What's new

தா(தே)னாய் வந்த தேன்மொழியே! அத்யாயம் 7

Subageetha

Member
அவள் சென்னை புறப்படும் நாளும் வந்தது. வருடக்கணக்கில் மகளை பிரிந்திருந்த வேலுத்தம்பதிக்கு இருநாட்க்களுக்கான அவளது பயணம் கண்ணீரை வரவழைத்தது....தன் அம்மாவின் முகத்தையே பார்த்துப்பேசிக்கொண்டு வந்த தேனுவிர்க்கு கால் தடுக்கி விழப்போக, நீ சென்னை போக வேணாம் புள்ள..அடுத்தவாரம் அப்பாவையோ,மாமாவையோ கூட கூட்டிக்கிட்டு போகலாம்,இப்போ வீடு போகலாம் வா..என்று அழைக்கும் தாயிடம் ..

சிறு குழந்தையின் தவிப்பைக்கண்ட தேனுவிர்க்கு சிரிப்பாய் இருந்தது..இல்லம்மா ..இங்கன பிள்ளையார் கோவில் போயிட்டு,தண்ணி குடிசிச்சிட்டு,சித்த ஓக்காந்துட்டு கெளம்பறேன் ,,ஒகேயா...என்று செல்லம் கொஞ்சியவாறே கோவிலுக்கு சென்றாள்..போகாதே என வாயி திறந்து சொல்ல இயலாமல்..பிள்ளையாரும் சோகத்தில்.... அவரும்தான் என்ன செய்வார்...தேனுவின் அம்மா வாயிலிருந்து போகவேண்டாம் என சொல்லி ஆயிற்று... காலை தடுக்கிவிட்டு ,தடுத்தாயிற்று...இனி செய்வதற்க்கு ஒன்றுமில்லை என தோன்றியவர்ராய்..சென்று வா மகளே..விதி உன்னை வைத்து விளையாடும் விளையாட்டில் வெற்றி பெறு என மௌனம் சாதித்தார்.

நடப்பதை பார்த்து விதியும் தேனுவைப்போலவே சிரித்துக்கொண்டுத்தான் இருக்கிறது.

மகாகாளியின் முழு அருள் பெற்ற ,சாகுந்த்தலம் இயற்றிய,மகா கவி காளிதாசர்...அவர் வாழ்வு முடியும் தருவாயில்,காளி தேவி மானுட உருவில் தோன்றி தெற்க்குப்பக்கமாய் போக வேண்டாமென தடுத்தாளாம்...ஆனால்,அதைப் பொருட் படுத்தாமல் காளிதாசர் சென்று ,கொல்லப்பட்டாராம்..படித்த ஞாபகம்..இப்பொழுது ,தேனுவைப் பார்க்கும்பொழுது எனக்கு அந்தக்கதை தோன்றுகிறது..லோக மாதா சொல்லியே எடுபடாத ஒருவிஷயம்...தேனுவின் தாய் சொல்லியா எடுபடும்...போ...கா...தே.......! விதி நிச்சயம் கொடிய..வலிய..கரங்கள் கொண்டதுதான்...நம்புகிறேன்!

தேனு ரயிலில் ஏறினாள்....வண்டி நகரும்பொழுது அவளையும் அறியாமல் கண்கள் தாமாக தன் வேலையை செய்தது.கிளம்பியது தவறோ என ஒரு மயக்கம். இரு நாட்கள் தானே..என ,மனதின் ஆறுதல் மொழி..உள்ளுணர்வு வெகு தாமதமாய் வேலை செய்ய ஆரம்பித்தது...

பிரபாகர் எனும் இரண்டுகால் ஜந்து அதே பெட்டியில் தன் நண்பர்களுடன் இவளுக்காக அமர்ந்திருப்பது தெரிந்திருந்தால்?நிச்சயம் ஒழுங்காய் செல்ல வேண்டிய வாழ்க்கைப்பாதை மாறி இருக்காது. விழுப்புரம் வரை ஒன்றும் பிரச்சனைகள் இல்லை... விழுப்புரத்தில் தேனுவின் தண்ணீர் போட்டில் நீர் தீர்ந்து விட்டது... விழுப்புரம் ஜங்க்ஷனில் பிரபாகரனின் லீலையில்,மயக்க மருந்து கலந்த தண்ணீரை,விற்பனையாளன் உருவில் வந்த அவனது நண்பனிடம் தேனு வாங்கிவிட்டாள்...செங்கல்பட்டில்...தேனு பிரபாகர் கும்பலால் அவர்களுடன் இறக்கி அழைத்துசெல்லப்பட்டாள்...

ஒரு பெண்ணைக் கடத்துவது ..இவ்வளவு எளிதாகிப்போனது... மாலை ஏழு மணிக்குமேல் ஆனதால்.யாரும் அதிகம் கண்டுகொள்ளவில்லை...பெட்டியில் அமர்ந்திருந்த ரயில்வே போலீசின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு வயதுப் பெண்ணை கடத்துவதென்றால் ..அவர்களது திறமை.....அருவருப்பை ஏற்படுத்துகிறது.

நாளை ரிஷி சென்னை வருகிறான்....அவன் மனம் முழுதும் நிலா...எங்கே தவறு ...ஆடை..அணிகலன்கள்...நிறம்....உணவு வகை அனைத்துமே வெகுப் பொருத்தம்தான்..மறுப்பதர்க்கில்லை...அத்தை மகள் ..மாமன் மகன் எனும்பொழுது விருப்பங்கள் ஒன்றாய் இருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை..ஆனால்..இங்கு அடிப்படை கொள்கைகளே வேறுபட்டிருக்கிறது. நீ பெரிய தவறு செய்துவிட்டாய் என நிலாவை குற்றம் சாடுகிறது ரிஷியின் மனம்...நான் செய்தது தவறே இல்லை..வயிருக்கு உணவு என்பது போல் உடலுக்கான தேவை..இதில் தவறென்ன என்றது நிலாவின் மனம்.....அத்துடன் அவளுக்கு கருப்பு..வெள்ளை நிறம்.. இன்னும் எத்துணையோ ..காரணங்கள் சப்பைக்கட்டு கட்டினாலும்...திருமண பந்தத்தில் அவளுக்கு உடன்பாடு இல்லை என்பது நிதர்சனம்.....

வெளிநாட்டில் இருக்கும் அனைத்து சிறுவயதினரும் இவளைப்போல் சிந்திப்பது இல்லை.....ஏன் நாம் இந்தியாவிலும் இப்பொழுது நிலாவைபோல் யோசிக்கும் இளைய சமுதாயம் பெருகிவருகிறது...கட்டுப்பாடுகள் பிடிக்காத மனோ நிலை காரணமாக இருக்கலாம்....இல்லை..பொறுப்புகள் சுமக்க பயமாய் இருக்கலாம்...எதுவாயினும்..கலாசாரம் என்பதும் நல்லொழுக்கம் என்பதும் வேறல்ல..என்பதை நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும்...நல்லொழுக்கம் மட்டுமே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.

திருமண பந்தம் இளமைக்கால உணர்வு வடிகால் மட்டுமல்ல..முதிய வயதின் ஊன்று கோல் என நிலா போன்ற கொள்கை (பிடிப்பு ?)உள்ளவர்களுக்கு புரிவதில்லை.நம்மால் புரிய வைக்கவும் இயலாது. ரிஷி போன்ற உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதனுக்கு நிலாவின் போக்கு நிச்சயம் தவறானதே ...மனைவியைத்தவிர வேறொரு மங்கையை காணாத அவனுக்கு இவ்வுலகம் சாமியார் என பட்டப் பெயர் வைக்கப்போவது உறுதி.....

சென்னையில் அவன் பெற்றோருக்கு எவ்வாறு சொல்லி..எப்படி புரிய வைப்பது? இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்கவே ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் நிலாவிர்க்கு அவசரமாக இந்தியாவில் திருமணம் செய்துக்கொடுத்தனர் ..ஆனால்..வேத நாயகம் குடும்பத்தினருக்கு இதுவரை நிலாவின் போக்கு தெரியாது..புதியதாய் வந்திருக்கும் பூகம்பத்தை ரிஷி ஜீரணம் செய்ய இயலாமல் தவிக்கிறான்..என்னவானாலும்..திருமண பந்தத்தை உடைக்க இரு பக்க பெற்றோரும் உடன்பட போவதில்லை..அப்படியானால்..இவ்வளவுக்குப் பிறகும் நிலாவோடுதான் ரிஷி வாழ வேண்டுமா? அவனது நல்ல செயல்காளாலும்,காதலினாலும்..ஏன்...கூடலினாலும்கூட ..சரி செய்ய இயலாத இந்த சீரழிவை பொறுத்துக்கொள்ளவேண்டுமா? இங்கே ,அவனது ஆண்மை அடிவாங்கியுள்ளது..யாருக்காவது புரியுமா...

.பலவாறு தன்னிலை மறந்து யோசித்துக்கொண்டிருந்தான் ரிஷி..பொழுது விடிந்தால் சென்னை கிளம்பவேண்டும்..ஆனால்...அவன் வாழ்வில் இனி பொழுது புலருமா..?

விதியை வெல்ல எவராலும் இயலாது.. தான் பெற்றோர் சொல்லப்போகும் பதில் தெரிந்திருந்தும் அவர்களிடம் நடந்தவைகளை கூற ரிஷி விழைந்தான்....வீட்டின் பெரியவர்களுடன் பெண்ணை பெற்றவர்களும் இருந்தனர், தன் மகள் வாழ்வைப்பற்றி யோசித்த செல்வம் தம்பதியினர் மருமகனை நினைக்கவில்லை.. ரிஷியும் அவர்களை உறவு சொல்லி அழைப்பதை கவனமாகவே தவிர்த்தான்... ரிஷி சொன்னவைகளை வேதநாயகம் தம்பதியினரால் நிச்சயம் ஜீரணம் செய்ய இயலவில்லை....நிலா குடிப்பதுடன் அந்நிய ஆண்களின் பழக்கம் கொண்டிருக்கிறாள் என்பது பெரியவர்கள் நால்வருக்குமே அதிர்ச்சியாய் இருந்தது...

வேத நாயகம்தான் முதலில் வெளிவந்தார்.பாரு ரிஷி..நீ சொல்றதை நம்பவே முடியல...ஆனா கல்யாண பந்தத்தை அவ்வளவு சீக்கிரம் முறிக்க முடியாது.. உன் மனைவியா இல்ல...உன்னோட அத்தப்போண்ணா நீலாவ நினைச்சு வாழப்பாரு. முடிஞ்ச வரைக்கும் கல்யாணத்தை தக்கவக்குறது எல்லாருக்கும் நல்லது. நாங்க பத்து நாள் அங்க வந்து இருக்கோம்...பார்ப்போம் என தீர்வு சொன்னார்...பெரியவர் எத்துணை சொன்னாலும் ரிஷியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. இவ்வளவு ஒழுக்கமா இருக்குற எனக்கு எதுக்கு எவ்வளவு பெரிய தண்டனை...காலத்திர்க்கு ஏற்றவாறு வாழாமல் தவறுகளில் இருந்து ஒதுங்கியது தவறா என அவன் மனம் அழுதது..

ரிஷியால் நிலாவை மன்னிக்க முடியவில்லை.உடம்பால் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தால் அவளுக்கு மனதின் மருந்தாய் இருந்திருப்பேன்...ஆனால் மனதால் தூய்மை அற்றவளை எவ்வாறு மன்னிப்பேன்...அப்பா..அம்மா...எல்லோருமே மூன்றாம் நபராய் சொல்கிறார்கள்...என்னுடைய மனம்.!

..ஆறுதல் தேறுதலுக்கு வழியின்றி ..அடுத்தநாளே மும்பை கிளம்பிவிட்டான்...இனி தேவைக்குமேல் பெற்றோரிடம் வரமாட்டேன்...என முடிவெடுத்தான்.

விடை காண முடியா பல கேள்விகளுக்கு விடை தேடி ,ரிஷி..தேனு... புலரும் சூரியன்...சூழ்ந்திருக்கும் கவலை மேகங்கள்...நீங்கள்...உங்களுடன்...நான்..

உங்கள்
தோழி சுகி.
 

Author: Subageetha
Article Title: தா(தே)னாய் வந்த தேன்மொழியே! அத்யாயம் 7
Source URL: JLine Tamil Novels & Stories-https://jlineartsandsilks.com/community
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Chitra Balaji

Active member
Thenu va kadathitaangala கடவுளே athuyum avan friends oda enna panna poraangalo avala... Ava அம்மா vendaam nu sonnaga appove வராமல் இருந்து இருக்கலாம்... இங்க rishi வீடு la ஏன் அந்த maari sonnaga avanodaya parents... Appo ava எப்படி vennumnaalum nadanthu kalaam ah.... Iva avaluku avvallavu உண்மை ah iruthaan... இப்போ ஒருத்தி oda eppadi ஒண்ணா இருக்க சொல்றாங்க... அவன் manasu யாரும் paakalaya... Very emotional episode... Eagerly waiting for next episode
 

Subageetha

Member
எதுக்கு sad ரியாக்ஷன் சித்ரா..
கவலை படாதீங்க... நிச்சயம் ஒரு நாள் கஷ்டப்படறவங்க சந்தோசமா இருப்பாங்க
 
Top