What's new

தா(தே)னாய் வந்த தேன்மொழியே! அத்தியாயம் 4

JLine

Moderator
Staff member
தேன்மொழி அத்தியாயம் 4
 

Author: JLine
Article Title: தா(தே)னாய் வந்த தேன்மொழியே! அத்தியாயம் 4
Source URL: JLine Tamil Novels & Stories-https://jlineartsandsilks.com/community
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Subageetha

New member
....அடுத்த அத்யாயத்துடன் வந்து விட்டேன்.....
பதிவு போடரத்துக்கு முன்னாடி சில விஷயங்கள பகிர்ந்துக்க விரும்புறேன்.. சமுகத்துல நிறைய பிரச்கனைகள் பெண்களை சுத்தி நிகழுது. யாராவது காது குடுத்து என்னோட கஷ்டத்த கேக்க மாட்டாங்களான்னு ஒருஒரு பெண்ணும் நிறைய சமயத்துல யோசிச்சிருப்போம். வேலைக்குப்போகும் பெண்களுக்கு இன்னும் அதிகமான அளவில் உடலாலும் மனத்தாலும் துன்பங்கள் நேருது ....வெளியில் சொல்ல இயலாத விஷயங்கள்?? இது ஒருபக்கம்.....சமீப காலங்களில் சில பெண்களும் ஆண்களுடைய உணர்வுகளில் விளையாட ஆரம்பிச்சிருக்காங்க..பெண்ணுரிமை விஷயங்கள் தவறா உபயோகப்படுது.... இந்த கதையில் ரெண்டு பக்கமும் நிகழும் பாதிப்புகளில் ஒரு சிறு பகுதியை ஸ்வாரஸ்யம் குறையாம பதிவிட முயற்சி செய்கிறேன்....உங்கள் கருத்துக்கள் +/- எதுவாக இருந்தாலும் தெரிய படுத்துங்க....என்னோட முதல் தொடர்...உங்கள் கருத்துக்கள் வாசகர்களின் எதிர்பார்ப்பை ி தெரிய செய்யும் கண்ணாடி தொடருக்குள் பயணம் செய்யலாம் வாங்க!

(தேன்)மொழி .4

கடற்கரை சாலையில் இறங்கி மைலாபூர் செல்லும் வழியில் இருக்கும் தனது மாலை நேர வகுப்புக்குள் நுழைந்தாள் தேனு ...அதே அடுக்கின் இன்னொரு பகுதியில் அமைந்திருக்கும் வெளிநாட்டு பிரயாணங்களுக்கு ஏற்பாடு செய்து தரும் நிறுவனமும் அமைந்திருந்தது. அதில் ஆண்களுடன் பெண்களும் வேலை செய்துக் கொண்டிருந்தனர். அந்த பெண்கள் பேசும் உயர்தர ஆங்கிலமும் அவர்களது ஆடை உடுக்கும் விதமும் கிராமத்து வாழ்க்கையில் வளர்ந்த தேனுவுக்குள் பெரும் ஆசார்யத்தை விதைத்தது... தானும் உயர்ரக ஆங்கிலத்தில் உரையாடவேணும் ..அதற்க்கு உண்டான பயிற்சி வகுப்புகளில் சேரவேணும் என மனதிர்க்குள் முணுமுணுத்தாள் தேனு. இவளது அதிக அலட்டல் இல்லா நடவடிக்கைகளுக்கு பயிற்சி வகுப்பிலும் ...அதனருகில் இருந்த அலுவலகத்திலும் ரசிகக் கூட்டம் உண்டு என்பதும் ...சிலரின் ரசிப்பு எல்லைகள் கடந்தது என்பதோ நிச்சயம் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.

ரசிகர்கள் பலவிதம் ...பெண்ணின் மனதைவிட ...அவளது மென்மை பாகங்களுக்கே மதிப்பு அதிகம். அந்த வகையில் தேனுவின் மதிப்பெண்கள் நூறு சதவிகிதமே.!! கூடப்பயிலும் ஆண்களுக்கு இவளது வனப்பு ஈர்ப்பு கொடுத்தாலும் தன்னுடன் பயில்பவள் என்ற ஒருவித பற்றுதலையும் ,,இவளை நல்லமுறையில் நடத்தவேணும் என்ற எண்ணமும் கொண்டிருந்தாலும் வெளி ஆண்களும் அப்படி இருக்கவியாலாதே !!

காமத்திர்க்கும் காதலுக்கும் இடையில் இருப்பது வெறும் சதை... மார்பை ரசித்தல் காமத்திர்க்கு வித்து... காமம் முடிந்தவுடன் கிளம்பிவிடும்...மார்பின் மறைப்பினுள்ளே நிஜமாய் மறைந்திருக்கும் மனதின் எல்லையில்லா அன்பை மட்டுமே ஆதாரமாய் கொண்டது காதல்....ஆதாரம் அகலாது.

தேனுவிர்க்கும் மார்க்கு போட்டாயிற்று.!!

வழமை போல் தன் வெளிநாட்டுப் பிரயாணம் முடிந்து வீட்டினுள் நுழைந்த ரிஷியை அவன் மனையாள் வெகு அன்புடன் வரவேற்றாள். காரணம் ஒன்றும் பெரிதல்ல...அவள் அப்பா இவளுக்கான மாத செலவு ரிஷிதான் செய்யவேண்டும் என்று தீர்மானித்துவிட்டார். இன்னுமொன்று ...உடன் உறங்கும் ஆண்கள் இருந்தபொழுதும் அவள் மனம் இன்று அந்த வலிய தேக்கு மர தேகத்தானை தேடியது ...அவனோடு கூடும் இன்பம்...நிச்சயம் வேறுதான் ...நற்குடி பிறப்பும் அற்புத வளர்ப்பும் கொண்ட ரிஷிக்கு நிச்சயம் இவளது மற்ற நடவடிக்கைகள் தெரிந்திருக்கவில்லை...அல்லது தெரியா வண்ணம் பார்த்துக்கொண்டாள் நிலா .

என்றுமில்லா நேசத்துடன் அணுகும் மனைவியை காதல் எனும் மாயக்கண்ணாடி வழியாய் கண்டவனுக்கு தன் வாழ்வு சிறக்குமென்ற நம்பிக்கை வெகுவாய் வந்துவிட்டிருந்தது. அவளுடன் தான் கற்பனையில் மட்டுமே வாழ்ந்திருந்த தருணங்களை நிஜமாக்கிட அவனது காதல் மனம் விழைந்தது.

நிலா...இன்னிக்கி நாம டின்னர் போகலாமா ? நாம வெளியில போயே ரொம்ப நாளாச்சே .? !!...

போகலாம் ரிஷி....ஏனோ அவனுடன் வெளியில் செல்வதை தவிர்க்கும் நிலா உடனே சம்மதம் சொன்னாள் . அவள் தன் நண்பர்களுடன் அடிக்கடி செல்லும் உணவு விடுதிகளை தவிர்ப்பதர்க்காக ...நாம லோங்க் ட்ரைவ் போகலாமா ரிஷி...புனே ருட்டுல போவோமா!?இதுவரைக்கும் போனதே இல்லயே ..தன் மனைவி இதையெல்லாம்கூட கேட்பாளா?

நிச்சயம் நிலா,,, நா தயாராகி வரேன்.. நீயும் ரெண்டு நாளைக்கான பொருட்க்களை எடுத்து வச்சுக்கோ. என்றுவிட்டு தன் அறைக்குள் பிரவேசித்தான். ஆம். அவனறை மட்டுமே..வெகு தூய்மையாக...

படுக்கை விரிப்புகள் முதல் திரைசீலை வரை வெகு நேர்த்தியாக..கண்டிப்பாய் ஒரு ஆணின் அறை எப்படி இருக்குமென நினைக்கிறோமோ அதற்க்கு,மாறாய்... நிலா கூடலின் தருணங்களில் மட்டுமே உள் நுழைவாள்..அவளறைக்குள் இவனுக்கு என்றுமே அனுமதி இல்லை...என்னோட ப்ரைவசி ரொம்ப முக்கியம் என்று முதல் நாளே கூறிவிட்டாள் .( ப்ரைவசி??)

இரண்டு நாட்களும் நிமிடங்களாய் கரைய ...தனது தேன்நிலவு ஆசைகளை திகட்ட திகட்ட தீர்த்துக்கொண்டான் ரிஷி...மனதிர்க்குள் ரசித்திருந்த தருணங்கள்.பொக்கிஷமான நிமிடங்கள்...

நிலா... ம்ம்ம்மம்ம்...

நாம குழந்தை பெத்துக்கலாமா ..நமக்கு கல்யாணம் முடிஞ்சு நாலு வருஷங்கள் ஆகிடுச்சு..எனக்கு உன்ன மாதிரி குழந்தை வேணும் நிலா.. மோகத்தின் உச்சியில் அவளும் மாற்றிபேச மனமில்லாமல் சரி என்றாள்..கணவன் தன்னை கொண்டாடும் கட்டில்லின்பம் அவளுக்குள் இருக்கும் உண்மை நிலவை சிறிது ஆழ்நிலை மயக்கத்தில் வைத்து இருந்தது போலும்.ஏற்கனவே அவனது ஆசை ..அவன் மனைவியின் அலட்சியத்தால் சிதைந்துவிட்டது தெரிந்தால்... தான் மனைவிக்கு தனது ஆண் நண்பர்கள் பழக்கத்தால் கருக்கலைப்பு சகஜமானது புரியும்பொழுது அவன் எப்படி உணர்வான்...நினைக்கும் பொழுதே நான் பதறுகிறேன்...அதற்க்குப்பிறகு அவனால் இதே ஆழ்ந்த அன்புடன் நிலாவிடம் கூடி களிக்க இயலுமா? நிச்சயம் அவன் தாம்பத்திய வாழ்வு தோல்வியை தழுவும்..எதற்க்கு அவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனை...

அவள் எதிர்பார்க்கும்சிற்றின்பம் அவள் கணவனிடமிருந்து நிச்சயம் கிடைக்கிறது .அவன் விரும்பும் பேரின்ப வாழ்க்கை இவளிடமிருந்து நிச்சயம்அவளுக்கு கிடைக்கப் போவதில்லை ..

தேனு ....நா உன்ன ரொம்ப விரும்புறேன்...உன்கிட்ட காதல் பிச்சை கேக்குறேன்...பிளீஸ் அக்சப்ட் மீ ... கையில் ஒற்றை ரோஜாவுடன் மண்டிபோட்டு காதல் பிச்சை கேட்க்கும் சினிமா பார்த்து பார்த்து கெட்டு போன இளைய சமுதாய பிரதிநிதி பிரபாகர். பிரயாண அலுவலகத்தில் வேலை பார்ப்பவன். பொதுவாகவே கீழ்க்கண்ணால் பார்க்கும் அவன் பெண்களின் நடுவே அவ்வளவாக நல்ல பெயர் இல்லை..அதைப் பற்றிய கவலையும் அவனுக்கு கிடையாது.. திறமைசாலி...அவனால் நிறுவனத்திற்க்கு இலாபம் அதிகம்..நிர்வாகம் அவனைக் கண்டுகொள்ளவில்லை.

ஸார் ...உங்கள எனக்கு ரொம்பத் தெரியாது.. அந்த நிறுவனதுக்கு போகுற வழியுல பாத்திருக்கேன்...எனக்கு என்னோட அப்பா நல்ல வாழ்க்கைய அமைச்சுத்தருவாரு,காதலிச்சு கல்யாணம் பண்ணுறதுல எனக்கே நம்பிக்கை இல்ல..விட்டுருங்க ..என்று தன் பிடித்தமின்மையை நயமாகவே கூறி சென்றாள் தேனு.. பயிற்சி முடியும் நிலையில் இருந்ததால் பிரபாகரை கண்டுகொள்ளவில்லை.

சிறிது பொறுத்து பார்த்து ...திரும்பவும் காதல் பிச்சை கேட்க எப்படி கையாள்வது எனத் தெரியாமல் தன் அப்பாவிடம் போனில் சொல்லி ..வாறீங்களாப்பா....ரொம்ப பயமாவும் குழப்பமாவும் இருக்கு ..என முறையிட...இதுக்குத்தான்மா ..சென்னை வேணாம்னு சொன்னேன்..என அங்கலாய்த்தவாறே..சரி.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன்...அதுவரைக்கும் சமாளி....முடிஞ்சவரைக்கும் அவன் கண்ணுல படாதே..என அறிவுரையுடன் முடித்துக்கொண்ட வெற்றி வேலிர்க்கு தெரியவில்லை..அவர் கையாள கிளம்புவது கருநாகமென்று....காலை சுற்றிய நாகம் கடிக்காமல் விடுமா.....?

வாரம் ஒருமுறையாவது அழைத்து பேசும் ரிஷி தன் மனம் நிலவிடம் அடிவாங்குவதை இன்றுவரை தன் பெற்றோரிடம் சொல்லவில்லை...தனிப்பட்ட வாழ்க்கையை அணுகும் முறையும் தெரியவில்லை....ஒருவேளை தன் பிரச்சனைகளை பெற்றோரிடம் சொல்லி தீர்வு கண்டிருக்கலாமோ ...அவர்களுக்கு குற்ற உணர்வு ஏற்படக்கூடாது என்று நினைக்கும் அவனுக்கு தெரியுமா...வரும்காலம் அவனுக்கு கொடுக்கப்போகும் பரிசு....

பார்ப்போம்....

தோழமைகளே!,,,கதையின் நடை எவ்வாறுள்ளது என்பது படிக்கும் நீங்கள் கூறினால் மட்டுமே எனக்குத்தெரியும்...குறை இருப்பின் கூறினீர்கள் என்றால் திருத்திக்கொள்ள இயலும்...உங்கள் கருதுக்களுக்காக காத்திருக்கும் தோழி..

சுகீ ..
 
ரிஷி ku கல்யாணம் ஆகி four years aaidicha... Ithu varaikum ah avaloda thappu avanuku theriyala... அவன் avala காதல் கண் கொண்டு paakarathu naala avanuku theriyalayo....ava எங்க avanuku kuzhanthai தர போற.... Avalodaya அப்பா செலவுக்கு காசு இனிமேல் rishi kita vaangikanumnu sollita thunaala இந்த போய் அன்பா அவன் mela... அவன் parents kita ethuyum solrathu illa... இந்த thenu ah ஒருத்தன் love 😍 panranu torture பண்றான் ah... Super Super pa... Waiting for next episode
 

Subageetha

New member
சித்ரா.
வருஷ கணக்குல வீட்டுல நடக்குற விஷயங்கள், தெரியாத ஆண்கள் இருக்காங்க.. பிள்ளைகள் தவறு செய்யும் பொழுது காட்டிக்கொடுக்காம, வருஷக்கணக்கில் முற்றிப்போன விஷயங்கள் நிறைய இருக்கு... இந்த போக்குத்தான் பெரும்பான்மை தவறுகள் நடக்க காரணம் ஆகுது
நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
 
Top