Ongoing Novels

உதயேந்திர வர்மன்.. அத்தியாயம் 7

உதயேந்திர வர்மன் அத்தியாயம் 7 செவ்வண்ண மலையடிவாரம்.. கீழ்திசையில் தோன்றும் கதிரவனானது மலையின் உச்சிமேட்டில் ஜொலித்துக் கொண்டிருந்த மதிய வேளையில், தனது வெண்ணிற புரவியின் மீது அமர்ந்திருந்த உதயேந்திரன் அதனை வட்டங்களாகவும், சர்ப்பம் போன்று வளைந்து நெளிந்தும் செலுத்திக் கொண்டிருக்க, அவனுக்கருகே தனது செம்மண் நிறத்துப் புரவியில் அமர்ந்திருந்த சந்திர நந்தனோ நடப்பது எதையுமே அறியாதது போல் ஆழ்ந்த சிந்தனைகளுடன் மௌனமே மொழியாகத் தனது புரவியைச் செலுத்திக் கொண்டிருந்தான். பசுமை மாறா செவ்வண்ண மலையை மூழ்கடித்திருப்பது போன்று ஊசி இலைகளைக் கொண்ட சவுக்கு மரங்களும், அதற்குக் கீழ் அடுக்கடுக்காகப் பரந்து விரிந்திருக்கும் பச்சைப் படுகைப் போல் செழித்து விளைந்திருக்கும் புற்களும், மரஞ்செடிகளின் சிறுசெறிவினால் ஆங்காங்கு உருவாகியிருந்த குத்துச்செடிகளும் செவ்வண்ண மலையையே விசிறிச் செல்லும் காற்றில் மென்மையாய் அசைந்து [...]

Read more...

உதயேந்திர வர்மன்.. அத்தியாயம் 1

ஃப்ரெண்ட்ஸ்,   இனி பின்வரும் தளத்தில் தான் எனது கதைகளை பதிவிடுவேன்..  ஏதாவது பரிந்துரைகளோ அல்லது குறைகளோ தெரிவிக்க வேண்டுமெனில் அவற்றையும் அங்கேயே பதிவிடலாம். 🙂 https://jlineartsandsilks.com/community/index.php?forums/jb-novels-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF.8/   உங்கள் ஜேபி

Read more...

உதயேந்திர வர்மன்.. முன்னுரை!

உதயேந்திர வர்மன்.. இவன் சரித்திரத்தில் இல்லாதிருக்கக் கூடும், அல்லது காலத்தால் மறக்கடிக்கப்படக் கூடும், ஆயினும் இவனது நீண்ட கூரிய வாள் தீமையை வெட்டி வீழ்த்தும்! He may not be in the History, or may be forgotten by time, yet his long sword will triumph over evil!   முன்னுரை…   வழக்கமாகச் சரித்திர நாவல்களை எழுதும் ஆசிரியர்கள், சரித்திரத்தில் இருந்து ஒரு பகுதியையோ அல்லது பல பகுதிகளையோ ஒன்று சேர்த்து, அதனூடே சில கற்பனை கதாப்பாத்திரங்களைப் புகுத்தி நாவல்களைப் படைப்பார்கள்.. ஆனால் நான் புனைந்திருக்கும் இந்த ‘உதயேந்திர வர்மன்’ என்ற நாவல் முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனையே.. இதில் வரும் கதாப்பாத்திரங்கள் மட்டும் அல்ல, இடங்கள் நிகழ்வுகள் போர்கள் அனைத்துமே [...]

Read more...

Announcement

ஃப்ரெண்ட்ஸ், இப்போ தான் நான் முக நூல் பக்கமே வர முடிந்தது. நான் இந்தியாவுல இல்லை, உங்களுக்குப் பகல் அப்படின்னா எனக்கு இரவு.. அதனால் நேத்துத் தளம் வேலை செய்யாதது எனக்குத் தெரியாது.. sorry. அதுமட்டும் இல்ல, இன்னொரு சின்ன விஷயம், ஒரு பெர்ஸ்னல் ரீஸனுக்காக நான் ஒரு வாரம் வெளியில் போக வேண்டியதா இருக்கு.. முக நூல் பக்கம் வர முடியுமான்னு தெரியலை.. அதனால் அடுத்த அத்தியாயம் 20/05 அல்லது 22/05 தான் என்னால் போட முடியும்.. கண்டிப்பா என் மேல கோபம் வரும், ஆனால் இது ரொம்ப முக்கியமான விஷயம், அதனால் நான் சென்றே ஆக வேண்டும்.. அடுத்த எபில இருந்து நீங்க ஆவலுடன் எதிர்பார்க்கிற விஷயங்கள் அர்ஜுனுக்கும் திவ்யாவுக்கும் இடையில் நடக்க [...]

Read more...
Jline arts and silks | Buy Tanjore painting online

உதயேந்திர வர்மன்.. Teaser…

“நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு நாண்மீன் விராயக் கோண்மீன் போல, மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக், கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப், பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ, திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர். பொருள்: சூரியனை (உதயன்) சுற்றி வரும் கோள்களைப் போல அவ்வீரனை எதிரிகள் அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர்… ஆனால் கோள்கள் அனைத்துக்குமே தலைவன் என்று பெயர் எடுத்திருக்கும் ஞாயிறாகிய இம்மாவீரன் ஒருவனே, தனது அசாத்திய தீரத்தினாலும், வலிமையினாலும், அபாயகரமான வீரத்தினாலும் அனைவரையும் வென்றுவிடுகின்றான். ********* நகரின் தெருக்களையும் சாலைகளையும் சாரைசாரையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டங்கள் மெல்ல களையத் துவங்க, கோவில்களில் ஏகச்சிறப்புடன் நடந்து கொண்டிருந்த வழிபாடுகளும் முடிவடையும் நேரத்தை நெருங்கவும், நகர்வீதியில் மும்முரமாய்ப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரிகளும் விற்பனைகளை முடித்து, மீதம் [...]

Read more...
New Tamil Novels @ Best Offer now!! All India & International shipping . Cash on delivery within India. Call/Whatsapp: +91-9080991804Check Now..!
Loading...