What's new

தா(தே)னாய் வந்த தேன்மொழியே! அத்தியாயங்கள் 1, 2 3

Subageetha

New member
தோழமைகளே,
நான் சுகீ.. பல வருடங்களாய் உங்களுடன் வாசகியாய் பிரயாணப்பட்ட பின்னர் ஆர்வமாய் எழுத முனைகிறேன். எனது முதல் தொடர்கதை.. உங்கள் கருத்துக்களை நிச்சயம் எதிர்பார்க்கிறேன்... தா(தே )னாய் வந்த தேன் மொழியே .. சமூகத்தில் நிலவும், இன்றைய சமூகம் சந்திக்கும், முக்கிய பிரச்சனையை அடித்தளமாக கொண்டது...காதலும் மோதலும் நிச்சயம் உண்டு. உங்களுக்கு சுவாரஸ்யம் குறையாமல் எழுத முயல்கிறேன்.. உங்கள் கருத்து மட்டுமே என் எழுத்துக்கு மெருகேற்றும்.
முதல் பதிவை நாளை பதிகிறேன்.
நன்றிகளுடன்
உங்கள் தோழி
சுகீ
 

Subageetha

New member
😍காலை வணக்கங்கள்.!! இதோ இன்று தேன்மொழி முதன்முதலில் உங்களை நோக்கி தனது முதல் அடியை வைக்கிறாள்..அவளை உங்களில் ஒருத்தியாக ஏற்பீர்கள் எனும் நம்பிக்கையுடன் ...
சுகீ..

கதையின் நாயகி : தேனு
நாயகன் :ரிஷி வேதநாயகம் .

மன்னவனே, என் மனதை மறைத்தேன்,
மயக்கும் உன் புன்னகை கொண்டே ,
நான் பெண்ணெனும்
உணர்வை பெற்றேன்...

மரத்துப்போனத்தாய் நினைதிருந்த உணர்வையும்,
மரித்துப்போனத்தாய் நினைதிருந்த இதயத்தையும்

உயிர்த்தெழ செய்துவிட்டாய்..
பெண் என் மென்மை உணர மாறனவன் கணைகள் போதும் ,
பூவிர்க்கு பின்னால் இருக்கும் இதயத்தின் கூர் கணைகள் வேண்டாமே.!!


உயர்ந்து ஒரு மதம் கொண்ட யானையின் கம்பீர அழகுடன் நிமிர்ந்து நின்றிருந்தது உயர்திரு.வேதநாயகம் அவர்களின் அரண்மனை.. முன் காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள் வேதநாயகத்தின் முன்னோர்கள்..இப்பொழுது சர்வ வல்லமை படைத்த தொழிலதிபராய் வேதநாயகம்..

நாளை அவர்களது சீமந்த புத்திரன் ரிஷி வேதநாயகம் ,தனது பிறந்த நாள் ,அதுவும் முதல் வயதில் அடி எடுத்து வைக்கும் பெருநாள்...அவரது மாளிகையே தேவேந்திரனை கொண்டாடும் மாயலோகமாய்..ஏறத்தாழ பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மன்னர்பரம்பரையையும் ,தொழில் சாம்ராஜ்யத்தையும் கட்டியாள மதம் கொண்ட யானையை ஒத்த கருமையான நிறத்தையும் ,கம்பீரத்தையும் பெற்று பிறந்திருந்த ஒற்றை வாரிசு. மூன்று தங்கைகளுடன் பிறந்திருந்த வேத நாயகத்திர்க்கு ஒற்றை பிள்ளையுடன் நிறுத்தி வைத்தது விதி ..ஏனோ பெண் குழந்தைக்கான அவர்களது ஏக்கத்தை விதி புறக்கணித்தது.

ஒற்றை பிள்ளையானாலும் ,ஆள பிறந்த மகவாதலால் வேதநாயகம் தம்பதியினர் அதிக செல்லம் குடுக்காமலும் ,சமூக நியாய தர்மங்களை கற்பித்தும் வளர்த்தனர். ரிஷியின் அன்னை மகாபாரததையும் ராமாயணக் கதைகளையும், தன் மகனுக்கு புகட்டி வளர்த்தார்.
திரௌபதி துகிலுரிப்புப் படலத்தில் ,ரிஷியிடம் திரௌபதிக்கான கண்ணீர் வெளிப்படும் அளவிர்க்கு மென்மையானவனாய் ரிஷி ... வளரும் பருவத்தில் பெண்ணை அணைவாய் காக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளவன் ஆண் என்பதை போதித்தார் அவன் அன்னை.. பெண்களின் மாதாந்திர உடல்சோர்ரவபற்றிக் கூட அவன் அறிந்திருந்தான்... உன்னால எந்த பொண்ணும் அழக் கூடாது ரிஷி,அப்படி நடந்தா நீ, தோற்த்துப் போய்ட்டன்னு நினைச்சுக்கோ.! எனும் போதனை அவன் பெற்றோரிடமிருந்து அவனுக்கு கிடைத்தது .. அவன் பிரயாணப்படப்போகும் தொழில் உலகில் எப்பேர்பாட்ட சோதனைகளையும் கடக்க அவனை அவன் பெற்றோர் தயார் செய்தனர்...அவன் கடக்க வேண்டிய பெண்களும் உண்டு....ஏற்க வேண்டிய பொறுப்புகளும் ஏராளம் மன்னனாயிற்றே....

போரினை சந்திக்க மாவீரன் தயார்....போர்க்களம் அவனுக்காக வைத்திருக்கும் போர் முறையை அவன் வெல்வானா?

கரிய நிறம், யானையை ஒத்த உயரம்., சிங்கத்தின் கம்பீரம்....சிறுத்தையின் வேகம்...கருணையை காட்டும் விழிகள்.. ராஜ வம்சம் என்று காட்டும் அங்க அமைப்பு..கருமையானாலும் எதிரில் நிற்போரை மயக்கும் காந்தப் பார்வை. அகன்ற புஜங்கள் ....தொழிலில் பாயும் புலி....நெருங்கியவர்களின் குழந்தை கண்ணன்....ரிஷி வேதநாயகம் ...

ரிஷி தொழில் உலகில் நுழைந்து நான்கு வருடங்கள் கடந்து விட்டது..அயல் நாட்டில் தொழில் முறை பற்றிய உயர் கல்வியை பயின்றபடியே அன்னாட்டில் தங்கள் தொழிலின் ஒரு பகுதியை ஏற்று நடத்தி வந்தாலும் ,முழு வீச்சில் நான்கு வருடங்களாக பாய்கிறான். இருபத்தெட்டு வயதாகிய ரிஷிக்கு அவன் மூன்றாவது அத்தை மகளையே மணமுடிக்க நிச்சயிக்கப்பட்டுள்ளது...அமெரிக்க கலாசாரத்தில் வளர்ந்த நிலாவிர்க்கு ஈர்ப்பு நிச்சயம் ராஜ வம்சம் என்பதிலும் இல்லை..ரிஷியிடமும் இல்லை...

ஏனோ மனதிர்க்குப் பிடிக்காவிடினும் இந்த திருமணத்தை அவள் நிறுத்த முயற்சிக்கவும் இல்லை...மஞ்சள் கயிறு மாஜிக் அவளிடம் வேலை செய்யுமா..ரிஷி தன் பண்பால் அவளை வெல்வானா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை...
காலம் மட்டும்தான் விடை அளிக்க இயலும்.
.
என்னை பொறுத்தவரை..முழு மன ஈடுபாடின்றி திருமணம் புரிதல் சரியல்ல... திருமண பந்ததின் வாசல் முதலிரவு அறையுடன் நிச்சயம் முடியப்போவதும் இல்லை ...ரிஷிக்காக நான் மிகவும் வருந்துகிறேன். திருமணம் பற்றி அவன் ஏன் நிலாவிடம் பேச விழையவில்லை...அவன் பெற்றோரிடம் நம்பிக்கையும் ..திருமண பந்தத்தின் மீதான அவன் ஈர்ப்பும் காரணமாக இருக்கலாம்.

.தொழிலதிபனான ரிஷி இந்த விஷயத்திலும் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக கையாண்டிருக்க வேண்டும்..ஆனால் பெற்றோரை அவன் முழுமையாக நம்புகிறான்..இதில் தவறேதும் இல்லையே!..ஊருக்கே ராஜாவானாலும் பெற்றோரின் உயிரான கண்ணன் அல்லவா?
.
நிலா அவன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்பவளாய் இருக்க இறைவனை வேண்டுவோம்.! நிலா நிஜத்தை புரிந்துக் கொள்ளப்போகிறாளா ?இல்லை தன்னை வானின் நிலா என்று மமதை கொள்ளப்போகிறாளா எனத் தெரியவில்லை.. மென்மையான,மேன்மையான ரிஷி அவளுக்கு இந்திய கலாசாரத்தை புரிய வைக்கவும் தனக்கேற்றவளாக அவளை மாற்றவும் நிறைய சிரமங்களை ,சிலுவைகளை சுமக்கப்போகிறான் என்பது நிச்சயம் எனக்குத்தெரியும். ...

அவன் கனவில் பாவாடை சட்டை அணிந்து இரட்டைப்பின்னலுடன் ,மல்லிகைச்சாரத்தை இருபுறமும் தொங்குமாறு அணிந்து,குடை ஜிமிக்கி ஆட..காற்கொலுசின் சலங்கைகள் இசைக்க ,மாளிகையை ரீங்காரத்துடன் சுற்றிவரும் பதினொரு வயது நிலா ஆட்சி செய்கிறாள்..பள்ளி விடுப்பு விட்டவுடன் நிலாவின் அம்மா ராஜேஸ்வரி மகளை அழைத்துக்கொண்டு இந்தியா வந்துவிடுவார். மாமியார் வீட்டில் ஒருமாதமும் தமையனின் வீட்டில் ஒருமாதமும் நிலவை இருக்கச்செய்வது அவரது வழக்கம்..ஆனால் ,வயது ஏறும்பொழுது நிலாவிர்க்கு இந்தியா வருவதில் விருப்பம் குறைந்து, பின்னர் அவள் வருவது நின்றே போனது,வெகு வருடங்கள் கழித்து இனிதான் அவன் நிலாவைக் காணபோகிறான் .

திருமணத்திற்க்கு இன்னும் ஒருவாரமே இருக்கிறது. நிலா இந்தியா வந்து பத்துநாட்கள் ஆகிறது..ரிஷியும் அவளும் ஒத்தாற்போல ஆடைகள் தேர்வு செய்கிறார்கள்..இருவரது ரசனையும் ஏறத்தாழ ஒரேபோல இருப்பதை கண்டு இருவரின் பெற்றோரும் மகிழ்ச்சியாய் புன்னகையை பரிசளித்துக்கொள்கிறார்கள். ராஜகுடும்பத்து வாரிசான ரிஷி..-

நிலா திருமண ஏற்பாடுகள் நிச்சயம் உலக அளவில்பேசத் தகுந்ததாக இருக்கும்...இந்தியாவிலும்,உலகின் அவர்கள் தொழில்புரியும் நாடுகளில் இருந்தும் திருமணத்திற்காக வருகை தருவோர் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர்..இதுதவிர உறவினர் மற்றும் தொழிலாளிகள்...திருமணதிர்க்காக பணிபுரிவோர் அனைவருக்கும் ஊக்கத்தொகையுடன் ,ஆடைகளும் பரிசளித்து இருந்தார் வேதநாயகம்..மக்கள் நலன் மன்னன் கடன் என்பதை அவர் இன்னும் மறக்கவில்லை.. சைவ அசைவ உணவுகள் தனித்தனியே பரிமாறப்பட்டது..ரிஷி வயதிர்க்குறிய கல்யாணக் கனவுகளுடன்...இத்தனை நாட்களாய் மனைவியிடம் மட்டுமே அற்பணிக்க வேண்டி காப்பாற்றி வைத்திருந்த கற்புடன் காத்திருக்கிறான்.


கதையின் போக்கு எப்படி இருக்கப்போகிறது என்று ..தெரிந்துக்கொள்ள உங்களுடன் நானும் காத்துக்கொண்டிருக்கிறேன். மீண்டும் அடுத்தப்பதிவில்,ரிஷி - நிலா திருமண விழாவில் இணைவோம் !!
 

Chitra Balaji

New member
Super Super Super pa... Nice starting... Rishi romba menmaiyanavan.... Romba azhaga வளர்த்து இருக்காங்க avana avanoda அம்மா... பெண்களை கஷ்டங்களை solli so avan பெண்களை mathikiravanaga தான் irupaan... Chinna வயசுல பாத்தது nila va appo தமிழ் கலாச்சார படி இருந்து irupaa இப்போ full ah change ஆயி இருக்கா... Avaluku பெருசா interest இல்ல போல இந்த கல்யாணம் la but அவன் neriya கனவுகள் oda கல்யாணத ethir kolran paakalam enna நடக்க poguthunu.. Waiting for next episode
 

KaniRamesh

New member
Nice starting sis....Rishi grown up pathi sollirunthingala sema...intha kaalathu Aan pillaiya epadi valakanumnu puriya vachitinga...nila mrge stop panuvala illa aftr mrge rishi ya kodumai paduthuvala waitng dr...best wishes fr u💐💐💐💐
 

Subageetha

New member
கனி ரமேஷ், சித்ரா பாலாஜி உங்க இருவருக்கும் நன்றிகள் பல... . இந்த குணம் கொண்ட ஆண்கள் நிச்சயம் உண்டு.
 

Subageetha

New member
(தேன்)மொழி .2

நீ என் தேவதை எனும் நினைப்பில் ,
உந்தன் எண்ணங்களில்
உயிர்த்திருக்கிறேன்! ,

உனக்காகவே தனித்திருக்கிறேன் !
எனை உறையச் செய்பவளும் நீ...
உன் வெப்பத்தில் உருகச்
செய்பவளும் நீ !
நிலா தகிக்குமா இல்லை எனை அணைக்குமா?
உனக்காய் மட்டுமே காத்திருக்கிறேன் ,என் மணவாட்டியே !

எவ்வளவோ காலம் முன்னேறி இருப்பினும் மங்கள நாண் பூட்டிய பின்னர்தான் தற்பொழுதுள்ள நாகரீகதின்படி திருமண வரவேற்பு போன்றவை என ரிஷி தீர்மானமாக சொல்லிவிட்டதில் அவனது பெற்றோர் மகிழ்ச்சியின் எல்லைக்குச்செல்ல, ஒரு பட்டிக்காட்டான என் தலையுல கட்டறீங்க என்று தன் பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள் நிலா...உள்ளூர தன் தமையன் மகன் பற்றிய மகிழ்ச்சியே அந்த அன்னையிடம். நிலாவின் தந்தை இந்த காலத்தில் இப்படியொரு பையனா என மெச்சிக்கொண்டிருந்தார்.வெளியில் சொல்லி நிலாவை தூண்டிவிட இருவருமே விரும்பவில்லை...

அமெரிக்காவுல வளந்த தன்னை இந்த பந்தத்தில் மாட்டிவிட இவர்கள் எண்ணுவதற்க்குக் காரணம், ரிஷி வீட்டினரின் சொத்துதான் என அவள் தீர்மானமாக நம்பினாள் ..திருமணத்திற்க்கு சம்மதிக்காவிட்டால் தன் பெற்றோரின் சொத்துக்கள் தனக்கு கிடைக்காதோ எனும் அச்சமும் நிலாவின் மௌனத்திர்க்கு ஒரு காரணம்..திருமணம் முடிந்த பின்னர் ரிஷி வரவில்லை என்றாலும் தான்மட்டும் அமெரிக்கா சென்று விடலாம் என்பது அவள் கணக்கீடு..

ஆனால் ,எங்கு தன் மகள் திருமண பந்தத்தின் சிறப்பறியாது லிவ் இன் கலாசாரத்தில் மூழ்கிவிடுவாளோ எனும் அச்சமே அவர்களது இந்த ஏற்பாட்டிர்க்குக் காரணம். அண்மை காலங்களில் இரவுநேர விடுதிகளில் இருந்து நிலா சுய நினைவுடன் திரும்புவதில்லை...தனக்குப்பின் தன் மகள் தொழிலை எடுத்து நடத்துவாள் என நினைத்திருந்தார் நிலாவின் தந்தை செல்வபதி..
ஆனால் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தவுடனேயே நிலாவின் போக்கு திசை திரும்பியது..கல்வியில் நாட்டம் குறைந்து, அத்துணை நாட்களாய் அருமையாக தன் பெற்றோரால் வளர்க்கப்பட்ட நிலா,கட்டுப்பாடுகளுடன் கூடிய இந்திய வளர்ப்புமுறையை வெறுக்கலானாள். சுதந்திர வானில் பறக்க விரும்பிய அவளுக்கு தோதான தோழமைகள் கிடைக்க... இன்று நிலைமை திருமண ஏற்பாட்டில் வந்து நிற்கிறது.ஏனோ
அந்நிய மண்ணில் அருமையாய் வளர்க்கப்பட்ட அற்புதமான நல்ல தோழமைகள் அவளுக்கு வாய்க்கவில்லை.

கையில் மருதாணி இடுதலில் தொடங்கி கூரை சேலை உடுத்துவது வரை அனைத்துமே தகராறுத்தான்...என்னதான் சொந்த அண்ணனாக இருந்தாலும் சம்மந்தி முறையில் இருக்கும் வேதநாயகத்தின் காதுகளுக்கு எட்டாமல் சமாளிப்பதற்குள்...அம்மா...நிலாவின் அம்மா ராஜேஷ்வரிக்கு இதய வலி வாராமல் இருந்தது அதிசயம்தான்!! செல்வபதிக்கோ திருமணம் நல்லபடியாக முடிந்து நிலாவையும்,வேறு குழந்தைகள் இல்லா நிலையில் தன் தொழிலையும் ஏற்க வருவான் , தன் மருமகன் ரிஷி எப்பொழுது தன் மகளின் கழுத்தில் மங்கள நாண் பூட்டுவான் என்ற ஏக்கம்! திருமணம் முடிந்தபின்னர் அமெரிக்க மண்ணிலிருந்து தாயகம் திரும்பிவிடவே அவர் மனம் துடித்தது. நிலாவின் மணக்கணக்கீடுகளும் ஒரு காரணம்..

ஆரம்பமே பல்வேறு முரண்பாடுகளைக்கொண்ட இருவரின் வேறுபட்ட மனோ நிலைகளுடன்..விதியோ இருவரது கை ரேகைகளுக்குள் முடிச்சிட முனைகிறது..முதல் கோணல் முற்றும் கோணல் என்று நிலாவின் நடவெடிக்கைகள் அவர்கள் வாழ்க்கையை வேடிக்கை ஆக்கிவிடுமோ என உள்ளூர என் மனம் தவிக்கிறது.

பெண்களை பற்றி உயர்வாகவே சொல்லிக்கொடுக்கப்பட்டு , வளர்ந்திருக்கும் ரிஷியால் கட்டுப்பாடுகளை கட்டுப்பாட்டித்தனம் என சாடும் ,மீறும் நிலாவை மாற்ற முடியுமா? எனக்கென்னவோ சந்தேகமாய் உள்ளது.

இதோ திருமணநாள் காலை..அக்னியின் முன் நிலாவின் கை பிடிக்க (தீ குளிக்க) ,குளிர்ச்சியை அறியாதவளான அத்தை மகள் அருகில் ரிஷி.காதலை கண்களில் தேக்கியபடி....வெளுப்பான தன் கைகளுக்கருகே கரும்காரங்கள் உடையவனான மாமன் மகனை வெறுப்பேனும் கரும்காண்ணாடி அணிந்தவளாக பார்த்து அமர்ந்திருந்தாள் நிலா,,,

ஏ !உக்கிரத்தில் காயும் பெண்ணே, நிலாவேன்று பெயர் வைத்தால் மாசற்ற நிலாவாகி விடுவாயோ ?மாசற்ற எம்மன்னவன் உனக்கு மாலையிட வருகையில் ,குளிரதென்றலாய் வீசாமல் ,சூராவளியாய் நீ அமர்ந்திருப்பதை காணும்பொழுது என் உள்ளுக்குள் குளிர்கிறதே.!!

ஒருவழியாக மந்திரங்கள் உச்சரித்து ,மங்கள வாத்தியமாம் நாகஸ்வரம் முழங்க திருமாங்கல்யத்தை உளப்பூர்வமாக நிலாவின் கழுத்தில் பூட்டினான் ரிஷி.அனைத்து ஸம்ப்ரதாயங்களும் முடிந்து மாளிகை உள்ளே நுழையும் பொழுது கூரை சேலை காலை தடுக்கிவிட ரிஷியின் கரங்களிலே தஞ்சம் புகுந்தது அந்த நிலவு...எத்துணை இடர் வந்தபோதும் உனக்காய் நான் உள்ளேன் சகியே ! என்று ரிஷியின் மனம் ஆரவார கொண்டாட்டம் இட்டது..

முதலிரவில் தனிமையில் மனையாளை சந்திக்க மனதில் ஆயிரம் ஒத்திகைகள் அவன் மனதில்....பூவை விட மென்மையான ரிஷியின் முகம் பாவையவள் வருகைக்காய் காத்திருக்க...நிலவு அவன் அறைக்குள்ளே அடியெடுத்து வைத்தது.

ஒருவருக்கொருவர் புரிதலின் பின்னர் கூடலில் இணையலாமென மன்னன் நினைத்திருக்க அவன் மனையாட்டியோ...சில்லி ரிஷி...ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணுறது உடம்பால ஒருதருக்கொருத்தர் புரிஞ்சுக்கத்தான்...காலம் பூரா இருக்கு நாம மனச புரிஞ்சுக்க... என்று தன் தேவையை அவள் கூற...தவறில்லை என தலையாட்டினான் ரிஷி,,, நீண்ட காத்திருப்புக்குப்பின் பெண்ணின் தேகத்தில் இணைந்தும் ,அவனுள்ளே ஒரு அவஸ்த்தை...நிச்சயம் அது இன்பத்தால் வந்த அவஸ்த்தை அல்ல...


தேன் நிலவு காலத்திலும் உடல் சார்ந்த தேவைகளுக்கு மட்டுமே ரிஷியை நாடிய நிலா..தன்னை பற்றி பகிர்ந்து கொள்ளவும் இல்லை...அவனை பற்றி அறிய விழயவும் இல்லை...எதிலோ தோற்ற உணர்வுடன் ,வழக்கமான அலுவல்களில் தன்னை ரிஷி நுழைத்துக்கொள்ள,அதுவே நிம்மதி என்று அவளும் இருந்துவிட்டாள். அமெரிக்கா சென்றுவிட்ட தன் பெற்றோருடன் பேச நிலாவிர்க்கு விருப்பமில்லை.. அவர்களும் மகள் குடும்ப வாழ்வில் புக நாம் விலகியிருத்தல் அவசியம் எனக்கருதி விலகி இருக்க முடிவெடுத்தனர்.

ரிஷியின் பெற்றோருடன் வசிப்பது தன் சுதந்திரத்திர்க்கு தடை எனக்கருதி சென்னையிலிருந்து மும்பை அல்லது பெங்களூரு சென்றுவிட ரிஷியை துளைக்கலானாள். ரிஷியும் மும்பை சென்றால் தொழிலை இன்னும் விரிவு செய்ய வசதி என நினைத்து சரி என்றான்...

இனி ...
விதியின் சதிகள் ஆரம்பம்.....
 

Chitra Balaji

New member
Enna pa இது rendu perukum கல்யாணம் ah aaidicha அப்பி thenu.... Nila semma selfish la avaloda தேவை ah மட்டும் புத்தி pannikita... Avaloda activities seri illa innum vitta suththamaa நாசம் ah போடும் nu rishi தலை la kattitaanga... Ava சொத்து kaaga thaan rishi ah கல்யாணம் panni vechi இருகாங்க nu nenaichi kitu இருக்கா.. Avaluku சொத்து தர மாட்டாங்கன்னு ஒன்னும் சொல்லாமல் avana கல்யாணம் panni இருக்கா... Odambu sentha pothumaa manasu சேர vendaam ah... மும்பை vera தனி குடித்தனம் porangala enna aaga pooguthoo... Rishi பாவம்.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Subageetha

New member
(தேன்)மொழி .3
மும்பை மாநகரம் தனது அலாதியான சுறுசுறுப்பில் வேகமாய் இயங்கிக் கொண்டிருந்தது.. பாந்த்ரா மேற்க்குப் பகுதியில் குடியிருப்பு... ரிஷிக்கு சொந்தமான மூன்று படுக்கையறைகள் கொண்ட ஃப்ளாட் ஒன்றை அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கி இருந்தான் ரிஷி...

மும்பையில் தங்க வேண்டி இருந்த சமயங்களில் , சொந்தமாய் தன் கையே தனக்குதவி என்று ஏதாவது எளிய சமையல் செய்துக்கொண்டு ,அலுவலகப் பணிகளை கவனிக்கும் வழக்கம் அவனது. வீடு நேர்தியாக பரமரிக்கப் பட்டிருந்தது. அடுக்களையில் சமயலுக்குத்தேவையான பொருட்கள் ஓரளவிர்க்கு.. தனியாய் இருக்க வேண்டி இருந்ததால் வேலைக்கு ஆட்கள் இல்லை..

நிலாவிர்க்கு எப்பொழுதும் கூப்பிட்ட குரலுக்கு வேலையாள் வந்து நிற்க வேண்டும். தேவையானவற்றை,ரிஷி தனியாகவே செய்ய வேண்டி இருந்தது..
கடைகளுக்கு மனைவியுடன் செல்லத்தான் அவனுக்கு விருப்பம்..வேலையாட்கள் வைப்பதுகூட அவனுக்கு பிடித்தமில்லை..தனியாக மனைவியுடன் களிக்க அவன் இதயம் விரும்பியது...
அவன் மனைவிக்கோ இவன் மனோ நிலைக்கு நேரெதிர் .. விட்டுக்கொடுக்கவும் அவளை சந்தோஷமாகவும் வைத்துக்கொள்ள அவன் பிரயர்தானப்படுகிறான் ,,..அங்காடிகளில் வீட்டு பொருட்கள் வாங்கக்கூட அவள் வர விரும்புவதில்லை...

தன் பிடிதமின்மையை நிலா வெகுவாக காண்பிக்க ஆரம்பித்திருந்தாள்.தொழில் சாம்ராஜ்ய மன்னன் ..
வீட்டில் கண்ணியமுள்ள கணவனாக இருக்கவே விருப்பம். திருமணம் முடிந்து ஆறுமாதங்கள் ...

..மும்பை வந்து மூன்று மாதங்கள்...தான் மனைவிக்காக வெகுவாக வெளிநாட்டுப் பயணங்களை ரிஷி குறைத்துக்கொண்டிருந்தான்...அவளோ என்ன ..மாமனார் வீட்டு சொத்தோட நிறையத் தேறும்னு ,தொழில விட்டுட்டியா என கூரம்புகளை வீசினாள்.அவர்களைப்போல பத்து மடங்கான சொத்து அவனிடம் இருப்பது அவளுக்குத்தெரியும்...தன் தந்தையின் யோசனைகளை முறியடிக்க அவள் முன்கூட்டியே எய்த சொல்லம்பு. இனி,செல்வபதியின் தொழிலை ரிஷி ஏற்ப்பது சந்தேகமே.!!

ரிஷி வெளிநாடுகள் சென்றாலாவது தான் எண்ணப்படி வாழலாமென நினைதிருந்த நிலவிர்க்கு அவனது நடவெடிக்கைகள் எரிச்சலையே கொடுத்தது. சாதாரண பெண்ணை மணந்திருந்தால் இவன் காதலில் ...நிச்சயம் ..அவள் சிக்கி மூழ்கீருப்பாள்....நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே ரிஷி தனக்கானவளுக்காக ,மனத்தாலும் ,உடலாலும் நேர்மையை கடைபிடிக்கிறான். பெண்களுக்கு பொதுவாக எதிர்பார்க்கப்படும் தகுதி..ஒரு பணக்கார ஆணிடம்... நிச்சயம் அவன் வளர்ப்பு அவனை தவறு செய்ய விடாமல் ,நல்லபடியாகவே அமைந்துள்ளது .
வெறுப்பான எண்ணங்கள் நிலாவை அவனிடமிருந்து பிரித்து வைத்துள்ளது. . ஆனால் ,அவளது வெறுப்பு எதன் மீது...ரிஷி மீது மட்டும் என்று நம்ப முடியவில்லை..வேறேதும் காரணம் இருக்கிறதா என்பதற்க்கு காலம் மட்டுமே விடை கொடுக்க முடியும்.

நிலவின் வெறுப்பான நடவெடிக்கைகள் ரிஷிக்கு ஆச்சர்யத்துடன் கலந்த மன துக்கத்தையே பரிசளித்தது.. இந்த கல்யாணம் பிடிக்கலைன்னா முதலிலேயே அவள் ஏன் சொல்லவில்லை..தவறு எங்கே என புரியாமல் தவித்தான் அந்த காதலன்...அருமையான கணவன் கிடைத்தாலும் அகங்காரத்தில் ஆடும் பெண்களை என்ன செய்ய முடியும்? எவ்வளவு தூரம் அவனால் பொறுத்துப்போக முடியும்?

தொழில் உலகில் தன்னிகரில்லா அந்த சிங்கம் வீட்டில் மனைவியின் காதலை பெறமுடியாமல், அவளது வெறுப்பிலும்,புறக்கணிப்பிலும் உள்ளுக்குள் கடினமாகிக்கொண்டு வருகிறது...விளைவை அனுபவிப்பார் யார்?

தன் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ள அவனது சுயமரியாதை தடை விதித்துள்ளது...இப்பொழுதெல்லாம் ரிஷி அதிக நேரம் அலுவலக்திலேயே இருந்து விடுகிறான்..அவன் தொழில் பயணங்களும் அதிகரித்து விட்டது...நிலாவின் சந்தோஷமும்தான்..ஆனால் ,அவளது காதல்.....அவனை நோக்கி ..பூஜியம்தான்!!

ரிஷி ஆஸ்திரியா சென்றிருந்த நேரம், கருவுற்றிருப்பது தெரியாமல், கண்மூடித்தனமாக குடித்துவிட்டு,பபில் ஆடிக்களைத்து வீடு வந்த நிலாவிர்க்கு ,கரு கலைந்ததே அடுத்த நாள் மதியம் போதை தெளிந்த பின்னர்தான் வேலைக்காரி பார்த்து சொன்னதில் தெரிந்தது..முறைப்படி மருத்துவமனை சென்று வயிற்றை சுத்தப்படுத்ட்டிக்கொண்டவள் இதுபற்றி ரிஷியிடமோ, ஏன் பெற்றோரிடம் கூட சொல்லவில்லை... தொல்லை தானே விட்டது என்று அவள் இருந்துவிட, தன் மகவு கருவில் கருகியது தெரியாமல், ஏதோ பெரும் மன வேதனையில் உழன்று கொண்டிருந்தான் ரிஷி.. தாயகம் திரும்ப அவனது ஒவொரு அணுவும் துடித்தது...ஆனால் ,வேலை முடிய இன்னும் ஒருவாரம் இருக்கிறதே..


சோலைவனம் ...அழகிய சிற்றூர்....தன் வீட்டு வாசலில் பெரிய சிக்குகோலத்தை தேனுகா அனாயாசமாக தான் அக்காவுடன் சேர்ந்து வரைந்து கொண்டிருக்க... ஏடி, சுருக்கெழுத்து வகுப்பில இன்னிக்கி மாடல் டெஸ்ட் குடுக்குறாங்க,சீக்கிரம் கிளம்பணும்னு நேத்து சொல்லிட்டு இருந்தியே..கெளம்பு சீக்கிரம் என்று அவள் அப்பா வெற்றிவேல் குரல் கொடுத்தார் .,வெற்றிவேல் அரசுப்பணியில் இருக்கிறார்..இந்தா வந்தேம்ப்பா ...என்று அவசரமாக கோலத்தை முடித்துவிட்டு ,டவுனிர்க்கு கிளம்பினாள் தேனு..

தேனு பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு சுருக்கெழுத்து,மற்றும் கணினி வகுப்பிர்க்குச் செல்கிறாள்...கல்லூரியில் விண்ணப்பிதுள்ளாள். எப்படியாவது அரசுவேலையில் சேரவே அவள் இவ்வளவு பாடு படுகிறாள்..ஒருவேளை அவள் அப்பா அரசு வேலையில் இருந்து கொண்டு குடும்பத்தை அதிக நேரம் கவனிக்க முடிவதால் இருக்கலாம்.

.பொறுப்பு மிகுந்த பெண் ஆதலால்,பெற்றோருக்கு இவள் மீது பாசமும்அதிகமே...தேனுவிர்க்காக ,அவளும் அவள் பெற்றோரும் ஆயிரம் கனவுகள் வைத்துள்ளார்கள்..விதி அவளுக்கு எவற்றுடன் காத்திருக்கிறது?

தேனு... குழந்தை முகம் இன்னும் மாறவில்லை...மாநிறம். ஐந்தரை அடி உயரம்..படிப்பு மிக மிக பிடிக்கும்.. கல்லூரி படிப்பை முடித்து ,எப்படியாவது தமிழக அரசு வேலை பெற்று, திருமணம் செய்துக்கொண்டு, மற்ற பெண்களைப்போல வாழவே விருப்பமுள்ளவள். கணவன் குழந்தைகள் ..அவள் அக்கா போல ..அவள் அம்மா போல....வாழவே விருப்பம்...

அவளுக்கு சென்னை சென்று கல்வி கற்றால் தன்னம்பிக்கை மேம்படும் என தோழிகள் வட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட சென்னை கல்லூரிகளில் அதிகமாக விண்ணப்பித்திருந்தது அந்த தேன் சிட்டு. ஏனோ ..கிராமதிலிருக்கும் இளம் வயதினருக்கு சென்னை மீது ஈர்ப்பு அதிகம் உள்ளது...சென்னை வாசிகளுக்கோ...கேட்கவே வேண்டாம்.

அவள் எதிர்பார்த்தபடிக்கு சென்னை மாநகரில் புகழ்பெற்ற ஒரு மகளிர் கல்லூரியில் பி.காம் கிடைக்க அத்துணை மறுப்புக்களையும் முறியடித்து சென்னை ரயில் ஏறியவள் தன்னை காப்பாற்றிக்கொள்ள மிகுந்த போராட்டங்களை சந்தித்துத் தோற்றுபோகப்போவது பற்றி ..கனவுக்கூட கண்டிருக்கப்போவதில்லை.
...
இதோ விளையாட்டுப்போல தேனு சென்னை வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. மூன்றாம் ஆண்டு பயிலும் அவள் சுருக்கெழுத்து , கணினி பயிற்சிகளில் சில முடித்து வேலைக்குப்போக தன்னை தயார் செய்து கொள்கிறாள். அரசு வேலைக்கான பயிற்சி நிலையம் ஒன்றில் மாலை நேர வகுப்புகளுக்கு தனது விடுதியிலிருந்து பேருந்து ஏறி செல்லும் அனுபவம் அவளுக்கு ஆசையான ஒன்று. பேருந்து கடற்க்கரை சாலையில் செல்லும்பொழுது ரசிக்காத்தார் எவருண்டு ?


சோலைவனத்து சுந்தரி சென்னையில்..மன்னவனோ மும்பையில் ..விதி இருவரையும் இணைக்கும் சந்தர்ப்பம் ..கண்டிப்பாய் விதி இருக்கிறது என நான் நம்புகிறேன்..

மீண்டும்..அடுத்த பதிவுடன் விரைவில் இணைகிறேன்..
சுகீ.
 

Chitra Balaji

New member
Super Super Super pa... Semma semma episode... இந்த nila enna maariyaana pombaalai ச்சே avaloda சுகம் மட்டுமே முக்கியம் vazhrathu எல்லாம் ஒரு வாழ்க்கை ah... Avanodaya காதல் ah avana எவ்வளவு uthasinam panra... Athuyum அவங்க kuzhanthai கடவுளே avalam pombaalai ஜென்மம் laye seththi இல்ல... Thenu கிராமத்தில் பிறந்து valanthavala... Avaluku government job pooganum nu அசை... Chennai la. B. Com padikira la... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Subageetha

New member
Super Super Super pa... Semma semma episode... இந்த nila enna maariyaana pombaalai ச்சே avaloda சுகம் மட்டுமே முக்கியம் vazhrathu எல்லாம் ஒரு வாழ்க்கை ah... Avanodaya காதல் ah avana எவ்வளவு uthasinam panra... Athuyum அவங்க kuzhanthai கடவுளே avalam pombaalai ஜென்மம் laye seththi இல்ல... Thenu கிராமத்தில் பிறந்து valanthavala... Avaluku government job pooganum nu அசை... Chennai la. B. Com padikira la... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Nandri
 
Top