெரிக்காவில் செய்த வேலையின் இறுதி கட்ட அறிக்கையை தயார் செய்துவிட்டு அப்படியே உறங்கி போனான் .

விடியல் என்பது பலருக்கு பல விதமாக இருக்கும் . இவர்களின் விடியல் இவர்களுக்காக என்ன வைத்து காத்துகொண்டு இருக்கிறது என்பதை பார்ப்போம்...!
 
Top