What's new

தா(தே)னாய் வந்த தேன் மொழியே 29

Subageetha

Active member
அத்யாயம் 29:

ஒருவாரமும் சுருங்கி ஒரே நாள் ஆகியது. தேனு ரிஷியின் கட்டளைப்படி (காதல் வார்த்தைகள் கட்டளைகள் ஆவது நிச்சயம் ஒப்புக்கொள்ள முடியாதுதான்) தனது உடமைகளை எடுத்து வைத்துக்கொண்டாள்.எல்லாமே அவன் வாங்கியதுதான்!

உடைகளை வாங்கிக் கொடுத்தவன் உயிரை உருவிக்கொண்டான்.

தன் உயிர் என்று நினைத்த,தன்னை அனைத்து உறங்கிய காதலனின் கைகள் இன்று ,தாமாகவே உருவி தன்னை காதல் வலையிலிருந்து மீட்டெடுக்க முயற்சிக்கிறது....அவனது முயற்சி அவளை முர்சிக்க வைக்கிறது. எந்த உறவிலும் பதின்ம வயதுகளில் சிக்காத இருவருமே...பலவித துன்பங்களுக்கு பிறகு ,காதல் வலையில் சிக்கி தவிப்பது விந்தையோ? ஆனாலும்,இருவரும் பிரிவு எனும் விடையை தேர்ந்தெடுத்து விட்டனர்.

அவள் வாழ்வு நல்லவிதமாய் அமைய அவளை பிரியும் காதலன்....அவன் நிலை தன்னால் தாழ கூடாது என்று அவன் செய்த முடிவில் துணை நிற்கும் பெண்....மேட் வித் ஈச் அதர்....வேறென்ன சொல்ல? ஆனால் பிரிவு அவர்களை மீட்டெடுக்காது...ஆட்டிபடைக்கும் என்பதை உணரத்தவறியது யாரின் பிழை?

மறுநாள் அவளை தானே ,மேட்டுப்பாளயம் அழைத்து செல்ல முடிவெடுத்தவன்,பின்னர்,ஒரு கடிதம் கொடுத்து சாகரியிடம் கொடுக்க சொல்லி தேனுவை அனுப்பி வைத்தான்.

அவனால்,அவளை அங்கு விட்டு வரமுடியும் என்று தோன்றவில்லை...இந்த பிரிவு அவனால் முடியாத ஒன்று, இதை நன்கு உணர்ந்தவள் ,அவனிடம் நாளைக்கு எர்லி மோர்னிங் ஃப்ளைட்...ஸோ....இப்பவே சொல்லிக்கிறேன்..என்றுவிட்டு அந்த வீட்டின் சாவியை அவனிடம் முதல்நாள் இரவே கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள். காலை நீ எனக்காக வரவேண்டாம் என்ற மறைமுக வேண்டுதல்..அவளது வேண்டுதல் அவனை அசைத்து பார்த்தது! நீண்ட ஆழ்ந்த மூச்சுக்கள் அவனை சமன் செய்ய போதுமானதாக இல்லையே!

இரவு முழுதும் தேனு தன் அறையில்...நீங்க மட்டும் போதுமுன்னு சொல்றேனே..பின்ன எதுக்கு என்னய அனுப்பறீங்க.அவள் மனம் ஊமையாய் அவனிடம் சண்டை போட்டாது....நிஜத்தில் சண்டை போதும் உணர்வு உண்டு..உரிமை இல்லயே ..இருந்தால் இந்த பிரிவு ஏன் வருகிறது?

இரவு முழுதும் தூங்காமல்,விடிகாலையில் அவன் கண்ணயரும் சமயம்...அவனது காதல் அவனை பிரிய தயாரானது....

காலை..தேனுவை தேடியவன் கண்கள் வெறுமையை உணர்ந்தது..சமயலறையில் விளக்கு எரியவில்லை. இல்லை...மீண்டும் அந்த வீட்டின் .பூஜை அறை பழையபடி கவனிப்பாரற்று ...ஆனாலும், கடைசியாக,அவனுக்காக காபி டிகாஷன் தயாரித்து வைத்துவிட்டு சென்றிருந்தாள் தேனு...அவனுக்கு, வாய் சிரிக்க,கண்கள்,கதறியது.....என்னை விட்டு போயே விட்டாள்...நான் உறங்கியவேளையில்.....

உன்னுடனே இருக்கிறேன் என்றவளை நாந்தானே அனுப்பினேன்? எல்லாம் விஞ்சியபின் ஏக்கம் மட்டும் இருந்து என்ன செய்ய?

ஃப்ளைட் ஏறிய தேனுவிர்க்கு.....தான் இனி அவனை பார்க்க போவதில்லை என்னும் எண்ணம்...இப்பொழுதே ,இப்படியே குதித்து விடலாமா என்னும் அளவிர்க்கு துக்கத்தை பரிசளித்திருந்தது...ஆனால், அடிப்படையில் பொக்கிஷமான ஒன்று ,அதை இழந்த சமயம் போகாத உயிர்.... இப்பொழுது சென்றுவிடுமா என்று தன் நிலையை எண்ணி சுய பரிதாபத்தில் விம்மினாள் பேதை..

தான் அவனுக்கு என்றுமே மனைவியாக முடியாது என்ற உண்மை புரிந்தவளாக ,முகம் கசங்கி அமர்ந்திருந்தவளை ,எனி ப்ராப்ளம் என்று விசாரிக்க ஆரம்பித்தனர் அங்கிருந்த பணியாளர்கள்....

இந்த மௌன நாடகத்தை இன்னொரு ஜோடி கண்களும் பரிதாபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது......வேறு யாருமல்ல..நிலாதான்..அவள் மும்பையிலிருந்து ஊட்டி செல்கிறாள்..வேலையை முன்னிட்டு....அதற்கு முன்னர் தேனுவை நல்லபடியாக சாகரியிடம் கூட்டிசெல்ல நிலாவின் உதவியை நாடியிருந்தான் ரிஷி...அவளை தனியாக அனுப்ப அவனுக்கு உடன்பாடில்லை....வெகு சில நாட்களுக்கு முன்னர்தான்,தேனுவை ரிஷி பிரிவதேன் என்று அவனை உலுக்கினாள் நிலா..அவளுக்கு ரிஷி மீண்டும் துன்பம் கொள்ள வேணுமா என்ற எண்ணம்...தேனுவின் நிலையை வெகுவாக விளக்கிய ரிஷியின் முடிவை நிலாவால் ஏற்க முடியவில்லை! அதே சமயம் தான் இவ்விஷயத்தில் உபதேசம் செய்ய முடியாது என புரிந்தவளாக நகர்ந்து சென்றாள்.

இதைவிட மோசமாக நடந்திருக்கும் தனக்கு பெயர் என்ன என்று அவள் மனம் அவளை கேள்விகள் கேட்டது....பணம் ,பாதுகாப்பு,நற்குடி பிறப்பு , நல்வாழ்வு இவற்றுக்கெல்லாம் அர்த்தங்கள் புரிந்தது.....

முதல் முறையாய்,தேனுவின் கண்ணீரில் ரிஷி மீதான காதலை கண்டவளுக்கு ,காதல் என்றால் என்ன என்பதும் மெள்ள மெள்ள புரிந்தது..இந்த பொல்லாத காதல் தன் வாழ்வில் ஏன் வரவில்லை என்று தவித்தது நிலவு.! நிலவின் வாழ்வில் வசந்தம் வீசுமா?

சாகரியிடம் ,தேனுவை பற்றிய உண்மைகளை முழுதுமாக சொல்லி,அடைக்கலமாக அவளை காக்கும்படி கேட்டிருந்தான் ரிஷி..சாகரி-மகேஷ்வரனுக்கும் புரிந்தது...எப்படியும் ரிஷியால் விரும்பபடுகிறவள் என்பது தேனுவை பற்றிய அபிப்ராயம் அவர்களுக்கு ஏற்பட போதுமானதாக இருந்தது..

வாழ்வில் ஏதோ ஓரிடத்தில் சறுக்கினால்,வாழ்நாள் முழுதும் அதன் வலி,வடுவை சுமக்கவேண்டுமா? இந்த கேள்வி என்னுள்ளே அழுத்தமாக உள்ளது....ரிஷி அவளை அனுப்பியிருக்க வேண்டாம்! பிடிவாதக்காரன்....பொய்யான சமூக அந்தஸ்த்து என்னும் போர்வையில்,தனது சந்தோஷத்தை,வாழ்வின் அர்த்தத்தை ,அனுப்பி வைத்துவிட்டான்.

கோவை விமான நிலயத்திலிருந்து மேட்டுப்பாளயம் செல்வதாக ஏற்பாடு...தேனு நிலா இருவரும் விமான நிலயத்திலிருந்து வெளிவர, மகேஸ்வரன் அனுப்பிய காரில் மௌன பயணம் நீண்டது....

நிலாவிர்க்கு தேனுவை பார்க்கவே பாவமாக இருந்தது....பேரிழப்பின் சாயல் அவள் முகத்தில்...கண்ணீரின் உப்புக்கரை காய்ந்திருக்க..சுய எண்ணமின்றி, ரிஷியை பற்றிய எண்ணங்களுடன் இரு பெண்களும் ...மேட்டுப்பாளயத்தை அடைய,சாகரி தேனுவை பற்றிய விவரங்களை துருவாமல் ,மேற்கொண்ட விஷயங்களை கவனிக்கலானாள். ரெண்டு நாள் இங்க ரெஸ்ட் எடுங்க ரெண்டு பேரும் ..பிறகு மேலே ,வேலையை தொடங்கலாம் என்று சொல்லிய சாகரியின் குரலில் நிச்சயம் பேதமில்லை...சாகரியின் பாசமான தம்பியின் முன்னாள் மனைவி ஒருத்தி...இந்நாள் காதலி ஒருத்தி....தன்னறைக்குள் வந்த சாகரிக்கு ஆயாசமாக இருந்தது....இவர்களில் வாழ்வு ஏன் இவ்வளவு குழப்பங்களுடன் எழுதப் பட்டுள்ளது என்று நொந்துகொண்டாள்.

தேனுவின் அறைக்குள், நுழைந்த ரிஷிக்கு,உணர்வுகள் பொங்க ,அவளது கப்போர்டை திறக்க,அவன் பொங்கலுக்கு வாங்கி கொடுத்த புடவையும்,தங்க செயினும் அவனை பார்த்து ஏளனமாய் சிரித்தது. இவை எனக்கொரு பொருட்டென்று நினைத்தாயோ என கேலிபேசியது தேனுவின் நினைவு.

“காதல் என்னும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும்...

காதல் தேன் என்னை குடித்தால் என்னதான் நடக்கும்?”

எங்கிருந்தோ காற்றில் பாடல் ஒலிக்க , விடை தெரியாமல் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்துவிட்டான்....நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்...எப்படி மீள முடியும்..அந்த மதுவுக்கு என் மனதை கொடுத்துவிட்டேனே?! அவன் முகத்தில் கசந்த முறுவல்...

இன்று அலுவலகம் செல்ல முடியாது என்று புரிந்தவனாக ,தனது அறைக்குள்ளேயே அடைந்துகொண்டான்...இந்நேரம் அவள் சாகரி அக்காவிடம் சென்றிருப்பாள்...என்று நினைத்தவனாக சாகரிக்கு அழைக்க,ஏற்கனவே,நொந்து வந்தவள் பொங்கிவிட்டாள்... உன்னோட முன்னாள் மனைவி,இந்நாள் காதலி ரெண்டு பேரும் செஃபா வந்தாச்சு...அவள் குரல் குத்தல் பேச்சை தத்தெடுத்திருந்தது! ரிஷியால்,மேற்கொண்டு பேச முடியவில்லை...தேனு ...அவள் எப்படி இருக்கிறாள்? என்னை யோசிக்கிறாளா...கேட்க நினைத்தாலும் வாய் வரவில்லை. வேண்டாம் என வேறு ஏற்பாடு செய்துவிட்டு இப்படி மருகுவத்தில் என்ன பயன்? ஒருவேளை,அவளும் என்னைபோலவே தவிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேனோ? அப்படியென்றால்....தலைவலி பிளக்க,காபிக்காக மனம் தேனுவை தேடியது....அவள் நிச்சயம் வரப்போவதில்லை,

இரண்டு நாட்கள் நான்காக நீள, நிலா –தேனுவிர்க்குள் நட்பு பூத்திருந்தது...இருவரும் செல்லபோகும் பயணம் வேறு...இவள் ஊட்டி சென்று , திங்களன்று வேளையில் சேர வேண்டும்.தேனு திங்களன்று கோவையில் ரிபோர்ட் செய்ய வேண்டும். ரஞ்சித் நிலாவை எதிர்பார்த்திருந்தான். வெள்ளியன்று அவளை அழைத்து செல்ல வருவதாக ரஞ்சித் சொல்லியிருந்ததால் நிலா அவனுக்காக காத்திருந்தாள் ..தேனு தனியாகவே சென்றாக வேண்டும். ரிஷியோ,ஒரு மாத பயணமாக ஜெர்மனி சென்று விட்டான்...அவள் நினைவுகளிலிருந்து மீள வேண்டும் என எண்ணம்...அவனுக்கு தெரியுமா....இது மீட்சியற்ற ஒருவழி பாதையென்று?

நிலாவை அழைக்க வந்த ரஞ்சித் முகத்தில் தேனுவை கண்டதில் ஒரு ஸ்வாரஸ்யம்..... ஜீப்பில் ஏறிய ரஞ்சித் கையில் மிதக்கும் கனவா நீ..கை கால் முளைத்த காற்றா நீ என விசிலடித்தவாறே ஸ்டார்ட் செய்ய,அவன் கைகளில் ஜீப் பறந்தது நிலாவுடன்...ஊட்டியை நோக்கி...கோவை செல்ல பேருந்தில் தேனு....

பார்ப்போம்...

மீண்டும் சந்திப்போம்.


உங்கள் சுகி.
 

Author: Subageetha
Article Title: தா(தே)னாய் வந்த தேன் மொழியே 29
Source URL: JLine Tamil Novels & Stories-https://jlineartsandsilks.com/community
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top